இந்திரதனுஷ் திட்டம் 2.0 | Indradhanush 2.0

திட்டத்தின் பெயர் : இந்திரதனுஷ் திட்டம் 2.0 | Indradhanush 2.0

திட்டத்தின் முக்கிய நோக்கம் : இந்திரதனுஷ் திட்டம் 2.0 டிசம்பர் 02, 2019 அன்று துவங்கிவைக்கப்பட்டது. இதன் முக்கியமான நோக்கம், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தடுப்பு மருந்துகளை கொடுப்பது தான்.

திட்டத்தின் பெயர் : இந்திரதனுஷ் திட்டம் 2.0 | Indradhanush 2.0

[Source : https://ta.nhp.gov.in/]

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் தடுப்புமருந்தளித்தலின் விரிவுபடுத்தப்பட்டத்  திட்டமாக (EPI) 1978-ல் தடுப்புமருந்தளித்தல் திட்டம் துவங்கப்பட்டது. 1985-ல் இத்திட்டம் அனைவர்க்குமான தடுப்புமருந்தளித்தல் திட்டம் (UIP) என மாற்றி அமைக்கப்பட்டது. 1989-90-ல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் படிப்படியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதே நோக்கம். இது உலகின் மாபெரும் சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும். பல ஆண்டுகளாக இத்திட்டம் நடைமுறையில் இருந்த போதிலும் 65% குழந்தைகளே தங்கள் முதல் வயதுக்குள் தடுப்பு மருந்து அளிக்கப் பெற்றுள்ளனர்.

இந்திரதனுஷ் திட்டம்

இத்திட்டத்தைப் பலப்படுத்தி புத்தாற்றல் பெற வைப்பதற்காகவும் துரிதமாக குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் முழு தடுப்பு மருந்தளித்தலை உறுதி செய்வதற்காகவும் இந்திய அரசு டிசம்பர் 2014-ல் இந்திர தனுஷ் திட்டத்தைத் தொடங்கியது.

இந்திரதனுஷ் திட்டத்தின் இலக்கு

இரண்டு வயதுக்கு உட்பட்டக் குழந்தைகளுக்கும் அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் தேவையான அனைத்துத் தடுப்பு மருந்துகளையும் முழுமையாக அளிப்பதே இந்திர தனுஷ் திட்டத்தின் இறுதியான இலக்காகும். குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து அளிக்கப்படாத அல்லது குறையாகத் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட, நாட்டின் 28 மாநிலங்களில் உள்ள 201 அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய மாவட்டங்கள் அரசால் இனம் காணப்பட்டுள்ளன.

முன்னர் முழுத் தடுப்பு மருந்தளித்தல் ஆண்டுக்கு 1% அதிகரித்தது.  ஆனால் இந்திரதனுஷ் திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களுக்குப் பிறகு இதுவே ஆண்டுக்கு 6.7% ஆக அதிகரித்தது.  ஆகஸ்ட் 2017 வரை இந்திர தனுஷ் திட்டத்தின் நான்கு கட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. 2.53 கோடி குழந்தைகளுக்கும் 68 இலட்சம் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் திட்டம் (IMI)

தடுப்பு மருந்தளித்தல் திட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவதற்காகப் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி அவர்கள் அக்டோபர் 8, 2017-ல் தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், இந்திய அரசு, இரண்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் வழக்கமான தடுப்பு மருந்தளித்தல் திட்டங்களின் கீழ் விடுபட்ட அனைத்துக் கர்ப்பிணிகளையும் சென்றடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. டிசம்பர் 2018-க்குள், தேர்வு செய்யப்படும் மாவட்டங்களில் குறைந்தபட்சம் 90% பேருக்கு முழுத் தடுப்பு மருந்து அளித்துத் தடுப்பு மருந்தளித்தல் பாதுகாப்பை மேம்படுத்துவது இந்தச் சிறப்பு முயற்சியின் நோக்கமாக இருக்கும். இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் 2020 க்குள் 90% மேலாகத் தடுப்பு மருந்தளித்து வெற்றியை ஈட்ட வேண்டும். IMI தொடங்கப்பட்டதன் மூலம் இலக்கை அடையும் முயற்சி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

IMI திட்டத்தின் கீழ், 173 மாவட்டங்களில் (16 மாநிலங்களின் 121 மாவட்டங்கள் மற்றும் 17 மாநகர்கள் மற்றும் 8 வடகிழக்கு மாநிலங்களின் 52 மாவட்டங்கள்) அக்டோபர் 2017-ஜனவரி 2018 வரை ஒவ்வொரு மாதமும் 7 தினங்கள் தடுப்பு மருந்தளிப்பு நடைபெறும். IMI, தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறைவாக தடுப்பு மருந்துஅளிக்கப்பட்ட பகுதிகளிலும் நகர்ப்பகுதிகளிலும் கவனம் செலுத்தும்.  நகரும் மக்கள் தொகை கொண்ட துணை மையங்கள் மற்றும் நகர்ப்புற சேரிகளில் தனிக்கவனம் செலுத்தப்படும். தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தால் இனம் காணப்படும் நகர்ப்புறக் குடி இருப்புகளிலும் கவனம் செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், தடுப்பு மருந்தால் தடுக்கப்படக் கூடிய தொண்டையழற்சி, கக்குவான் இருமல், வில்வாத சன்னி, போலியோ, தட்டம்மை, கடும் குழந்தைப் பருவக் காசநோய் வடிவம், மூளைக்காய்ச்சல், நிமோனியா (குருதியுறையா நச்சுக்காய்ச்சல் பி தொற்று) ஆகிய நோய்களுக்கு இந்திய அரசு இலவசமாகத் தடுப்பு மருந்து அளிக்கிறது.  ஜப்பானிய மூளையழற்சி (JE) இடம்சார் நோயாக இருக்கும் மாவட்டங்களில் ரோட்டா வைரஸ் தடுப்பூசி, IPV, பெரியவர்களுக்கான JE தடுப்பூசி, நியூமோகாக்கல் இணைப்பு தடுப்பூசி (PCV) மற்றும் தட்டம்மை-ரூபெல்லா  (MR)  தடுப்பூசி ஆகியப் புதியத் தடுப்பு மருந்துகளும் இத்திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப்படுகின்றன.