December 30 – 31
World Economic League Table 2020
பிரிட்டனில் இருக்கும் Center for Economics and Business Research என்ற அமைப்பு வெளியிட்ட தகவலின் அடிப்படையில், மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் 2026 இல் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி நான்காம் இடத்திற்கும் 2034 இல் ஜப்பானை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திற்கும் இந்தியா முன்னேறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் முதல்வர் – ஹேமந்த் சோரன்
அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்று ஜார்கண்டின் 11 வது முதல்வராக பதவியேற்றார்.
Indian Science Congress
இந்தியாவின் 107 வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டினை பெங்களூரு வேளாண் அறிவியல் கல்லூரி நடத்துகிறது. இதனை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இதற்காக ISC 2020 UASB எனும் மொபைல் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.
Khelo India Youth Games
கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் அசாம் மாநிலம், ஹௌகாத்தியில் நடைபெறுகிறது. ஜனவரி 10 முதல் இந்த போட்டிகள் துவங்குகின்றன. இதற்கிடையே குடியுரிமை போராட்டங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
eBkray – இணையதளம் துவக்கம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் eBkray எனும் இணையதளத்தை துவங்கி வைத்தார். வங்கிகள் கையகப்படுத்தும் சொத்துகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் ஆன்லைனில் ஏலம் விடுவதற்காக இந்த இணையதளம் பயன்படும். யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட சொத்து குறித்த தகவல்களை பெற முடியும்.
December 27 – 29
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்க்கு இந்தியாவில் தடை இருக்கிறது. ஆனாலும் அதையும் மீறி ஹரியானாவில் சில இடங்களில் பயிர்ப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. Cry1Ac எனும் மரபணுவை செலுத்தி உருவாக்கப்படுவது தான் மரபணு மாற்ற கத்தரிக்காய் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலி – தோனி
Cricket Australia வின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கடந்த பத்தாண்டுகளில், டெஸ்ட் அணிக்கான கேப்டனாக கோலி , ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக தோனியையும் அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது.
ஹரிவராசனம் விருது 2020
கேரளா அரசால் வழங்கப்படும் ஹரிவராசனம் விருதுக்கு இசைஞானி இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இசைத்துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்படுகிறது.
What is Sounding Rocket?
சவுண்டிங் ராக்கெட் என்பது ஆராய்ச்சிகளுக்காக ஏவப்படும் ராக்கெட். இதன்படி டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிஸீவர்களுடன் பறக்கும் ராக்கெட் உயரத்தில் பறக்கும் போது சூரியன், கதிர்வீச்சு, பூமியின் வளிமண்டலம் போன்றவை குறித்து பல்வேறு தகவல்களை ஸ்டேஷனுக்கு அனுப்பும். வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ராக்கெட் பறந்தாலும் பல்வேறு தகவல்கள் கிடைத்துவிடும். விக்ரம் சாராபாய் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ரோகினி 200 சவுண்டிங் ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.
MyGov Mobile Application
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட MyGov ஆப்பானது பொதுமக்கள் நேரடியாக தங்களது விருப்பங்களையும் ஆலோசனைகளையும் அரசிடம் நேரடியாக தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டது . தற்போது இந்த ஆப்பில் ஒரு கோடி பேர் ரெஜிஸ்டர் செய்துள்ளனர்.
Long March-5 – சீனாவின் சக்தி வாய்ந்த ராக்கெட்
சீனாவின் அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய லாங் மார்ச் 5 ராக்கெட் மூலமாக ஷிஜியான் – 20 என்ற செயற்கைகோள் ஏவப்பட்டது. தற்போது இந்த ராக்கெட் ஏவப்பட்டிருப்பது செவ்வாய் கிரக பயணத்திற்கு முதல் படியாக இருக்கும் என கூறப்படுகிறது.
December 26
மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பல்கலைக்கழகம்
மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பல்கலைக்கழகம் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் குஷிநகர் மாவட்டத்தில் அமையவிருக்கிறது. ட்ரான்ஸ்ஜெண்டர் பிரிவினர் இங்கு முத்ல் வகுப்பு முதல் கல்லூரி மேற்படிப்பு வரை படிக்க முடியும். ஆராய்ச்சி படிப்புகளைக்கூட மேற்கொள்ள முடியும். இந்த பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம்Akhil Bhartiya Kinnar Siksha Seva Trust (All-India transgender education service trust) என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆல் இந்தியா ரேடியோ – டிஜிட்டல் வடிவில் 2024 முதல்
ஆல் இந்தியா ரேடியோ வருடாந்திர விருது வழங்கும் விழாவில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆல் இந்தியா ரேடியோ 2024 இல் டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புவதற்கான திட்டத்தை துவங்கி வைத்தார். ஆல் இந்தியா ரேடியோ அதிகாரபூர்வமாக ஆகாசவாணி என்று அழைக்கப்படுகிறது.
ஷஹீத் உத்தம் சிங் பிறந்த தினம் – டிசம்பர் 26
உதம்சிங் (Shaheed Udham Singh 26 டிசம்பர் 1899 – 31 ஜூலை 1940) ஒரு இந்திய புரட்சியாளர். ஜலியான்வாலாபாக் படுகொலைக்குக் காரணமான துணை ஆளுநர் மைக்கேல் ஓ டையர் என்பவரை நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக்கொன்றவர்.
Good Governance Index
Good Governance Index [ நல்ல ஆட்சிக்கான அட்டவணை] மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடம் பிடித்து இருக்கிறது.
மகாராஷ்டிரா இரண்டாவது இடமும் கர்நாடகா மூன்றாவது இடமும் பிடித்து இருக்கின்றன.
December 25
அடல் பூஜல் [Atal Bhujal] திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் திட்டமான அடல் பூஜல் (ATAL JAL) திட்டத்தை ரூ.6,000 கோடி மதிப்பீட்டில், ஐந்தாண்டுக் காலத்தில் (2020-21 முதல் 2024-25 வரை) செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில், முன்னுரிமை அடிப்படையில் சமுதாயப் பங்களிப்புடன் கூடிய நிலத்தடி நீர்மேலாண்மை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த இத்திட்டம் வகை செய்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இம்மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களுக்கு உட்பட்ட சுமார் 8,350 கிராமப் பஞ்சாயத்துகள் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
திவால் மற்றும் நொடித்துப் போதல் (திருத்த) அவசரச் சட்டம் 2019-ஐ பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திவால் மற்றும் நொடித்துப் போதல் விதிமுறைகள் 2016-ல் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம் திவால் மற்றும் நொடித்துப் போதல் விதிமுறைகள் 2016-ல் இடம்பெற்றுள்ள தெளிவற்ற தன்மையைப் போக்கவும், இந்த விதிமுறைகள் சுமூகமாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் வழிவகை ஏற்படும். இந்த திருத்தத்தின்படி, கடன் சுமைக்கு ஆளான பெரும் தொழில் நிறுவனம், திவால் நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன்பு இழைத்த குற்றங்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுவதோடு, அந்த கடன்தாரர் மீது குற்றவழக்கு தொடரப்பட மாட்டாது.
ரோத்தங் கணவாய்க்கு அடல் பிஹாரி வாஜ்பேயின் பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயின் பங்களிப்புகளுக்காக, அவரை கவுரவப்படுத்தும் விதமாக, ரோத்தங் கணவாய்க்கு கீழே அமைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதைக்கு அவரது பிறந்த நாளான 2019 டிசம்பர் 25 ஆம் தேதியன்று அவரது பெயரை சூட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காலஞ்சென்ற அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, ஜூன் 3, 2000 அன்று ரோத்தங் கணவாய்க்கு கீழே, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சுரங்கப்பாதை அமைப்பது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையின் தென்பகுதி அணுகுசாலை அமைக்க 26 மே 2002 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
8.8 கிலோமீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீளமான இந்த சுரங்கப்பாதை, கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை, மணாலியிலிருந்து லே வரையிலான தூரத்தை 46 கிலோமீட்டர் அளவுக்கு குறைப்பதோடு, பல கோடி ரூபாய் போக்குவரத்து செலவுகளை குறைக்கவும் வகை செய்கிறது. 10.5 மீட்டர் அகலமுள்ள ஒற்றை குழாய் வடிவிலான இருவழி சுரங்கப்பாதை, தீவிபத்து ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புப் படைத் தலைவர் [CDS]
பிரதமர் தலைமையிலான Cabinet Committee On Security (CCS) அமைப்பு புதிய பதவியான “பாதுகாப்புப் படைத் தலைவர் [CDS – Chief of Defence Staff]” ஐ உருவாக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவர் முப்படைகளுக்கும் தலைவராக இருப்பார்.
மருந்துகளை உருவாக்கப்போகும் CSIR
Council of Scientific and Industrial Research (CSIR) மற்றும் Central Drug Research Institute (CDRI) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி CSIR இனி மருந்துகளை [drugs] உற்பத்தி செய்யும். repurposing of drugs என்பது மிகவும் எளிமையாகவும் வேகமாகவும் தயாரிக்கப்படும் மருந்து வகைகள்.
December 24
Turbulance adn Triumph – The Modi Years
நரேந்திர மோடியின் வாழ்க்கை பயணத்தை அடிப்படையாகக்கொண்ட “Turbulance adn Triumph – The Modi Years” எனும் புத்தகத்தை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இந்த புத்தகத்தை ராகுல் அகர்வால் மற்றும் பார்தி எஸ் பிரதான் ஆகிய இருவர் எழுதி இருக்கிறார்கள். Om Books International பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
DNA சோதனை மையம்
திரு நிதியானந்த் ராய் [Minister of State for Home Affairs] சண்டிகரில் இந்த மையத்தை தொடங்கி வைத்தார். நிர்பயா நிதி மூலமாக இந்த மையம் துவங்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை பிரிவு, DNA சோதனை, மனித அடையாள பிரிவு, மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ பிரிவு என்பன இருக்கின்றன. இவற்றை அனைத்து மாநிலங்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஹர்ஷ் வரதன் சிரிங்லா – வெளியுறவுத்துறை செயலர்
1984 IFS பிரிவை சேர்ந்த ஹர்ஷ் வரதன் சிரிங்லா வெளியுறவுத்துறை செயலர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவின் 33 ஆவது வெளியுறவுத்துறை செயலர் ஆவார். இவர் தற்போது அமெரிக்காவிற்க்கான இந்திய தூதராக இருக்கிறார்.
Oxygen Parlour at Nashik Railway Station
மஹாராஷ்டிராவில் இருக்கும் நாசிக் ரயில்வே ரயில் நிலையத்தில் ஆக்சிஜன் பார்லர் உருவாக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிலையத்திற்கு வருகிறவர்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க இந்த ஏற்பாடு புதியதாக செய்யப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே மற்றும் Airo Guard என்ற அமைப்பு இணைந்து இந்த நிலையத்தை உருவாக்கி இருக்கிறது. NASA ஆராய்ச்சியின்படி, காற்றில் இருக்கும் மிகக்கொடிய 5 மூலக்கூறுகளை உறிஞ்சக்கூடிய செடிகளை பரிந்துரைத்தது. அவை தான் அங்கே நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
December 22 – 23
அசாம் மாநில மொழியானது – அசாமி
அசாம் கேபினெட் அமைச்சரவை அசாமி மொழியை மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதிலிருந்து பாரக் பள்ளத்தாக்கு மற்றும் மலைவாழிடங்களுக்கு விலக்கு தரப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் போடோ மற்றும் அசாமி அதிகாரபூர்வ மொழியாக இருக்கிறது.
National Farmers Day – 23rd December
டிசம்பர் 23 ஆம் நாளை தேசிய உழவர் தினமாக கொண்டாடுகிறது இந்தியா. இந்தியாவில் இருக்கும் உழவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்க்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்த இந்தியாவின் 5 வது பிரதமர் சௌத்திரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் உழவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
IPL போட்டியில் அதிக ஏலம் போன வீரர்
பேட் கம்மின்ஸ் அண்மையில் நடந்த IPL போட்டியில் அதிக ஏலம் போன வீரர். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 26 வயதான கம்மின்ஸ் தான் டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் பந்து வீச்சாளர்.
விண்வெளி ராணுவம் – அமெரிக்கா
உலகிலேயே முதன் முறையாக விண்வெளிக்கென்று ஒரு தனி ராணுவத்தை [Space Force] உருவாக்கி இருக்கிறது அமெரிக்கா. தற்சமயம் 16,000 வீரர்கள் மற்றும் பணியாளர்களை கொண்டிருக்கிறது இந்த அமைப்பு.
December 21
எத்தியோப்பியா முதல் செயற்கைகோள்
எத்தியோப்பியா நாடு தனது முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்திருக்கிறது. சீன மற்றும் எத்தியோப்பிய பொறியியல் வல்லுனர்களின் கூட்டு முயற்சியில் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக இது அனுப்பப்பட்டுள்ளது.
சாய்க்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம்
தோகாவில் நடைபெறும் கத்தார் சர்வதேச கோப்பை 2019 போட்டியில் 49கிலோ பிரிவில் இந்தியாவின் சாய்க்கோம் மீராபாய் சானு [Saikhom Meerabhai CHanu] தங்கப்பதக்கம் வென்றார். இவர் மணிப்பூரை சேர்ந்தவர்.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தலைவர்
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் [General Insurance Corporation Of India] தலைவராக திரு தேவேஷ் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
December 20
புதிய நட்சத்திரம் – சார்ஜா
இன்டர்நெஷனல் அஸ்ட்ரோனாமிகள் யூனியன் [International Astronomical Union] புதியதாக கண்டறியப்பட்ட நட்சத்திரம் ஒன்றுக்கு “சார்ஜா” [sharjah] என பெயரிட்டுள்ளது. இந்த நட்சத்திரம் சார்ந்த கோளின் பெயர் பர்ஜில் [barjeel]. இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கிறது.
Gandhi Citizenship Education Prize
போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இவ்விருது தங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். காந்தி அவர்களின் பல்வேறு சிந்தனைகளை மையப்படுத்தி இவ்விருது வழங்கப்படும். இந்த ஆண்டின் கருத்துரு “விலங்குகள் நலன்” [animal welfare]. ஒரு நாட்டின் புகழ் அந்த நாட்டில் விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பதை பொறுத்தது என கூறியிருந்தார்.
December 19
INDIA GREEN ENERGY AWARD
சிறந்த புதுப்பிக்கதக்க ஆற்றல் உற்பத்தி செய்திடும் நிறுவனங்கள் பிரிவில் திருச்சி பெல் நிறுவனம் “Green Energy Award” விருதினை வென்றுள்ளது. 7.5 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய போட்டோ வோல்டாயிக் பிளான்ட் இங்கு செயல்படுகிறது.
சாகித்ய அகாதமி விருது – சசி தரூர்
எழுத்தாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தன்னுடைய An Era of Darkness : The British Empire In India புத்தகத்திற்காக சாகித்ய அகாதமி விருதிற்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
குல்தீப் யாதவ் சாதனை
இரண்டாவது முறையாக ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்த முதலாவது இந்தியர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் [Kuldeep Yadav] படைத்தார்.
நவீன் பட்நாயக் – ஜலசதி
ஒடிசா மாநில மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்கின்ற திட்டம் “ஜலசதி Jalasathi” முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.
December 18
அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரை வெளியீடு
அறிவியல் மற்றும் பொறியியல் கட்டுரைகளை [Science and Engineering Articles] அதிகப்படியாக வெளியிட்ட நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் நேஷனல் சயின்ஸ் பவுண்டேசன் [National Science Foundation] வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறது.
ஒட்டுமொத்த உலகில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரைகளில்,
20.67% ஐ வெளியிட்டு சீனா முதலிடம் பிடித்து இருக்கிறது.
16.54% ஐ வெளியிட்டு அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறது.
5.31% ஐ வெளியிட்டு இந்தியா மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறது.
USIBC Board Chairman
USIBC என்பது அமெரிக்கா இந்தியா பிசினஸ் கவுன்சில் [US India Business Council]. இந்த அமைப்பின் சேர்மனாக மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் முக்கிய பணி, முதலீட்டை அதிகப்படுத்தி இந்தியா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்துவது ஆகும்.
அமிதபா பக்ஷி – DSC பரிசு
தெற்கு ஆசிய இலக்கியம் 2019 க்கான DSC விருதினை அமிதபா பக்ஷியின் Half the Night is Gone”என்ற நாவல் வென்று இருக்கிறது. இதற்க்கு பரிசாக $25,000 வழங்கப்பட்டது.
National Broadband Mission
மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் National Broadband Mission எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் நோக்கம் இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டுமானத்தை மேம்படுத்துவது, அதன் தொடர்ச்சியாக 2022 க்குள் கிராமத்திற்கும் சிறந்த பிராண்ட்பேண்ட் சேவையினை வழங்குவதும் ஆகும்.
International Migrants Day – டிசம்பர் 18
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் டிசம்பர் 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த பணியாட்கள் உரிமைகளையும் அவர்களது குடும்பத்தாரின் உரிமைகளையும் காப்பது என உறுதி ஏற்பதே இந்த நாளின் நோக்கம்.
December 17
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) ரஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இதற்கான சோதனை ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் டிசம்பர் 17 அன்று நடந்தது, வெற்றிகரமாக சோதனை நடைபெற்றது. நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், போர் விமானங்கள் அல்லது நிலத்திலிருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும்.
India – Germany loan agreement
குறைந்த ஆற்றலை பயன்படுத்தும் வீடுகளை [energy-efficient housing programme] அமைப்பதற்கான திட்டத்திற்கு ரூ 1,958 கோடியை அளிக்க லோனாக தருவதற்கு ஜெர்மனி ஒப்புக்கொண்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஜெர்மனி டெவலப்மென்ட் பேங்க் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. energy-efficient housing programme என்பது தற்போது இருக்கும் வீடுகளுக்கு செலவிடப்படும் ஆற்றலை விட குறைவான அளவிலான ஆற்றலை பயன்படுத்தும் விதமான வீடுகளை அமைப்பது ஆகும்.
சர்வதேச அகதிகள் மாநாடு
முதல் சர்வதேச அகதிகள் மாநாடு டிசம்பர் 17 – 18 ஆகிய தேதிகளில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறுகிறது. நாடுகள் தங்களது பொறுப்புகளை சமமாக பகிர்வது, அகதிகளின் தன்னம்பிக்கையை மேம்படுத்துவது, நிரந்தர தீர்வுகளை வழங்குதல், பாதுகாப்பான முறையில் திருப்பி அனுப்புவதற்கு ஏதுவாக ஒத்துழைப்பு வழங்குதல் போன்றவை பிரதானமான விசயமாக கருதப்படும்.
காற்றை சுத்தப்படுத்தும் கோபுரங்கள்
குரின் கிளீனர் எனும் நிறுவனம் டெல்லி (கன்னாட் பிளேஸ்) எனும் இடத்தில் காற்றை சுத்தப்படுத்தும் கோபுரம் ஒன்றை அமைத்து வருகிறது. இந்தப்பணிகளை துரிதப்படுத்தி மூன்று மாதத்தில் முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு டெல்லியின் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
December 16
Miss World 2019 – Toni-Ann Singh
உலக அழகி 2019 (Miss World 2019 )போட்டியில் உலக அழகியாக ஜமைக்காவின் டோனி ஆன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 23. இந்தியாவைச் சேர்ந்த சுமன்ராவ் 3 வது இடத்தை பிடித்தார்.
International Tea Day
2005 முதல் சர்வதேச டீ தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு இந்தியா ஐக்கிய நாடுகளின் சபையில் வைத்த கோரிக்கையை ஏற்று மே 21 ஆம் தேதி சர்வதேச டீ தினமாக கொண்டாடப்படுகிறது. மே மாதத்தில் தான் தரமான டீ பெரும்பான்மையான நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியா, நேபால், ஸ்ரீலங்கா, வங்கதேசம், இந்தோனீசியா, வியட்னாம், கென்யா, உகாண்டா, மலேசியா போன்ற நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
December 12 – 15
NADA ambassador Suniel Shetty
தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் [National Anti-Doping Agency] தூதராக பிரபல நடிகர் சுனில் செட்டி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுகளில் ஊக்கமருந்து பயன்படுத்தப்படுவதனை தடுப்பது, விழிப்புணர்வினை ஏற்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய பணிகள்.
Climate Change Performance Index
57 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இவற்றின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பங்கு, ஏற்படுத்தும் மாசு மற்றும் விதிகள் இவற்றை அடிப்படையாகக்கொண்டு CCPI Index வெளியிடப்படுகிறது. டிசம்பர் 10,2019 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 9 ஆம் இடம் பிடித்திருக்கிறது.
Anti-Maritime Bill
டிசம்பர் 10,2019 அன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் Anti-Maritime மசோதாவினை லோக்சபாவில் தாக்கல் செய்தார். கடல்சார் வணிகம் மற்றும் பணியாட்கள் இவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதே நோக்கம். கடலில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கமுடியும்.
International Mountains Day
ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் தேதி சர்வதேச மலைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2003 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தை கொண்டாடுகிறது .
Theme: Mountains matter for youth
International Universal Health Coverage Day
உலக சுகாதார அமைப்பு டிசம்பர் 12 ஐ சர்வதேச உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நாளாக அனுசரிக்கிறது.
http://www.indianculture.gov.in
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் இந்த இணையதளத்தை துவங்கிவைத்தார். இந்திய கலாச்சாரம் சார்ந்த அனைத்து தகவல்களையும் ஒரே தளத்தில் வைத்திருக்கவே இந்த ஏற்பாடு. பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதி இது.
Memorandum of Understanding
இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே மருத்துவ பொருள்கள் விதிமுறைகள் சார்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது (MoU between India, Saudi Arabia in medical products regulation MoneyControl). இந்த ஒப்பந்தத்தின் மூலமாக மருந்துப்பொருள்களை கூடுதலாக இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும்.
Person of the Year – TIMES
பருவநிலை மாற்றம் தொடர்பாக கண்டுகொள்ளாத நாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் சூழலியல் விரும்பி கிரேட்டா தன்பெர்க் “இந்த ஆண்டின் நபர்” என்ற புகழாரத்தை கொடுத்துள்ளது டைம்ஸ்.
FICCI (Federation of Indian Chambers of Commerce & Industry) awards
டிசம்பர் 11 அன்று FICCI விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பங்குதாரர்களை அங்கீகரிக்க இவ்விருது வழங்கப்படுகிறது.
சிறந்த விளையாட்டு வீராங்கனை – ராணி ராம்பால்
சிறந்த விளையாட்டு வீரர் – சவுரப் சவுத்ரி
Andhra Pradesh Cabinet clears Disha Bill
ஆந்திர கேபினெட் அமைச்சரவை பெண்களுக்கு தொந்தரவு அளிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கக்கூடிய திசா மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளது. 21 நாட்களுக்குள் தண்டனை கொடுக்கும் விரைவு நீதிமன்றங்களை அமைப்பது, மரண தண்டனை வரையிலான கடும் தண்டனைகளை கொடுப்பது என பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன.
Chief of Indian Oil Corporation
பப்ளிக் என்டர்பிரைசஸ் செலக்சன் போர்டு திரு ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா அவர்களை இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனின் சேர்மனாக தெரிவு செய்துள்ளது.
Powerful Women – Forbes Magazine
அதிகாரம் வாய்ந்த பெண்களின் பட்டியலை போர்பஸ் வெளியிட்டுள்ளது. இதில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்து இருக்கிறார். நிர்மலா சீதாராமன் 34 ஆம் இடத்தையும் இங்கிலாந்து ராணி எலிசபெத் 40 ஆம் இடத்தையும் பிடித்திருக்கின்றனர்
New ranking system for Hockey
2020 முதல் புதிய முறையிலான ஹாக்கி ரேங்கிங் வெளியிடப்படும் என சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (International Hockey Federation) அறிவித்து இருக்கிறது. புதிய முறைப்படி ஒவ்வொரு ஆட்டமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், முன்னர் டோர்னமெண்ட் முறையில் ரேங்கிங் கணக்கிடப்பட்டது.
Haryana Police use Trakea – New Bar Code System
கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறும் இடங்களில் பெறப்படும் ஆதார மாதிரிகள் பயோ டெக்னாலஜி நிபுணர்களிடம் சோதனைக்கு கொடுக்கப்படும். அப்படி கொடுக்கப்படும் போது வழக்கு யாருடையது என்பது அவர்களுக்கு தெரிந்துவிடும். அதனை தவிர்க்க எனும் Trakea பார் கோடு முறையில் வழக்கு அவர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். இதனால் அவர்களுக்கு வழக்கு யார் சம்பந்தப்பட்டது என தெரிய வாய்ப்பில்லை.
December 11
BioAsia 2020
தெலுங்கானா மாநில அரசு BioAsia 2020 ஐ பிப்ரவரி 17 முதல் 19 வரை நடத்துகிறது. இதன் நோக்கம் வாழ்வியல் சார்ந்த அறிவியல் துறைகளில் [life science sectors] வியாபாரத்தொடர்புகளை உருவாக்குவதே ஆகும். இந்தியாவின் 8 வது மிகப்பெரிய வர்த்தக நாடான ஸ்விட்சர்லாந்து இந்தியாவின் கூட்டாளராக செயல்படும்.
NADA ambassador Suniel Shetty
தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் [National Anti-Doping Agency] தூதராக பிரபல நடிகர் சுனில் செட்டி நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுகளில் ஊக்கமருந்து பயன்படுத்தப்படுவதனை தடுப்பது, விழிப்புணர்வினை ஏற்படுத்துவது இந்த அமைப்பின் முக்கிய பணிகள்.
Climate Change Performance Index
57 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் இவற்றின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பங்கு, ஏற்படுத்தும் மாசு மற்றும் விதிகள் இவற்றை அடிப்படையாகக்கொண்டு CCPI Index வெளியிடப்படுகிறது. டிசம்பர் 10,2019 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 9 ஆம் இடம் பிடித்திருக்கிறது.
Anti-Maritime Bill
டிசம்பர் 10,2019 அன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் Anti-Maritime மசோதாவினை லோக்சபாவில் தாக்கல் செய்தார். கடல்சார் வணிகம் மற்றும் பணியாட்கள் இவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதே நோக்கம். கடலில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கமுடியும்.
International Mountain Day
ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் தேதி சர்வதேச மலைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 2003 ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தை கொண்டாடுகிறது . Theme: Mountains matter for youth
December 10
India Skills Report
India Skills Report என்பது வேலை பார்ப்பவர்களின் அடிப்படையில் மற்றும் வேலை கிடைக்கும் விதத்தின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் நகரங்களை வரிசைப்படுத்துகிறது. பணியிடத்தில் அதிக திறன் வாய்ந்தவர்கள் [highest employable talent] பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. தமிழகம் மூன்றாம் இடம் வகிக்கிறது.
World Travel Awards
உலகிலேயே சிறந்த விளையாட்டு சுற்றுலாத்தளமாக அபுதாபி தேர்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்விருதினை வேர்ல்டு ட்ராவல் அவார்ட்ஸ் அமைப்பு வழங்கியுள்ளது. 7 வது முறையாக அபுதாபி இவ்விருதினை வாங்குகிறது.
Iron Union 12
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ராணுவம் கூட்டுப்பயிற்சி செய்கிறது. இந்த பயிற்சி அபுதாபியில் நடைபெறுகிறது.
Human Development Index
189 நாடுகளை கொண்ட பட்டியலில் 129 வது இடம் பிடித்திருக்கிறது. ஏற்றத்தாழ்வு மற்றும் இழப்பு மிக முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. நார்வே முதலிடம் வகிக்கிறது.
December 09
உலக அழகி போட்டி 2019
அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் சோசிபிணி டன்சி [Zozibini Tunzi] உலக அழகி 2019 பட்டம் வென்றார். இந்தியாவின் சார்பாக பங்கேற்ற வர்த்திகா சிங் முதல் 10 இடங்களுக்குள் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா – இந்த திட்டத்தில் நாடு முழுமைக்கும் உள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ6000 [4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ 2000] கொடுக்கப்படும். இந்த திட்டம் பிப்ரவரி 24,2019 அன்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் முதல் முறையாக இப்போது தான் பணம் வழங்கப்பட இருக்கிறது. பணம் பெரும் வங்கிக்கணக்குகள் அனைத்தும் ஆதார் வெரிபிகேஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இளம் வயதில் பின்லாந்து பிரதமர் – சன்னா மரின்
வருகிற டிசம்பர் 10 அன்று அதிகாரபூர்வமாக பின்லாந்து அதிபராக பதவியேற்க இருக்கக்கூடிய சன்னா மரின் [Sanna Marin] தான் உலகின் இளம் வயது பிரதமராக இருப்பார். இவருக்கு வயது 34.
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் – டிசம்பர் 09
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் டிசம்பர் 09 ஆம் தேதியை சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அனுசரிக்கிறது. மக்களுக்கு ஊழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். ஊழல் நிறைந்த நாடுகளில் பட்டியலில் இந்தியா 78 ஆம் இடம் வகிக்கிறது. இந்த பட்டியலில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை 180.
December 07
தேசிய பங்கு சந்தை [National Stock Exchange(NSE) ] தலைவராக கிரிஷ் சந்திரா சதுர்வேதி நியமனம்.
பிரதம மந்திரி வன் தன் யோஜனா – 100 வது நாள்
பழங்குடியின மக்களின் வாழ்வை வளப்படுத்தவுதற்காக உருவாக்கப்பட்ட பிரதம மந்திரி வன் தன் யோஜனா 100 வது நாளை எட்டியுள்ளது. இதற்கான விழாவினை பழங்குடியின நலத்துறை அமைச்சகம் மற்றும் பிரபல ஆடை வடிமைவைப்பாளரான ரிது பெரிவின் அமைப்பு இணைந்து கொண்டாடியது.
Anti-Depredation Squads – Assam
அசாம் மாநிலத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மோதல்களை தவிர்க்க Anti-Depredation Squads என்ற அமைப்பை வனத்துறையில் புதிதாக உருவாக்கி இருக்கிறது. மோதல் ஏற்படும் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை இந்த அமைப்பு குறைக்க உதவும்.
National Florence Nightingale Award 2019
மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் ஃபுளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுகாதாரத் துறையில் சிறப்பாக சேவையாற்றிய 36 செவிலியர்களுக்கு விருது வழங்கினார். நிபா வைரஸ் தாக்கி உயிரிழந்த கேரள செவிலியர் லினிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார் அதனை செவிலியரின் கணவர் சஜீஷ் பெற்றுக்கொண்டார்.
December 06
உத்தரகண்டில் சராய் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது
சுவீடன் நாட்டு அரசர் கிங் கார்ல் XVI கஸ்டப் மற்றும் ராணி சில்வியா இதனை [Sarai Sewage Treatment Plant] திறந்து வைத்துள்ளார்கள். நமாமி கங்கே (Namami Gange ) என்ற மத்திய அரசின் திட்டப்படி ரூ 41.40 கோடி செலவில் இந்த மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. நமாமி கங்கே என்பது கங்கை நதியை தூய்மைப்படுத்த ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட திட்டம்.
இந்தியாவின் முதல் மெகா உணவு பூங்கா திறக்கப்பட்டது [First Meha Food Park]
மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இந்தியாவின் முதல் மெகா உணவு பூங்காவை திறந்துவைத்துள்ளார். அவந்தி மெகா உணவுப்பூங்கா மத்யபிரதேசத்தின் தேவாஸ் எனும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது. 5 ஏக்கர் அளவுள்ள இந்த உணவுப்பூங்கா 150 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சகத்தின் ஒரு திட்டமாகும், இது பண்ணையிலிருந்து பதப்படுத்தும் நிலையத்திற்கும் பின்னர் நுகர்வோர் சந்தைகளுக்கும் சேகரிப்பு மையங்கள் மற்றும் முதன்மை செயலாக்க மையங்களின் நெட்வொர்க் மூலம் நேரடி இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Ripu Daman Bevli named as Plogging Ambassador of India
Plogman of India என்று அறியப்பட்ட ரிபு தமன் பெவ்லி என்பவரை இந்தியாவின் பிளாக்கிங் தூதராக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். Plogging என்பது ஜாக்கிங் சென்றுகொண்டே குப்பைகளை அகற்றுவது தான்.
சிபிஎஸ்சி பாடப்புத்தகத்தில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்
8,9,10 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் முன்னனி தொழில்நுட்பமான ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
December 05
World Soil Day [உலக மண் தினம்]
நிம்மதியாக நிலத்தில் வாழ்வதனை உறுதிப்படுத்துவதனை முதன்மையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 05 ஆம் நாளை World Soil Day [உலக மண் தினம்] ஆக கடைபிடிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் 68 ஆவது கூட்டத்தில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
MadhuApp – ஒடிசா
ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் புதிய மொபைல் ஆப் ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கிறார். MadhuApp எனப்படும் இந்த ஆப்பானது பள்ளி மாணவர்கள் தங்களது பாடங்களை மொபைல்களில் வீடியோ மற்றும் டுடோரியல் வடிவத்தில் படிக்க அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஸ்டார்ட்அப் இந்தியா குளோபல் வென்ச்சர் கேபிடல் உச்சி மாநாடு 2019
இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு கோவாவில் டிசம்பர் 6 -7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டின் முக்கிய கருதுகோள் : India Opportunity- Investing in tomorrow together
மோசமான பயோமெட்ரிக் தகவல் பயன்பாட்டில் 5 ஆம் இடம் இந்தியா
பயோமெட்ரிக் தகவல்களை சரியாக பயன்படுத்தாத நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆம் இடம் வகிக்கிறது. இங்கிலாந்து, போர்ச்சுகல் போன்ற நாடுகள் சிறப்பான நாடுகளாக அறியப்படுகின்றன.
December 04
Global Climate Risk Index 2020
பருவநிலை மாற்றத்தினால் அதிக பாதிப்புகளை 2018 ஆம் ஆண்டு சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆம் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் அதிக பாதிப்புகளை பெற்று பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
Cabinet Approves : ETF ( Bharat Bond Exchange Traded Fund)
Personal Data Protection Bill
தனிமனிதர்களின் தகவல்களை பெறுவது அவற்றை சேமிப்பது அவற்றை பயன்படுத்துவது தொடர்பான விதிகளை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான கமிட்டி வடிவமைத்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திட கேபினெட் அனுமதி அளித்துள்ளது.
December 03
First maritime museum
மொரிசியஸ் ஜனாதிபதியாக பிரிதிவிராஜ்சிங் ரூபுன் தேர்வு
மொரீஷியஸ் தீவின் புதிய ஜனாதிபதியாக பிருத்விராஜ்சி ரூபனை ஏகமனதாக தேர்ந்தெடுத்துள்ளது அந்நாட்டு பாராளுமன்றம்.
“Person of the Year” – Joaquin Phoenix
பீட்டா அமைப்பு ஆண்டின் சிறந்த நபருக்கான விருதினை பிரபல அமெரிக்க நடிகரான “ஜோவாகின் பீனிக்ஸ்” க்கு வழங்கி இருக்கிறது.
Regional connectivity Scheme 4.0
மத்திய அரசு “பிராந்திய இணைப்பு திட்டம் 4.0” வை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வான்வெளி மூலமாக இந்திய நகரங்களை இணைப்பதே நோக்கம். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சிறிய நகரங்களில் 100 விமான நிலையங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆல்பபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரியனார் சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த சுந்தர் பிச்சை கூகுளின் தலைமை நிறுவனமாக இருக்கும் ஆல்பபெட் நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்த்தப்படுகிறார். இதன் மூலமாக கார்ப்பரேட் உலகின் அதிகாரம் படைத்த பொறுப்பில் தமிழர் ஒருவர் அமர்கிறார் .
December 02 :
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி III ஏவுகணை சோதனை தோல்வி
இரவு நேரத்தில் முதல் முறையாக நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை ஒரிசாவிற்கு அருகில் இருக்கும் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்டது. நம் அண்டை நாடுகளான சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் முக்கிய நகரங்களை தாக்கும் திறன் கொண்டது அக்னி III. அதோடு அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதும் கூட.
தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் – டிசம்பர் 02
போபால் வாயுக்கசிவு ஏற்பட்டு பல பொதுமக்கள் உயிர் இழந்த தினத்தை நினைவு கூறும் விதமாகத்தான் தேசிய மாசுக்கட்டுப்பாட்டு தினம் [National Pollution Control Day] அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் காற்று மாசுவை எப்படி குறைப்பது என்பது குறித்தும் தொழிற்சாலை விபத்து காலங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துவதே இந்நாளின் முதன்மையான நோக்கம்
அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் [டிசம்பர் 02]
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 02 அன்று அடிமைத்தனத்தை ஒழிக்கும் சர்வதேச தினம் [International Day for Abolition of Slavery] டிசம்பர் 02 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் முக்கியநோக்கம் ஆட்கடத்தல், குழந்தை தொழிலாளர், பாலியல் சுரண்டல் உள்ளிட்டவற்றை நீக்குவதற்காக ஆக்கபூர்வமாக செயல்படவேண்டும் என்பதனை நினைவூட்டுவது தான்.
ஐக்கிய நாடுகள் சபையின் COP 25 துவக்கம்
பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு 12 நாட்கள் நடக்கும் மாநாடு ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் என்ற இடத்தில் துவங்கியது. பருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை காக்கவேண்டும் என உறுதிபூண்டுள்ள 200 க்கும் மேற்பட்ட உலகநாடுகள் [இந்தியா உள்பட] இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. ஆபத்தான வாயுக்களை காற்றில் கலப்பதனை ஒவ்வொரு நாடும் 7.6% அளவிற்கு குறைக்க வேண்டும் என முதல் கட்டமாக கூறப்பட்டுள்ளது. அத்தோடு நாடுகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது . COP 25 [Conference of Parties (COP) ]
December 01 :
போர்பஸ் – உலக பணக்காரர்கள் வரிசை
உலக பணக்காரர்கள் வரிசையில் [Real-Time Billionaires List of Forbes] இந்தியாவின் முகேஷ் அம்பானி 9 ஆம் இடத்தை பிடித்திருக்கிறார். அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை அதிகாரி ஜெப் பெஸோஸ் 113 பில்லியன் டாலருடன் முதலிடம் வகிக்கிறார். பில்கேட்ஸ் $107.4 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பேஸ்புக் நிறுவனர் $74.9 பில்லியன் டாலருடன் 5 ஆம் இடம் வகிக்கிறார்.
உலக பாரம்பரியகுழுவின் உறுப்பு நாடாக இணைந்தது தாய்லாந்து
21 நாடுகள் உறுப்பினராக இருக்கக்கூடிய உலக பாரம்பரியகுழுவின் காலியான இடங்களுக்கான வாக்கெடுப்பில் 193 நாடுகள் வாக்களித்து தாய்லாந்து நாடு இணைந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டுவரை தாய்லாந்து உறுப்பு நாடாக இருக்கும்.
India Corruption Survey 2019
இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள ஊழல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் பிஹார் மாநிலங்களில் 78% மற்றும் 75% மக்கள் லஞ்சம் கொடுப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். தென்னிந்தியாவில் தெலுங்கானா மாநிலம் முன்னிலையில் இருக்கிறது. தமிழகம் இந்த பட்டியலில் 7 ஆம் இடத்தில் இருக்கிறது, 67% சதவிகித மக்கள் லஞ்சம் கொடுப்பதனை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் கடைசி இடத்தில் கேரளா இருக்கிறது. 10% மக்களே வேலை ஆவதற்கு லஞ்சம் கொடுப்பதனை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஞானபீட விருது 2019
முன்னனி மலையாள கவிஞர் திரு அக்கீதம் அவர்கள் ஞானபீட விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
UNEP Emissions Gap Report 2019
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுசூழல் திட்டத்தின் Emissions Gap Report-2019 வெளியிடப்பட்டது. இதில் பூமியின் சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பியன் யூனியன் நாடுகள் இவைதான் அதிகப்படியாக கரியமில வாயுக்களை வெளியிடும் நாடுகளாக அறியப்பட்டுள்ளன.
World AIDS Day – December 01
1988 ஆம் ஆண்டு முதல் உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01 அன்று கடைபிடிக்கப்படுகிறது . உலகம் முழுமைக்கும் உள்ள மக்கள் ஒன்றிணைந்து எச்ஐவி க்கு எதிராக செயல்படவும், எச்ஐவி பாதித்த மக்களுக்கு ஆதரவை காட்டும் விதமாகவும் எய்ட்ஸ் மற்றும் அது சார்ந்த நோய் பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் செயல்படுகிற வாய்ப்பினை வழங்குகிறது. எச்ஐவி பாதிப்பை முழுமையாக குணப்படுத்திட முடியாது ஆனால் சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால் கட்டுப்படுத்திட முடியும்.