TNPSC CURRENT AFFAIRS January 2020

January 30 – 31

வித்யா பால் – பெண்ணுரிமை போராளி மரணம்

மிக மூத்த பெண்ணுரிமை போராளி மற்றும் எழுத்தாளர் வித்யா பால் இயற்கை எய்தினார் [ஜனவரி 30,2020]. பெண்கள் இந்து மத வழிபாட்டு தலங்களுக்குல் அனுமதிக்கப்படாததை கண்டித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 2016 இல் வழக்கு தொடர்ந்தார். ஷானி சிக்னப்பூர் கோவிலுக்குள் நுழைவதற்கான அனுமதியை பெற்றுத்தந்தவர்.


Economic Survey 2020

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் Economic Survey 2020 ஐ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதன்படி, தற்போதைய நிதி வளர்ச்சி 5% ஆகும். அதேபோல 2021 இல் எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி 6% முதல் 6.5%. தற்போதைய நிதி ஆண்டில் தொழில்துறை வளர்ச்சி 2.5%


Google: Tangi Application

இந்தியாவில் பொய் செய்திகளை தவிர்க்கும் விதமான நடவடிக்கைளை மேற்கொள்ள 1மில்லியன் அமெரிக்க டாலர்களை கூகுள் ஒதுக்கி இருக்கிறது. இதற்காக Tangi அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களுக்கு பயிற்சிகள் கொடுப்பது, இணையத்தில் ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ள பொய் செய்திகளை கண்டறிவது என பல முறைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவில் 7 மொழிகளில் இந்த பயிற்சி கொடுக்கப்படும்.


World Game Athlete of the Year, 2019

2019 ஆம் ஆண்டின் உலக தடகள போட்டியாளருக்கான விருது World Game Athlete of the Year, 2019 இந்தியாவின் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் க்கு வழங்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் இவ்விருதினை பெற்ற முதல் ஹாக்கி வீரர் இவர்தான். இவர் இந்தியாவின் ஹாக்கி ராணி என கொண்டாடப்படுகிறார்.

January 29 


SAMPRITI

SAMPRITI என்பது இந்தியா மற்றும் வங்கதேச ராணுவ வீரர்கள் இணைந்து நடத்துகிற போர் பயிற்சி. பிப்ரவரி 03 முதல் 16 வரை மேகலாயாவில் நடைபெறுகிறது


பட்ஜெட் உருவாக்கம் – அசாம் முதலிடம்

Transparency International அமைப்பு நடத்திய ஆய்வு முடிவின்படி பட்ஜெட் உருவாக்கம் [budget formulation] இல் அசாம் மாநிலம் முதலிடமும் ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கிறது. இதற்கு அளவுகோளாக பட்ஜெட் உருவாக்கம், பொது வெளிப்பாடு, பிந்தைய பட்ஜெட் நிதி மேலாண்மை, மக்களுக்கு நெருக்கமான விதம் போன்றவை இருக்கும்.


World Neglected Tropical Diseases day

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் நாள் புறக்கணிக்கப்பட்ட உலக வெப்பமண்டல நோய்கள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. வெப்பமண்டல நோய்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது,. உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவல்படி புறக்கணிக்கப்பட்ட இந்நோய்களினால் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைவதாக குறிப்பிட்டுள்ளது.


January 28 – 29

ஆபரேஷன் வெண்ணிலா [Operation Vanilla]

இந்திய பெருங்கடலில் இருக்கும் மடகாஸ்கர் பகுதியில் டயான் சூறாவளியால் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நாடு இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதால் ஆபரேஷன் வெண்ணிலா [Operation Vanilla] வை இந்திய கடற்படை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் போர்க்கப்பல் அய்ராவத் குடிநீர் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உதவிகளை செய்யும்.


Bhuvan Panchayat 3.0 launched by ISRO

இஸ்ரோ புவன் பஞ்சாயத் 3.0 எனும் திட்டத்தை துவங்கியுள்ளது. அதன்படி இஸ்ரோ கிராம பஞ்சாயத்துக்களின் நிலையை உயர்த்துவதில் இஸ்ரோ முக்கிய பங்காற்றும். அரசின் திட்டங்களை உருவாக்குவது மற்றும் கண்காணிப்பது போன்றவற்றில் இஸ்ரோ உதவி புரியும்.


Medical Termination of Pregnancy (Amendment) Bill, 2020

கருவை கலைப்பதற்கான கால அளவை நீடிப்பதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 20 வாரம் என இருந்த கால அளவு நீட்டிக்கப்பட்டு 24 வாரம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பு என்பது பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள், ஊனமுற்ற பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.


லாலா லஜபதிராய் பிறந்த தினம் – ஜனவரி 28

பஞ்சாப் சிங்கம், பஞ்சாப் கேசரி என அழைக்கப்பட்ட லாலா லஜபதிராய் அவர்களின் 155 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இவர் ஜனவரி 28,1865 இல் பஞ்சாப்பில் பிறந்தார்.


January 25 – 27

உலகளாவிய உருளைக்கிழங்கு கண்காட்சி [Global Potato Conclave]

உலகளாவிய உருளைக்கிழங்கு கண்காட்சி குஜராத் மாநிலத்தில் ஜனவரி 28 முதல் ஜனவரி 31. பல்வேறுவிதமான உருளைக்கிழங்கு வகைகள், இயந்திரங்கள் மற்றும் நிர்வகிக்கும் முறைகள் குறித்த பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற இருக்கின்றன.


Shiv Bhojan Tali Scheme

நாட்டின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசாங்கம் சிவ் போஜன் தலி எனும் திட்டத்தை துவங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் ஏழை எளியவர்களுக்கு ரூ 10 க்கு உணவு வழங்குவது ஆகும்.


பத்ம விருதுகள் 20 20 அறிவிப்பு

சமூக சேவை, ஆன்மீகம், கலை, மருத்துவம், இலக்கியம், பொறியியல், கல்வி, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபா்களுக்காக ஓவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தமாக 141 பத்ம விருதுகள் வழங்க குடியரசுத்தலைவா் ஒப்புதல் வழங்கியுள்ளாா். இதில் 7 பத்ம விபூஷண் விருதுகளும், 16 பத்ம பூஷண் விருதுகளும், 118 பத்ம ஸ்ரீ விருதுகளும் அடங்கும்.

இதில், தமிழகத்தைச் சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை சேர்ந்த லலிதா, சரோஜா சிதம்பரம், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரா் ஜாஹீா் கான், கால்பந்து வீராங்கனை ஒய்னம் பெம்பெம் தேவி, துப்பாக்கி சுடுதல் வீரா் ஜிது ராய், வில்வித்தை வீரா் தருண்தீப் ராய், ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் உள்ளிட்ட 118 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸ், மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி, மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ், கா்நாடகத்திலுள்ள பெஜாவா் மடத்தின் மறைந்த மடாதிபதி விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த கோவா முன்னாள் முதல்வா் மனோகா் பாரிக்கா், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, தமிழகத்தைச் சோ்ந்த சமூக சேவகா் கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், புதுச்சேரியைச் சோ்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸ் உள்ளிட்ட 16 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Super Fab Lab

இந்தியாவிலேயே முதல்முறையாக Super Fab Lab கேரளாவில் துவங்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்கூடமானது MIT [USA] உடன் இணைந்து இயங்கும். அமெரிக்காவிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள முதல் சோதனைக்கூடம் இதுதான். நிகழ் உலகிற்கும் டிஜிட்டல் உலகிற்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் விதமான ஆய்வுகள் இங்கே நடைபெறும்.


தேசிய வாக்காளர்கள் தினம் – ஜனவரி 25

இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட தினம் ஜனவரி 25, 1950. இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஜனவரி 25 ஆம் நாளும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது.வாக்களிப்பதை ஊக்கப்படுத்துவது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்ற போன்றவை இந்த தினத்தின் முக்கிய விசயங்கள்.


January 24

National Girl Child Day – January 24

தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 அன்று இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இதை துவங்கியது.


“வ்யோம் மித்ரா” விண்வெளிக்கு போகப்போகும் இந்தியாவின் முதல் பெண் ரோபோ | Vyom Mitra

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் பெண் ரோபோ “வ்யோம் மித்ரா” விண்வெளிக்கு அனுப்பப்பட இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் ஒருபகுதியாக இது இருக்கும்.


First E-waste clinic

எலக்ட்ரானிக் கழிவுகளை கையாளுவதற்கான இந்தியாவின் முதல் E-waste clinic மத்தியப்பிரதேசத்தின் போபாலில் துவங்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து பெறப்படும் கழிவுகள் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கழிவுகள் அனைத்தும் இங்கு நிர்வகிக்கப்படும்.


சுபாஷ் சந்திரபோஷ் ஆப்டா பிரபந்தம் புரஸ்கர் விருது

சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் அமைப்பு மற்றும் தனி நபருக்கு சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் விருது வழங்கப்படுகிறது . இம்முறை உத்திரகாண்டின் பேரிடர் மீட்புக்குழு மற்றும் முன்னான் சிங் க்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


January 24 – International Day of Education 

ஜனவரி 24 சர்வதேச கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது . தற்போதைய சூழலில் உலகம் முழுமைக்கும் 258 பில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது.


January 22 – 23

The World Employment and Social Outlook: Trends 2020

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 இல் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2.5 மில்லியன் அதிகரிக்கும் எனவும் தற்போதைய சூழலில் 188 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


கானா – இந்தியா ஒப்பந்தம்

கானா நாடு இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் உஜ்வாலா திட்டம் போன்றதோரு திட்டத்தை தங்களது நாட்டில் நடைமுறைப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்காக கானா – இந்தியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்ற இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது.


சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் – ஜனவரி 23

ஜனவரி 23,2020 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 123 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நேதாஜி ஜனவரி 23, 1897 ஆம் ஆண்டு பிறந்தார்.


Democracy Index – ஜனநாயக அட்டவணை

Economic Intelligence Unit 2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதில் நார்வே முதலிடமும் ஐஸ்லாந்து இரண்டாம் இடமும் சுவீடன் மூன்றாம் இடமும் பிடித்திருக்கிறது. இந்தியா இந்த பட்டியலில் 51 ஆம் இடத்தில் இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 இடங்கள் பின்தங்கி இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


National Startup Advisory Council

உலக வங்கியின் புதிய தொழில்கள் துவங்குவதற்கான நாடுகளின் பட்டியலில் இந்தியா 136 வது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையை உயர்த்துவதற்கு National Startup Advisory Council என்ற அமைப்பு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலின் தலைவராக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பதவி வகிப்பார்.


மூன்று தலைநகரம் – ஆந்திரா

ஆந்திர சட்டப்பேரவையில் மூன்று தலைநகரங்களை அமைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. அமராவதி [legislative capital] விசாகப்பட்டினம் [executive capital] மற்றும் கர்னூல் [judicial capital] இவையே மூன்று தலைநகரங்கள். இந்த நகரங்களை ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி, ராவ் கமிட்டி, சிவராமகிருஷ்ணன் கமிட்டி பரிந்துரைத்தது.



January 21

Carbon Disclosure Project 2019

இந்த ரிப்போர்ட் மூலமாக பல்வேறு நாடுகளில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் எவ்வாறு கார்பன் வெளியீட்டை குறைக்க நடவெடிக்கை மேற்கொண்டுள்ளன என்பதை அறிய முடியும். 2019 க்கான ரிப்போர்ட்டில் 6900 கம்பெனிகள் தகவல்களை அளித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த 135 கம்பெனிகள் தங்களது கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளன, அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடமும் 58 கம்பெனிகளுடன் இந்தியா 5 ஆம் இடம் வகிக்கிறது.


Tiger Sharks – Thanjavur

தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூரில் டைகர் ஷார்க்ஸ் படை சுகோய்-30 எம்கேஐ விமானங்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமைத்தளபதி பிபின் ராவத் இதனை துவங்கி வைத்தார்.


Zomato Acquires Uber Eats

முன்னனி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான சோமட்டோ சக போட்டி நிறுவனமான உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை 2485 கோடிக்கு வாங்கியுள்ளது.


காய்கறி உற்பத்தி

2018 – 19 ஆண்டுகளில் அதிக காய்கறி உற்பத்தி செய்த மாநிலம் என்ற பெருமையை மேற்கு வங்கம் பெற்றுள்ளது. 29.55 மில்லியன் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அதேபோல அதிக பழங்கள் உற்பத்தி செய்ததில் ஆந்திர பிரதேசம் முதலிடம் வகிக்கிறது.


January 20

Delhi Guarantee card

டெல்லி மாநில அரசு “உத்திரவாத அட்டை” ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அட்டை வைத்திருக்கும் டெல்லி மக்களுக்கு – 24/7 மின்சார வசதி, இலவச குடிநீர், குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி, மிகக்குறைந்த செலவில் போக்குவரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் வசதி, சுத்தமான டில்லி, பெண்களுக்கு பாதுகாப்பு, மாற்று குடியிருப்பு போன்ற பல உத்திரவாதங்கள் இதில் இருக்கின்றன.


கரோனா வைரஸ்

சீனாவில் மக்களை பாதிக்க துவங்கி இருக்கிறது கரோனா வைரஸ். கரோனா வைரஸ்கள் லேசான சளியில் தொடங்கி மரணத்தை ஏற்படுத்துவது வரையிலான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். விலங்குகளில் இருந்து மட்டுமே பரவும் என கூறப்பட்டுவந்த சூழலில் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.


இந்தோனேஷியா பேட்மிட்டன் மாஸ்டர்ஸ் 2020

தாய்லாந்து நாட்டின் பேட்மிட்டன் வீராங்கனை ரட்சனோக் இன்டனோன் [Ratchanok Intanon] பட்டம் வென்றார். இவர் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் ஐ வீழ்த்தி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


January 18 – 19

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021

வரப்போகும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 இல் துவங்க இருக்கிறது. இந்த கணக்கெடுப்பில் முதல் முறையாக சில கேள்விகள் கேட்கப்பட இருக்கின்றன. அவை, மூன்றாம் பாலினத்தவரை தலைமையாக கொண்ட குடும்பமா என்ற தகவல் கேட்கப்பட இருக்கிறது. அதேபோல மக்கள் அதிகமாக நுகரும் தானியம் குறித்த தகவல் கேட்கப்பட இருக்கிறது. குறிப்பாக இம்முறை மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்க இருக்கிறது


Seismic Hazard Microzonation

புவி அறிவியல் அமைச்சகம் Seismic Hazard Microzonation எனும் திட்டத்தை இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் செயல்படுத்த உள்ளது. இதன் முதன்மையான நோக்கம், நில அதிர்வு பிரச்சனை எழும்போது அதிக அபாயங்கள் ஏற்படாமல் தடுப்பது தான். இந்த முறையில் நில அதிர்வு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு அம்சங்களை முன்னரே எடுக்கப்படும்.


World Gold Outlook 2020

The World Gold Council (WGC) இன் ரிப்போர்ட் படி இந்தியாவின் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா 625.2 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. அதேபோல வெளிநாடுகளில் இருந்து அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா 6 ஆம் இடம் பிடித்திருக்கிறது. 2019 இல் அதிக தங்கம் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உஸ்பெகிஸ்தான் [16.6 டன்] வெனிசுலா [30.3 டன்].


January 15 – 17

100000 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் குடியேற்றம்

வங்கதேச அரசு 100000 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை பசன் சார் தீவில் [Bhasan Char Island] குடியேற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. பசன் சார் என்பதன் பொருள் மிதக்கும் தீவு. நிலப்பகுதியை விட்டு சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பசன் சார், 20 ஆண்டுகளுக்கு முன்னர் படிந்த வண்டல் மண்ணால் உருவான பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


சத்யோக் கைஜின் கூட்டுப்பயிற்சி

ஜனவரி 16,2020 அன்று ஜப்பான் மற்றும் இந்திய கடற்படை இணைந்து சென்னை வங்காள விரிகுடா கடற்பகுதியில் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டது. இந்த சத்யோக் கைஜின் [sathyog Kaigin] பயிற்சியானது 2006 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது.


‘புரூ’ பழங்குடியினத்தவா்க்கு நிரந்தர குடியுரிமை

மிஸோரமிலிருந்து இடம்பெயா்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக திரிபுராவில் வசித்துவரும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘புரூ’ பழங்குடியினத்தவா்களுக்கு திரிபுராவில் நிரந்தர குடியுரிமையை வழங்கும் ஒப்பந்தம் [Historic Bru-Reang Refugee agreement] உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் வியாழக்கிழமை கையெழுத்தானது.திரிபுரா, மிஸோரம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையே இந்த ஒப்பந்தம் தில்லியில் கையெழுத்தானது. புரூ பழங்குடியினத்தைச் சோ்ந்த ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.4 லட்சம் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்படும். அத்துடன், திரிபுராவில் நிலமும், 2 ஆண்டுகளுக்கு உணவுப் பொருள்களுக்கும் அவா்களுக்கு வழங்கப்படும்.


Globalizing Indian Thought – இந்திய சிந்தனையை உலகமயமாக்குதல்

2025 ஆம் ஆண்டுக்குள் 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இந்தியாவின் இலக்கு. இதுபோன்ற குறிக்கோள்களை அடையும்போது இந்தியா தனது பாதையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இதை அடைவதற்கான ஒரு முயற்சி தான் இந்த அமர்வு. இந்த அமர்வு மூன்று முக்கியமான விசயங்களை கருதுகோள்களாக கொண்டு நடைபெற்றது. உண்மை [truth], திடகாத்திரம் [ sustainability], முழுமை [wholeness] இவை தான் அவை.


சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்  Henley Passport Index launched

சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் எது என்பதற்கான Henley Passport Index வெளியிடப்பட்டது. இதற்காக 199 மாறுபட்ட பாஸ்போர்ட் மற்றும் 227 பயண இடங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. இதன்படி ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் தான் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 191 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இந்தியா இந்த பட்டியலில் 84 ஆம் இடம் வகிக்கிறது.


WEF: Global Risks Report, 2020

உலகில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விசயங்கள் குறித்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளின் பட்டியலில் முதலிடத்தையும் நாடுகளுக்கிடையே இருக்கும் அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார தேக்கநிலை போன்றவை அடுத்தடுத்த முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.


இந்திய ராணுவ தினம் – ஜனவரி 15

ஜனவரி 15,2020 அன்று 72 வது ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றிடும் விதமாக கொண்டாடப்படுகிறது . இந்தியாவின் முதல் ராணுவ ஜெனரலாக 1949 இல் பதவியேற்ற KM காரியப்பா ஜனவரி 14,1953 அன்று ஓய்வு பெற்றார். அந்த நாள் ஆயுதப்படை படைவீரர் தினம் என கொண்டாடப்படுகிறது.


தனியா ஷேர்கில் [Tania SherGill]

இந்திய ராணுவ தின கொண்டாட்டத்தின்போது ஆண்கள் படைப்பிரிவை வழிநடத்தும் முதல் பெண் என்ற பெருமையை பஞ்சாபை சேர்ந்த தனியா ஷேர்கில் பெற்றார். இதற்கு முன்னர் இத்தகைய பெருமையை பாவனா கஸ்தூரி என்பவர் குடியரசு தின விழாவின் போது ஆண்கள் படையை வழிநடத்தி பெற்றார்.


January 13 – 14

பாலி உம்ரிகர் விருது [Polly umrigar award]

2018 – 2019 காலகட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து செயல்பட்டமைக்காக பாலி உம்ரிகர் விருது இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விற்கு வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ரா பெற்றனர். பிசிசிஐ இவ்விருதுகளை வழங்கியது.


IUPAC bureau member – Bipul Behari Saha

வேதியியல் துறையில் மிக உயரிய நிறுவனமாக கருதப்படுகின்ற IUPAC க்கு நிர்வாக உறுப்பினராக பிபுல் பெஹாரி சஹா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது பணிக்காலம் 2020 – 23. 100 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் இவர் தான். முதலாவது, CNR ராவ்


World Future Energy Summit

உலக எதிர்கால ஆற்றல் உச்சி மாநாடு அபுதாபியில் ஜனவரி 13 துவங்கி நான்கு நாட்கள்நடைபெறுகிறது . இந்த மாநாட்டில் ஆற்றல் பயன்பாடு, உருவாக்கம் மற்றும் அதில் செய்யப்படும் முதலீடு குறித்து 170 நாடுகளில் இருந்து வந்திருக்கும் அறிஞர்களால் விவாதிக்கப்படும் .


Michael debabrata – RBI Debuty Governor

மைக்கேல் டெபப்ரதா ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் நான்காவது துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவனர் மூன்று ஆண்டுகள் இந்தப்பணியில் இருப்பார்.


Armed Forces Veterans Day

2017 முதல் ஆயுதப்படை படைவீரர் தினம் ஜனவரி 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. முன்னால் முதல் ஆயுதப்படை தலைமை தளபதி KM கரியப்பா அவர்களின் பணியை போற்றும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இவர் ஜனவரி 14, 1953 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


January 11- 12

AASHVAST – Gandhinagar, Gujarat

இந்தியாவிலேயே முதல் முறையாக சைபர் குற்றங்களை தடுப்பதற்கான முதல் யூனிட் “AASHVAST” குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்தார். இவற்றின் முக்கியப்பணி சைபர் குற்றங்களை கண்காணிப்பது, தடுப்பது.


இன்டர்நெட் – அடிப்படை உரிமை

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி பேச்சுரிமை மற்றும் கருத்து கூறும் உரிமைகளில் இன்டர்நெட் பயன்படுத்தும் உரிமையும் அடங்கும், இன்டர்நெட் கூட அடிப்படை உரிமைகளில் ஒன்று என தீர்ப்பளித்திருக்கிறது. அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள வெளிப்படையான காரணங்கள் தவிர வேறு காரணங்களுக்காக இன்டர்நெட்டை தடை செய்யக்கூடாது. விரிவாக படிக்க


Hormuz Peace Endeavor

ஹார்முஸ் கடல் மார்க்கத்தின் வாயிலாகத்தான் உலகின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் இருந்து பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் இந்த கடல் மார்க்கத்தை பிரச்சனைக்கு உள்ளாவதை தடுப்பதற்கான முயற்சியாக ஹார்முஸ் அமைதி முயற்சி பேச்சவார்த்தை டெஹ்ரானில் நடந்தது. இதில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான்,ஓமன் போன்ற நாடுகள் கலந்துகொண்டன.


கரோனா வைரஸ் – சீனாவில் கண்டுபிடிப்பு

சீனாவின் வுஹான் பகுதியில் கரோனா வைரஸினால் உருவான நிமோனியா காய்ச்சலினால் ஒருவர் பலியானதாக அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் என்பது 1960 களில் மனிதர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அம்மா வோடி திட்டம் ( Amma Vodi Scheme)

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அரசுப்பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்கும் தாய்மார்களுக்கு வருடந்தோறும் ரூ15000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். இதற்காக 6318 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத்தொகை அங்கிருக்கும் 43 லட்சம் தாய்மார்களுக்கு வழங்கப்படும்.


January 10

கர்மயோதா கிராந்த்

மோடி அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்தும் அவரது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் பற்றியுமான தகவல்களை கொண்ட கர்மயோதா கிராந்த் [karmayoddha granth] எனும் புத்தகத்தை அமித்ஷா வெளியிட்டார் .


World Hindi Day

உலக இந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வெளியுறவு தூதரகங்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படும் இதன் நோக்கம் இந்தி மொழியை பரப்புவது.


முப்பவரபு வெங்கையா நாயுடு தேசிய விருதுகள்

பிரபல வேளாண் விஞ்ஞானி MS சுவாமிநாதன் மற்றும் கட்டா முனிரத்னம் இருவரும் முப்பவரபு வெங்கையா நாயுடு தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அறிவியல் துறையில் சிறந்து விளங்கியமைக்காக MS சுவாமிநாதன் அவர்களுக்கும் சமூக சேவையில் சிறந்து பணியாற்றியமைக்காக கட்டா முனிரத்னம் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. பரிசுத்தொகை 5 லட்சம்


International Energy Agency Report

சர்வதேச எரிசக்தி ஏஜென்சி “India’s Energy Policy Report” ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 ஆம் ஆண்டு பாதிக்கு பின்னர் சீனாவை விடவும் இந்தியாவின் ஆயில் தேவை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்ற நிலையினால் இந்தியாவிற்கு பிரச்சனை அதிகரிக்கும். அதிக கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாம் இடம் வகிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021

16 வது இந்திய மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 01,2021 துவங்கி செப்டம்பர் 30,2021 அன்று முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. இந்த முறை பேனா பேப்பர் பயன்படுத்தப்படாமல் முற்றிலும் மொபைல் ஆப் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


January 09


Market Study on E-Commerce in India: Key Findings and Observations

Competition Commission of India ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது . அதன்படி, இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது [2017 இல் 445.96 மில்லியன் , 2019 இல் 665.31 மில்லியன்] எனவும் அதனால் ஆன்லைன் வர்த்தகம் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆன்லைன் வர்த்தகத்துறை 51% வளர்ச்சி கண்டுள்ளது.

Global Economic Prospect

உலக வங்கி உலகளாவிய பொருளாதார வாய்ப்பு தகவலை வெளியிட்டது. இதன்படி உலக பொருளாதார வளர்ச்சி 2.5% அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2008 – 2009 ஆண்டுக்கு 3.1% என கணிக்கப்பட்டிருந்ததே இதுவரை குறைவான கணிப்பாக இருந்தது. தற்போது அதனைவிடவும் குறைவாக கணிக்கப்பட்டுள்ளது.


மீன் வளர்ப்பு – முதல் அறிவியல் சோதனை

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் இந்திய பொம்பனோ மீன் [Indian Pompano fish] வகைகளை குளங்களில் வளர்ப்பதற்கான அறிவியல் முறையை வெளியிட்டுளது. இவை கடல் மீன்வகை என்பது குறிப்பிடத்தக்கது . இறால் வளர்ப்பை காட்டிலும் பொம்பனோ மீன்களை வளர்ப்பது சிறந்தது என கூறுகிறார்கள். முதன் முதலாக புதிய அறிவியல் முறைப்படி விசாகப்பட்டினத்தில் வெற்றிகரமாக மீன்வளர்ப்புசெய்யப்பட்டுள்ளது .


January 08

இந்திய ராணுவம் – ARMY BASE WORKSHOPS ON GOCO MODEL

இந்திய ராணுவம் GOCO Model [Government Owned Contractor Operated] படி வேலை செய்ய துவங்கி இருக்கிறது. GOCO Model என்பது உடைமைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானதாகவும் அதனை நிர்வகிப்பது தனியாராகவும் இருக்கும். தற்போது இந்த முறை பழுது பார்த்தல் [workshops] மற்றும் ராணுவ தளவாட மையம் நிர்வகித்தல் [ordnance depots] வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

workshops என்பது ராணுவ கருவிகளை பழுது பார்ப்பது மற்றும் மாற்று உபகரண பொருள்களை உற்பத்தி செய்வது. அதேபோல ராணுவம் அனைத்து நேரங்களிலும் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதும் ஆகும்.

தனியார் பங்களிப்புடன் வேலைகள் நடப்பதனால் துரிதமாக வேலைகளை முடிக்க முடியும். அதேபோல 25:75 என்ற முறையில் தான் பணியாளர்கள் இருப்பார்கள். 25% ராணுவத்தை சேர்ந்தவர்களாகவும் 75% பிற பணியாளர்களாகவும் இருப்பார்கள்.


ஆதார் அமைப்பு துவங்கி 10 ஆண்டுகள் நிறைவு

ஆதார் அமைப்பு 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மத்திய மின்னணு மற்றும் தகவல் அமைச்சகம் [Ministry of Electronics and Information] தான் ஆதார் வழங்கும் பொறுப்பை கொண்ட அமைப்பு. இந்த திட்டம் துவங்கப்பட்டபோது பிறப்பு உள்ளிட்ட தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் ஆதார் வந்ததற்கு பின்னால் ஒவ்வொருவரின் கைரேகை துவங்கி பல்வேறு தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகும் கூட உலக அளவில் மிகப்பெரிய பயோமெட்ரிக் தகவல் சேமிப்பாக ஆதார் இருக்கும்.


ஆட்டோமேஷன் – உலக வங்கி அறிக்கை

ஆட்டோமேஷன் வருகையினால் வெளிநாட்டு முதலீடு நிலைமை எப்படி இருக்கிறது என்பதனை ஆராய்ந்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வளர்ந்த நாடுகளில் இருந்து ஏழை நாடுகளுக்கு செல்லும் முதலீடு குறைந்துள்ளது. அதேசமயம், ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை இப்போதே ஏற்க துவங்கிய ஏழை நாடுகள் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றன என குறிப்பிட்டுள்ளது உலக வங்கி.


2019 – அதிக வெப்பமான ஆண்டு

இந்திய வானிலை மையம் [International Meteorological Organisation] வெளியிட்டுள்ள State of Climate Report தரவுகளின்படி, 1901 முதல் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு ஏழாவது அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.


January 07 

கோல்டன் குளோப் விருதுகள்

சிறந்த படம் : முதலாம் உலகப்போரை விவரிக்கும் “1917”

சிறந்த இயக்குனர் : சாம் மென்டிஸ் [1917]

சிறந்த நடிகர் : ஜோகுயின் போனிக்ஸ் [ஜோக்கர்]

சிறந்த நடிகை : ரெனி ஜெல்வேக்கர்


Farmers Science Congress | விவசாயிகள் அறிவியல் காங்கிரஸ்

இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாடு நடப்பது வழக்கமான ஒன்றுதான். ஜனவரி 3 ஆம் தேதி இதனை மோடி துவக்கிவைத்தார். இதே நிகழ்வில் முதல் முறையாக Farmers Science Congress [விவசாயிகள் அறிவியல் காங்கிரஸ்] அமர்வு நடத்தப்பட்டது. விவசாயத்தில் புகுத்த வேண்டிய தொழில்நுட்ப விசயங்களை பற்றி விவாதிக்கும்.


Human Space Flight Infrastructure Centre

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிடும் திட்டத்தின் பகுதியாக Human Space Flight Infrastructure Centre ஐ கர்நாடக மாநிலம், சித்திரதுர்கா மாவட்டத்தில் இருக்கும் சல்லாகீரே எனும் இடத்தில் நிறுவ இருக்கிறது. இந்த திட்டத்தின் மதிப்பு 2700 கோடி .


உலக டிரோசோஃபைலா அமர்வு

ஜனவரி 6 முதல் 10 வரைக்கும் உலக டிரோசோஃபைலா அமர்வு [Global Drosophila Conference] புனேவில் நடைபெறுகிறது. டிரோசோஃபைலா என்பது ஒருவகையான பழ ஈ. ஜீன் ஆராய்ச்சியில் இந்த பழ ஈக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே மிகப்பெரிய ஒற்றுமைகள் இருப்பதனால் தான் இவை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் டிரோசோஃபைலா குறித்த ஆராய்ச்சி தகவல்களை அறிவியலாளர்கள் பகிந்துகொள்வார்கள்.


January 04 – 06

5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது உஜாலா திட்டம்

5.1.2015 அன்று துவங்கப்பட்ட இந்த திட்டம் ஜனவரி 5,2020 அன்று 5 ஆண்டுகளை நிறைவு செய்தது Unnat Jyoti by Affordable LEDs for All [UJALA]. இந்த திட்டத்தின் மூலமாக எல்இடி பல்புகளை வழங்குவது மற்றும் சாலை மற்றும் பொது இடங்களில் எல்இடி விளக்குகளை பயன்படுத்துவதன் மூலமாக கரியமில வாயு வெளிப்பாட்டை குறைப்பது மற்றும் ஆற்றலை சேமிப்பதும் ஆகும்.


AK-203 இந்தியா ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி 1 லட்சம் AK-203 துப்பாக்கிகள் இந்தியாவிற்கு வழங்கப்படும் மீதமுள்ள துப்பாக்கிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்.


உர்ஜா கங்கா

எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கிழக்கு இந்தியா மேம்பாட்டுக்காகவும் பிரதமரின் உர்ஜா கங்கா என்று அழைக்கப்படும் 2655 கிமீ நீள ஜகதீஷ்பூர் – ஹால்டியா மற்றும் போகாரோ – தம்ரா தேசிய எரிவாயு குழாய் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் இந்த குழாய் பாதையை பரூனி முதல் குவஹாத்தி வரை 750 கிமீ நீளத்திற்கு விரிவாக்குவதற்கான திட்டத்திற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வடகிழக்கு மண்டலம் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணைக்கப்படும். இந்தத் திட்டம் 2021ல் நிறைவு பெறும்.

மூலதன மானியமாக ரூ.5,176 கோடி (மதிப்பீடு செய்யப்பட்ட மூலதனமான ரூ.12,940 கோடியில் 40 சதவீதம்) அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 850 கோடி கெய்ல் நிறுவனத்திற்கு 2017-18 ஆண்டு வரை விடுவிக்கப்பட்டுள்ளது.

5 மாநிலங்களில் 40 மாவட்டங்களில் எரிசக்தி தேவை நிறைவு செய்யப்படும்.
சிந்திரி, கோரக்பூர், பரோலி ஆகிய 3 பெரிய உரத்தொழிற்சாலைகளுக்கு புத்துயிரூட்டப்படும். இதனால் 20 நகரங்கள் தொழில்மயமாகும். 7 நகரங்களில் எரிவாயு கட்டமைப்பு உருவாகும். இவற்றையடுத்து பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு உருவாகும்.


Antarrashtriya Yoga Diwas Media Samman Award

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் Antarrashtriya Yoga Diwas Media Samman Award [அந்தராஷ்டிரிய யோகா திவாஸ் மீடியா சம்மன்] என்ற விருதினை வழங்க இருக்கிறது. தொலைக்காட்சி, நியூஸ் பேப்பர் போன்ற மீடியாக்களில் யோகாவை சிறந்த முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மீடியா நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும்.


வால்மார்ட் இந்தியா

வால்மார் இந்தியாவின் துணை தலைமை செயல் அதிகாரியாக சமீர் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கார்ல் டக்ளஸ் மேக்மில்லன் ப்ரெசிடெண்ட் ஆக இருக்கிறார்.


ரயில்வே உதவி எண் – 139

இதுவரைக்கும் ரயில்வேயில் பல்வேறு உதவி எண்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒட்டுமொத்த ரயில்வேக்கும் 139 என்ற உதவி எண் வழங்கப்பட்டுள்ளது.


மானவ் தாக்கர்

21 வயதுக்கு உட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மானவ் தாக்கர் உலக அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.


January 03

உலக புத்தக கண்காட்சி – 2020

உலக புத்தக கண்காட்சி 2020, புது தில்லியில் நடைபெற இருக்கிறது. National Book Trust என்ற அமைப்பு இந்த புத்தக கண்காட்சியை நடத்துகிறது. ஜனவரி 4, 2020 முதல் ஜனவரி 12, 2020 வரை கண்காட்சி நடைபெறும். இந்த கண்காட்சியின் கருத்துரு : Theme: Gandhi, the Writers’ Writer


சாவித்திரிபாய் பூலே பிறந்த தினம்

இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியான சாவித்திரிபாய் பூலே ஜனவரி 03, 1831 இல் பிறந்தார். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என கருதப்படுகிறார். இவர்தான் “இந்திய பெண்ணியத்தின் தாய்” [Mother of Indian Feminism] என போற்றப்படுகிறார்.


“Year of Nurse and Midwife” – WHO

மிகவும் புகழ்பெற்ற செவிலியர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் 200 வது பிறந்த ஆண்டை கொண்டாடும் வகையில் உலக சுகாதார அமைப்பு 2020 ஆம் ஆண்டை “Year of Nurse and Midwife” என அறிவித்து இருக்கிறது. போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார். விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார். இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.


Indian Science Congress 

இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டை பெங்களூருவில் துவங்கி வைக்கிறார். ஜனவரி 3 முதல் 7 வரை நடக்கும் இந்த மாநாடு 107 வது மாநாடு ஆகும். இதனுடைய கருத்துரு : Science and Technology: Rural Development [அதாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் : கிராமப்புற மேம்பாடு]


டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி சித்ரா ராஜகோபாலுக்கு அறிவியலாளருக்கான விருது

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 34-வது இந்திய பொறியியல் மாநாடு அண்மையில் நடைபெற்றது. டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் வளங்கள்-மேலாண்மை பொது இயக்குநா் சித்ரா ராஜகோபாலுக்கு பெண் அறிவியலாளருக்கான சுமன் சர்மா விருது, தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனுக்கு சுற்றுச்சூழல் பொறியியலுக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.


January 02

MANI மொபைல் ஆப்

பார்வை குறைபாடுள்ளவர்கள் பண மதிப்பிழப்பிற்கு பிறகு வெளியான புதிய ரூபாய் நோட்டுகளை எளிதில் அடையாளம் காணுவதற்கு உதவும் வகையில் ரிசர்வ் பேங்க் MANI Mobile App ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஆப்பில் புதிய நோட்டுகளை மொபைல் கேமரா வழியாக ஸ்கேன் செய்தால் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒலி வடிவில் ரூபாய் மதிப்பு கூறப்படும்.


Political Parties Registration Tracking Management System (PPRTMS)

தேர்தல் ஆணையம் PPRTMS எனும் ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் தங்களது விண்ணப்பங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். ஆணையம் அவற்றை பரிசீலிக்கும். கட்சிகள் தங்களது விண்ணப்பங்களின் நிலையை ஆன்லைனில் தெரிந்துகொள்ள முடியும்.


5 புதிய DRDO சோதனைக்கூடங்கள்

பிரதமர் மோடி தனது பெங்களூரு பயணத்தின்போது புதிய சோதனைக்கூடங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இவற்றின் முக்கிய நோக்கம் 35 வயதுக்கும் குறைவான இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து அவர்களது ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவது தான்.


January 01 

அணுசக்தி நிலையங்கள் தகவல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது. கடந்த 29 ஆண்டுகளாக இந்த நடைமுறை இருக்கிறது. போர் காலங்களில் இந்த பிராந்தியங்களில் தாக்குதல் நடைபெறுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது.


Railway Protection Force (RPF) பெயர் மாற்றம்

இந்திய ரயில்வே அமைச்சகம் Railway Protection Force (RPF) அமைப்பிற்கு Indian Railway Protection Force Service என பெயர் மாற்றம் செய்துள்ளது. Railway Protection Force Act, 1957 எனும் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது தான் RPF


Krishi Karman விருது ஏன் கொடுக்கப்படுகிறது?

க்ரிஷி கர்மன் விருது வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி செய்து சாதனை புரிந்திடும் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. 2019 இல் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கியமைக்காக தமிழகம் இவ்விருதினை வென்றது குறிப்பிடத்தக்கது.