[easy-notify id=823]
Indian Bridge Management System
> மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் Indian Bridge Management System [IBMS] என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 1,72,517 மேம்பாலங்கள் அனைத்தும் இந்த அமைப்பின் கண்காணிப்பில் வரும்.
> இதன் முக்கிய நோக்கம், பாலங்களை தொடர்ச்சியாக கண்காணிப்பது. அதன் மூலமாக சரியான நேரத்திற்கு பழுது பார்ப்பது, புனரமைப்பு வேலைகளை செய்வது போன்றவற்றை செய்ய முடியும்.
> ஒவ்வொரு பாலத்திற்கும் தனி எண் வழங்கப்படும். எங்கு பாலம் அமைந்திருக்கிறது என்பது போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு சேமிக்கப்படும்.
> அந்த குறிப்பிட்ட பாலம் குறித்த அனைத்து தகவல்களும் கண்காணிக்கப்பட்டு தேவைப்படும் நேரத்தில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
சௌபாக்யா திட்டம் [Saubhagya scheme]
டிசம்பர் 2018 – ற்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கிடும் மத்திய அரசின் திட்டம் தான் “பிரதான் மந்திரி ஷஹாஜ் பிஜ்லி ஹார் கார் யோஜனா மற்றும் சௌபாக்யா திட்டம் [Pradhan Mantri Sahaj Bijli Har Ghar Yojana, Saubhagya scheme]
2019 குடியரசு தினத்திற்குள்ளாக அனைவருக்கும் மின்சார வசதி கொடுக்கப்பட்டு விடும் என கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 01
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தினம் ஜனவரி 01. இந்திய அரசாங்கத்திற்கு பாதுகாப்பு கருவிகளை செய்துகொடுக்கும் அமைப்பு தான் DRDO.
சமக்ரா சிக்ஷா திட்டம் [Samagra Shiksha]
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கல்வியின் தரத்தினை உயர்த்துவது.
ஏற்கனவே இருந்த பின்வரும் மூன்று திட்டங்களை ஒருங்கிணைத்து இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
Sarva Shiksha Abhiyan (SSA),
Rashtriya Madhyamik Shiksha Abhiyan (RMSA)
Teacher Education (TE)
இதன்படி ஆசிரியர்களுக்கு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படும்.
2020 க்கு பிறகு புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது
IIT ஹைதராபாத் சேர்மேன் BVR மோகன் ரெட்டி தலைமையிலான குழு 2020 க்கு பிறகு புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது என AICTE க்கு பரிந்துரை செய்துள்ளது.
குஷி திட்டம் [Khushi Scheme]
> குஷி திட்டம் ஒடிசாவில் செயல்படுத்தப்படுகிறது.
> மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை அளிப்பதே இதன் நோக்கம்.
> முதல்கட்டமாக பள்ளிகளுக்கு செல்லும் இளம் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது.
ICC யின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதினை ஸ்ம்ரிதி மந்தனா பெறுகிறார். இவர் இந்திய அணியை சேர்ந்தவர்.