[easy-notify id=823]
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களின் பட்டியல்
விருதுநகர் – முதலிடம்
நௌபடா – இரண்டாமிடம்
சித்தார்த் நகர் – மூன்றாமிடம்
26வது தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் மாநாடு
நடைபெற்ற இடம் – புவனேஸ்வர் நகர், ஒடிசா
நோக்கம் – Science, Technology and Innovations for it clean, green and Health Nation” அதாவது தூய்மையான , பசுமைக்கான, ஆரோக்கியமான தேசத்திற்கான அறிவியல், தொழில்நுட்பம், புதுமையான விசயங்கள்
USTAAD – Undergear Surveillance Through Artificial Intelligence Assisted Droid) உஸ்தாத் ரோபோ ரயில்வே துறையில் அறிமுகம். போகமுடியாத இடங்களில் நுழைந்து புகைப்படம் எடுக்க இந்த ரோபோ பயன்படுத்தப்பட இருக்கிறது
திருமணவானவர்களுக்கான இந்திய அழகி போட்டி 2018 [Mrs India] இல் வென்றவர் – திவ்யா பட்டிதார் ஜோஷி
மகிளா போலீஸ் தன்னார்வலர்கள் திட்டம் (Mahila Police Volunteer Scheme)
மகிளா போலீஸ் தன்னார்வலர்கள் திட்டம் என்பது சமூகத்தில் பாலியல் ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளால் பெண்கள் பாதிப்பதற்கு எதிராகவும், குற்றங்களில் இருந்து பெண்களை காக்கவும் “பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தன்னார்வலர் பெண்களை கொண்டு உருவாக்கப்படும் அமைப்பு.
ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத், மிசோரம், சத்தீஸ்கர், கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை முன்மொழிந்ததை அடுத்து மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மகிளா போலீஸ் தன்னார்வலர்கள் திட்டதில் இணைய தகுதிகள் :
- 21 வயது நிரம்பிய தன்னார்வலர் பெண்ணாக இருக்க வேண்டும்
- 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்
- குறிப்பிட்ட அந்த பகுதியை சேந்தவராக இருப்பது அவசியம்
- அரசியல் கட்சியில் இருக்க கூடாது
- ஒரு கிராம பஞ்சாயத்திற்கு ஒரு பெண் நியமிக்கப்படுவார்
- பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரதட்சணை, குழந்தை திருமணம் ஆகியவற்றிற்கு எதிராக இவர்கள் குரல் கொடுக்கலாம்.
- ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் இவர்களுக்கு வழங்கப்படும்.
உள்துறை அமைச்சகம் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற ஆன்லைன் குற்றங்களை தடுக்க Cyber Crime Prevention against Women and Children (CCPWC) portal ஐ தொடங்கியுள்ளது.
கேபினட் அமைச்சரவை போக்ஸோ (POKSO) சட்டத்தில் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது,
18 வயதுக்கு குறைவான ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதே நோக்கம்
இதன் மூலம் 18 வயதுக்கு குறைவான ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவினை அளிப்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கலாம்
Read More : முந்தைய நடப்பு நிகழ்வுகள்
TECH TAMILAN