Site icon Tech Tamilan

கூகுள் அதிரடி, Google Photos இனி இலவசம் இல்லை

கூகுள் லென்ஸ் ஆப்

கூகுள் லென்ஸ் ஆப்

கூகுள் லென்ஸ் ஆப்

Google Photos end free service

ஜூன் 2021 முதல்
Google Photos இலவசம் இல்லை என அறிவித்திருப்பது பலரையும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.


ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துகிறவர்களுக்கு பெரிதும் பயன்பட்டதொரு ஆப் என்றால் அது Google Photos எனலாம். நாம் எடுக்கக்கூடிய போட்டோக்களை தானாகவே பயனாளரின் Google Photos இல் சேமித்து வைக்கும் இந்த ஆப் காரணமாக பல பழைய போட்டோக்களை நாம் இழக்காமல் இருக்க முடிந்தது. பொதுவாகவே கூகுள் நிறுவனம், ஜிமெயில் வைத்திருக்கும் பயனாளர் ஒருவருக்கு 15ஜிபி இலவச டேட்டாவை வழங்கும். ஆனால் Google Photos ஆப் க்கு அது பொருந்தாது. நாம் எவ்வளவு போட்டோக்களை வேண்டுமானாலும் இதில் இலவசமாக தரவேற்றிக்கொள்ள முடியும் என்ற நிலை தான் இருந்தது. 

 

 

ஆனால் இத்தகைய இலவச சேவையை கூகுள் நிறுவனம் நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜூன் 2021 முதல் பயனாளர் தரவேற்றம் செய்திடும் போட்டோ மற்றும் வீடீயோவின் அளவானது ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள 15ஜிபி இலவச டேட்டாவில் சேர்க்கப்படும். இதனால் நாம் அதிகப்படியான போட்டோக்களை தரவேற்றம் செய்திடும் போது நமது ஜிமெயில் அதன் இலவச ஸ்டோரேஜ் அளவினை எட்டிவிடும். 

 

 

ஜூன்,2021 க்கு முன்னதாக தரவேற்றம் செய்யப்படும் போட்டோ, வீடீயோ அனைத்தும் வழக்கம் போல இலவசமாகவே இருக்கும். அதற்குப்பின்னர் தரவேற்றம் செய்திடும் போட்டோக்கள் மற்றும் வீடீயோக்கள் தான் கணக்கில் சேர்க்கப்படும். 

 

 

பிக்சல் 1,2,3,4,5 மொபைல் போன்கள் வைத்திருப்பவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது. அவர்கள் வழக்கம் போல இலவசமாகவே Google Photos ஐ பயன்படுத்த முடியும். 

 

 

15ஜிபி இலவச டேட்டா முடிந்துபோனால் கட்டணம் செலுத்தி ஸ்டோரேஜ் ஐ வாங்கிக்கொள்ள முடியும். அமெரிக்காவில் மாதம் $1.99 செலுத்தி 100ஜிபி டேட்டாவை பெற முடியும். இந்தியாவில் 130 ரூபாய். 

 

 

விரைவில் உங்களது இலவச ஸ்டோரேஜ் காலியாகி விடுவதை தவிர்க்க தேவைற்ற புகைப்படங்கள் தரவேற்றம் ஆவதை தவிர்த்திடுங்கள். தேவையற்றதை நீக்கிடுங்கள். 






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version