திட்டத்தின் பெயர் : மகளிர் சக்தி மையம் [Mahila Shakti Kendra Scheme]
நோக்கம் : கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுவதற்கான திட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் “மகளிர் சக்தி மையம்” (Mahila Shakti Kendra Scheme) என்கிற திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தின்படி மாவட்ட மற்றும் மாநிலங்களில் அமைக்கப்பட இருக்கின்ற மையங்களின் உதவியோடு கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்திறனை மேம்படுவதற்கான திட்டம். 2017- 18 ஆண்டுகள் தொடங்கி 2019 -2020 ஆண்டுவரைக்குமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாநிலம் தழுவிய அளவிலும் மத்தியிலும் பெண்களுக்கு தேவைப்படுகின்ற உதவிகள் அனைத்தும் இந்த திட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெறும். அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாணவர் தன்னார்வலர்களை கொண்டு அரசின் திட்டங்கள் முழுமையாக பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு விளக்கப்படும். மாணவ தன்னார்வலர்களின் உதவியோடு பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் இந்த திட்டத்தில், 640 மாவட்டங்களில் மைய்யங்கள் அமைக்கப்படும். 2017 – 2018 ஆண்டில் 220 மாவட்டங்களும் 2018 – 2019 ஆண்டில் 220 மாவட்டங்களும் 2019 – 2020 ஆண்டில் 200 மாவட்டங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்படும்.
இந்த திட்டத்திற்கு ஆகின்ற செலவு தொகையினை மத்திய அரசும் மாநில அரசும் 60 : 40 என்கிற அளவில் கொடுத்திட வேண்டும்.
மேலும் பல அரசின் திட்டங்கள் குறித்து படிக்க கிளிக் செய்திடுங்கள்
அரசு தேர்வுகளுக்கு பயிற்சி செய்ய இலவச தேர்வு எழுதிப்பார்க்க கிளிக் செய்திடுங்கள்
TECH TAMILAN