tnpsc-current-affairs-February -2020


February 13 – 17

இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகளை நியமித்தல்

இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஆண் அதிகாரிகளுக்கு இணையாக உத்தரவுகளை பிறப்பிக்கும் உயர் அதிகாரியாக பணியாற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதன்படி பெண்கள் குறித்த உங்களின் மன நிலை தான் மாற வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், பெண்களின் உடலியல் அம்சங்களுக்கு அவர்களின் உரிமைகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் பெண்களை ராணுவத்தின் உயர் பதவியில் நியமிக்கலாம் என்றும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பெண்களை ராணுவ அதிகாரிகளாக நியமிப்பதற்கு ஏதுவாக 3 மாதத்தில் நிரந்தர கமிஷன் அமைக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அண்டார்டிக்காவில் அதிகபட்ச வெப்பநிலை

WMO அறிக்கையின்படி இதுவரைக்கும் இல்லாதவகையில் முதல் முறையாக அண்டார்டிக்காவில் 20.75 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. UN தகவல்படி 70% நன்னீரை அண்டார்டிக்கா தன்னகத்தே வைத்திருக்கிறது எனவும் இவை உருகினால் கடல் நீர்மட்டம் 50-60 மீட்டர் வரை உயரும் எனவும் கூறப்படுகிறது.


BioAsia 2020

BioAsia 2020 தெலுங்கானாவில் பிப்ரவரி 17 – 19 தேதிகளில் நடைபெறுகிறது. வாழ்வியல் சம்பந்தப்பட்ட அறிவியல் கம்பெனிகள் உதாரணத்திற்கு, மருந்து தயாரிக்கும் நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் போன்றவை தங்களை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு எவ்வாறு மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்.


வாக்களிப்பதில் புதிய முறை

இந்திய தேர்தல் ஆணையம் ஐஐடி சென்னையுடன் இணைந்து வெளியூர்களில் இருப்பவர்கள் தங்களது சொந்த தொகுதிக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே வாக்களிக்க ஏதுவாக தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. BlockChain உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. ஆரம்ப நிலையில் இந்த திட்டம் இருக்கிறது


World Radio Day [உலக வானொலி தினம்]

பிப்ரவரி 13 ஆம் நாள் உலக வானொலி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஐநாவின் யுனெஸ்கோ இதை கொண்டாடுகிறது. இந்த தினத்தில் உலகில் செயல்படும் வானொலிகள் பன்முகத்தன்மையை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.


February 07 to 12

Ground Water Act, 2020 [நிலத்தடி நீர் சட்டம் 2020]

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தில் நிலத்தடி நீர்ச்சட்டம் உத்திரபிரதேச கேபினெட் அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு போர்வெல்லும் பதிவு செய்யப்பட்டிருக்கவேண்டும். தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பு நிறுவப்பட்டிருக்கவேண்டும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.


Bhabha Kavach

பாபா கவாச் என்பது பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் உருவாக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கான கவச உடை. 6.8kg கொண்ட 5 கவச உடை தற்போது CSIF இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மற்ற கவச உடைகளை ஒப்பிடும்போது இது எடை குறைந்த அதேசமயம் பாதுகாப்பான கவச உடையாக பார்க்கப்படுகிறது.


கொரானோவின் புதிய பெயர் COVID-19

உலக சுகாதார அமைப்பு கொரனோ வைரஸ்க்கு COVID-19 என பெயரிட்டுள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்படி இதுவரைக்கும் 42000 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறது.


அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச நாள் – பிப்ரவரி 11

2015 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு பிப்ரவரி 11 ஆம் நாளையும் அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச நாளாக கொண்டாடுகிறது. அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு மற்றும் சாதித்த பெண்களுக்கு அங்கீகாரம் போன்றவற்றை உறுதி பூண்டுள்ளது ஐநா.


Disaster Management Exercise 2020

பேரிடர் மேலாண்மை பயிற்சி 2020 ஒடிசாவின் புவனேஸ்வர் எனும் இடத்தில் பிப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறுகிறது. National Disaster Response Force of Government of India இதனை நடத்துகிறது. ஏற்கனவே இருக்கின்ற வழிமுறைகளை மீண்டும் செய்துபார்ப்பது, அவசர காலங்களில் செயல்படுவது போன்ற பல்வேறு பயிற்சிகள் இதில் இடம்பெறும்.


Public Enterprises Survey

பொதுத்துறை நிறுவனங்கள் மீதான ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி 15.5% சதவிகிதம் லாபம் கூடியிருக்கிறது. இதில் Indian Oil Corporation, NTPC மற்றும் ONGC ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் தந்த நிறுவனங்கள். ஏர் இந்தியா, MTNL ,BSNL ஆகியவை அதிக நஷ்டத்தை தந்த நிறுவனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


February 05 – 06

பதவிநீக்க நடவெடிக்கையில் தப்பித்தார் டிரம்ப்

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தன் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக எதிர்க்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதி திட்டம் தீட்டுவதாகவும், உக்ரைன் அதிபரிடம் பிடனுக்கு எதிராக சதி செய்ய பேரம் பேசியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. செனட் சபையில் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. செனட் சபையில், குடியரசுக்கட்சியினர் பெரும்பான்மை வகிப்பதால், இந்த தீர்மானம் எளிதாக தோற்கடிக்கப்பட்டது. 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது.


பெண்களின் தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி

பெண்களுக்கான தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ராக்கி ஹால்டர் [Rakhi Halder] தங்கப்பதக்கம் வென்றார். கொல்கத்தாவில் நடைபெற்ற 64 கிலோ எடைப்பிரிவில் இவர் பதக்கம் வென்றார்.


Intellectual Property Index

அறிவுசார் சொத்து பட்டியலை அமெரிக்காவின் Global Innovation Policy Centre (GIPC) வெளியிட்டது. அதன்படி 42.66 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்தையும் 16.22 புள்ளிகளுடன் இந்தியா 40 ஆவது இடத்திலும் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா 36 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


ஜனசேவகா திட்டம்

கர்நாடகாவில் ஜனசேவகா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசின் சில சேவைகள் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும். இதற்காக இணையதளம், மொபைல் எண் , ஆப் போன்றவை பகிரப்பட்டுள்ளது. திருமண சான்று, பிறப்பு சான்று, மருத்துவ அட்டை என பல்வேறு சேவைகளை எளிமையாக பெறமுடியும்.


உலக பாரம்பரிய சான்றிதழ் – ஜெய்ப்பூர்

‘பிங்க் சிட்டி’, ‘மதில் சூழ்ந்த நகரம்’ என்று பல்வேறு சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படும் ஜெய்ப்பூர் நகரம் உலகப் பாரம்பரிய இடமாக ஜூலை 6 அன்று யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனை, கோட்டை, தனித்துவமான கட்டிடங்கள், அந்நகரின் கலாச்சாரம், நகர மக்களின் விருந்தோம்பல் ஆகியவை உலகப் புகழ்பெற்றவை. இவ்விருது பிப்ரவரி 05 அன்று வழங்கப்பட்டது.


Defence Expo 2020

DefExpo 2020 [பாதுகாப்பு உபகாரங்களின் கண்காட்சி] உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் துவங்கியது. பிரதமர் மோடி பிப்ரவரி 05 அன்று இதனை துவங்கி வைத்தார். இதில் 50,000 கோடி முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படும் மதிப்புள்ள 23 ஒப்பந்தங்கள் உத்திரப்பிரதேச அரசுடன் மேற்கொள்ளப்பட்டது. Read more 



February 3-4

கிராம நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை

கிராம் நியாயாலயச் சட்டம், 2008 [Gram Nyayalayas act, 2008] ஆனது இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் நீதி விவகாரங்கள் விரைவாகவும் எளிதாக கிடைப்பதற்கும் கிராம நியாயாலம் அல்லது கிராம நீதிமன்றங்களை நிறுவுவதற்கு இந்தியாவின் பாராளுமன்ற சட்டம் மூலம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அக்டோபர் 2, 2009 முதல் நடைமுறைக்கு வந்தது.


Pradhan Mantri Matru Vandhana Yojana (PMMVY) awards

பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா விருது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. மிகச்சிறப்பாக செயல்பட்ட மத்திய பிரதேசம் முதலிடத்தையும் ஆந்திரா இரண்டாம் இடத்தையும் பெற்றது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தில் சராசரியாக ஒரு பெண்ணுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும்


ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி

ஆடவருக்கான Australian Open Title of 2020 ஐ செர்பியன் வீரர் நோவாக் ஜோகோவிச் வென்றார். இது இவருக்கு எட்டாவது முறை. நயோமி ஒசாகா பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றார்.


புற்றுநோய் தினம் : பிப்ரவரி 4

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஒன்றியம் பிப்ரவரி 4 ஐ புற்றுநோய் தினமாக [World Cancer Day] அனுசரிக்கிறது. 2019-2021 ஆண்டுக்கான கருதுபொருள் [theme] – I am I will


February 1- 2


பட்ஜெட் 2020

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ 99,300 கோடி ரூபாயை கல்விக்காக ஒதுக்கியுள்ளார். ஸ்கில் டெவலப்மென்ட் க்காக 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல விவசாயத்துறைக்கு 2.83 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.


Clean Air Project

சுத்தமான காற்றை கொடுப்பதற்கான திட்டங்கள் நாட்டின் நான்கு நகரங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. உத்திரபிரதேசத்தில் லக்னோ மற்றும் கான்பூர், மகாராஷ்டிராவில் புனே மற்றும் நாசிக். CAP India என்றும் இதனை அழைக்கிறார்கள்.


34 வது சூரஜ்குண்ட் மேளா

சூரஜ்குண்டு மேளா என்பது கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் விழாவாகும். இந்த திருவிழா இந்திய மாநிலமான அரியானாவிலுள்ள சூரஜ்குண்டு என்ற இடத்தில் நடைபெறும். 2004 ஆம் ஆண்டு தமிழகத்தை முன்னிறுத்தி இவ்விழா நடைபெற்றது. இந்த ஆண்டு இமாச்சல பிரதேசத்தை முன்னிறுத்தி நடைபெறுகிறது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதை துவங்கி வைத்தார்.


கின்னஸ் சாதனை

அதிக உயரத்தில் ஆடை அலங்கார அணிவகுப்பு [fashion show] நடத்தி நேபாளம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நேபாளத்தை பார்க்க வாருங்கள் 2020 திட்டத்தின் ஒரு அங்கம் இந்த கின்னஸ் சாதனை என கூறப்படுகிறது.


அட்லாண்டிக் கடலை கடந்து சாதனை

60 வயதான மருந்தக தொழிலாளி மோ ஓ பிரையன் [Mo O’brien] அட்லான்டிக் கடலை கடந்து சாதனை படைத்திருக்கிறார். காது கேளாத ஒருவர் அட்லாண்டிக் கடலை கடந்தது இதுவே முதல் முறை. இவர் அந்த சாதனையை படைத்திருக்கிறார்.