TNPSC Current Affairs November 2019


mAadhaar ஆப் அறிமுகம்

UIDAI அண்மையில் mAadhaar எனும் மொபைல் ஆப்பினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஆப்பானது முந்தைய ஆப்பைவிட பாதுகாப்பானது என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது பல்வேறு சிறப்பம்சங்களையும் இந்த ஆப் கொண்டுள்ளது. 13 இந்திய மொழிகளை இந்த ஆப் சப்போர்ட் செய்கிறது.


மூன்றாம் பாலினத்தவர் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா – 2019

The Transgender(Protection of Rights) Bill 2019 – இந்த மசோதா மக்களவையில் ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 26,2019 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, பிறப்பின் போது வரையறுக்கப்பட்ட பாலினத்திலிருந்து மாறுபட்ட பாலினத்தை அடைபவர்களை மூன்றாம் பாலினத்தவர் [Transgender] என வரையறை செய்கிறது.

மேலும் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம், வாய்ப்பு வழங்குதல் போன்ற எவற்றிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது எனவும் அவர்களுக்கு வாடைக்கு இருப்பது, வீடு அல்லது நிலம் வாங்குவது, அலுவலகம் நடத்துவது என அனைத்திலும் சம உரிமையை வழங்குகிறது.

மூன்றாம் பாலினத்தவரை தவறாகவோ, அவர்களுக்கான உரிமையை மறுக்கும் விதமாகவோ செயல்பட்டால் தண்டனைக்கு உரிய குற்றம் என வரையறை செய்கிறது.


நிலச்சரிவு அபாயங்களை குறைத்தல் மற்றும் எதிர்கொள்ளுதல் மாநாடு

மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 28, 2019 ஆம் தேதி உலக நிலச்சரிவு அபாயங்களை குறைத்தல் மற்றும் எதிர்கொள்ளுதல் மாநாட்டினை நடத்தியது. இதனை தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் நடத்தியது. இந்தக்கூட்டத்தின் முக்கியநோக்கம் நிலச்சரிவு ஏற்படும் போது அதனால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பது மற்றும் அதனை எதிர்கொள்ளுதல் குறித்து உலக அளவிலான அறிஞர்கள் கூடி விவாதிப்பது தான்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் 1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. துவங்கும் போது பெயர் National Centre of Disaster Management (NCDM) இப்படி இருந்தது. 2006 ஆம் ஆண்டு National Institute of Disaster Management (NIDM) இப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் முக்கிய கடமை இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது அதிலிருந்து மீள்வதற்கான ஆலோசனை மற்றும் பயிற்சியை கொடுப்பது.


இலங்கைக்கு இந்தியா நிதி உதவி

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்திட 400 மில்லியன் டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது.

தீவிரவாதத்தை ஒழித்திட 50 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது


ராஜாராம் மோகன்ராய் விருது

இந்தியன் பிரஸ் கவுன்சில் ராஜாராம் மோகன் ராய் விருதினை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பத்ரிகா நிறுவன தலைவர் குலாப் கோத்தாரி க்கு வழங்கியது. பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


சூரிய ஒளி மின் உற்பத்தியின் இலக்கு 1 லட்சம் மெகாவாட்

டிசம்பர் 2022 க்குள் சுமார் 1 லட்சம் மெகாவாட் அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுள்ள சூரிய மின்தகடுகளை அமைக்கவேண்டும் என்பது இலக்கு. அக்டோபர் 2019 வரைக்கும் 31696 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவிலான மின்தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.


தேசிய தொழில்முனைவோர் விருது

2019 ஆம் ஆண்டிற்க்கான தேசிய தொழில்முனைவோர் விருதை [National Entrepreneurship Award] மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் மஹிந்தரநாத் பாண்டே வழங்கினார். இந்த விருதானது, முதல் தலைமுறை தொழில்முனைவோர்களில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்க வழங்கப்படுகிறது.


IIT மெட்ராஸ் – நிற்கும் சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தி உள்ளது

இந்தியாவின் முதல் நிற்கும் விதத்திலான சக்கர நாற்காலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது சென்னை IIT. இதன் பெயர் Arise . இதனை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தவர்சந்த் கெலாட் அறிமுகப்படுத்தினார். உடல் குறைபாடுள்ள நபர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நிற்கும் நிலையிலேயே இந்த நாற்காலி உதவிகொண்டு நகர முடியும். கிட்டத்தட்ட இதன் விலை 15,000 இருக்கும் என கூறப்படுகிறது.


சுனாமி விழிப்புணர்வு தினம்

ஐக்கிய நாடுகள் சபையானது 2015 ஆண்டு முதல் நவம்பர் 05 ஆம் தேதியை உலக சுனாமி தினமாக அறிவித்தது. 2030 ஆம் ஆண்டுக்குள் கடல் ஓரத்தில் வாழுகிற 50% மக்களுக்கு சுனாமி, வெள்ளப்பெருக்கு, சூறாவளி போன்றவற்றால் பாதிக்கப்படலாம். இதிலிருந்து மக்களை மீட்கும் பொருட்டு அதற்கான தொழில்நுட்ப சாதனங்களில் முதலீடு செய்வது, கட்டுமானங்களை ஏற்படுத்துவது, மேலாண்மை கல்வி உள்ளிட்டவற்றை வழங்குவது போன்றவற்றில் அக்கறை செலுத்திட ஊக்குவிக்கிறது.


ATITHI App மற்றும் ICEDASH App அறிமுகம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு ஆப்களை அறிமுகப்படுத்தி உள்ளார். ATITHI App ஆனது வெளிநாடு பயணம் செய்பவர்கள் தங்களது பொருள்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே சுங்கத்துறையிடம் சமர்ப்பிக்கவும் ICEDASH App ஆனது பொதுமக்கள் எளிமையாக பல்வேறு கார்கோ மற்றும் விமான நிலையங்களில் சுங்க அனுமதி கொடுக்கப்படும் தகவல்களையும் எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.


இஸ்ரோவின் நேவிக், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மூலமாக வணிகமயமாக்கப்படுகிறது

இந்தியாவின் நேவிகேஷன் தொழில்நுட்பமான navIC [Navigation with Indian Constellation] ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் மூலமாக வணிகப்பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்படுகிறது. இதற்காக ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் இரண்டு ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. navIC ஐ பயன்படுத்தி தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கிட தகுதி உள்ள நிறுவனங்களை கண்டறிவதே நோக்கம்.


தேசிய சுகாதார புள்ளிவிவரம் 2019 அறிவிப்பு

அக்டோபர் 30, 2019 அன்று தேசிய சுகாதார புள்ளிவிவரம் [National Health Profile (NHP)] மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்தத்தகவல் தான் மக்களுக்கான தேவை என்ன மற்றும் பிரச்சனைகள் என்ன என்பதனை புரிந்துகொள்ள உதவும். நம்முடைய பலம் மற்றும் பலவீனம் என்னவென்பதை புரிந்துகொள்ள முடியும்.