Site icon Tech Tamilan

Google Translate ஆப்பில் என்னவெல்லாம் செய்யமுடியும் தெரியுமா? | Google Translate App features in tamil

google-translate features in tamiil

google-translate features in tamiil

google-translate features in tamiil

Google Translate App

உலகின் பயன்பாட்டில் இருக்கும் எந்த மொழியிலிருந்தும் உங்களுக்கு வேண்டிய மொழிக்கு translate செய்துகொள்ள முடியும். இன்னும் சில காலங்களில் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ளுவதே கூட பயனற்றதாக மாறிப்போகவும் வாய்ப்பு உண்டு



Click Here! Get Updates On WhatsApp

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்துகொண்டே போகிறது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் வேண்டுமெனில் பெரிய அகராதியை எடுத்துவந்து தேடிப்பார்த்து தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது. இன்டர்நெட் வருகைக்கு பிறகு ஆன்லைனில் தேடி அர்த்தத்தை தெரிந்துகொண்டோம். Translate செய்வதனை கூகுள் மிகவும் எளிமையாக்கிக்கொண்டே  இருக்கிறது. மொபைலில் Translate செய்வதற்காக Google Translate எனும் ஆப்பினை தந்திருக்கிறது. Google Translate ஆப்பானது வெறும் Translate என்பதனையும் தாண்டி இன்னும் பல ஆச்சர்யமான வசதிகளையும் கொண்டிருக்கிறது. அதனைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம். 

 

>> Google Translate ஆப் மூலமாக 103 மொழிகளுக்கு இடையே மொழிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

 

>> அதுமட்டுமல்லாமல் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் கூட 59 மொழிகளுக்கு இடையே மொழிமாற்றம் செய்திடலாம். 

 

>> வேறு எந்த ஆப்பில் அல்லது பிரவுசரில் இருந்தாலும் அங்கே நீங்கள் ஏதாவது ஒரு வார்த்தைக்கு மொழிமாற்றம் செய்திட விரும்பினால் அந்த வார்த்தையை செலெக்ட் செய்தால் அங்கேயே Translate எனும் ஆப்சன் வருமாறு செய்யப்பட்டுள்ளது.

Instant camera translation : இந்த வசதி தான் மிகவும் சிறப்பான ஒரு வசதியாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு ஆங்கில நாளிதழை வைத்துக்கொண்டு உங்களது மொபைலில் இருக்கும் Google Translate ஆப்பில் கேமரா ஆப்சனை தேர்ந்தெடுத்து நாளிதழை காட்டினால் போதும் உங்களது கேமராவில் நீங்கள் விரும்பிய மொழியில் மொழி மாற்றம் செய்து காட்டிவிடும். நாளிதழ் மட்டுமல்ல, கதவில் சுவரில் என எங்கே எழுதியிருந்தாலும் மொழிமாற்றம் செய்துவிட முடியும். இதற்க்கு கேமராவில் அந்த எழுத்துக்கள் சரியாக படும்படி செய்திட வேண்டும். தற்போதைய சூழலில் மொழிமாற்றம் செய்வதில் “வாக்கிய அமைப்பு முறையில் தொய்வு இருக்கவே செய்கிறது”விரைவில் அவை சரிசெய்யப்படும்.  [தமிழ் எழுத்துக்களை பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்திட முடியாவில்லை. ஆனால் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்க முடிகிறது]

 

Camera Mode: இதில் நீங்கள் ஏற்கனவே எடுத்துவைத்திருக்கும் துல்லியமான புகைப்படத்தில் இருக்கும் வார்த்தைகளை translate செய்து படிக்க இயலும்.

 

Conversation Mode: கிட்டத்தட்ட 32 மொழிகளில், பேசும்போதே மொழிமாற்றம் செய்துகொள்ளும் வசதி இந்த ஆப்பில் இருக்கிறது.

 

Handwriting: நீங்கள் Keyboard பயன்படுத்துவதற்கு பதிலாக கையாலேயே எழுதிக்கூட translate செய்துகொள்ள முடியும்.  நீங்கள் translate செய்து படித்த வார்த்தைகள் உங்களுக்கு தேவைப்படுகிறதெனில் நீங்கள் அதனை சேமித்துவைத்துக்கொள்ளவும் முடியும்.

 

இப்போது இந்தியா போன்றதொரு நாடுகளில் பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ஒருவருக்கு ஒரு மொழி தெரிந்தாலே போதுமானதாக இருக்கலாம். அந்த அளவிற்கு மொழிமாற்றம் செய்திடும் தொழில்நுட்பம் வளர்ந்துவிடும்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version