Site icon Tech Tamilan

Google Pay, PhonePe மூலம் பணம் அனுப்ப 30% கட்டணமா?

ஆபத்தான ஷாப்பர் மால்வேர், உங்க போன் பாதிக்கப்பட்டிருக்கா? | Shopper Malware

ஆபத்தான ஷாப்பர் மால்வேர், உங்க போன் பாதிக்கப்பட்டிருக்கா? | Shopper Malware

அண்மையில் ஒரு செய்தி நாளிதழில் வெளியாகி ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இடையே பெரும் விவாதப்பொருள் ஆனது. அதில் Google Pay, PhonePe மூலம் பணம் அனுப்ப 30% கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. உங்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி, இது உண்மையில்லை என்பது தான். அப்படியென்றால் உண்மையான செய்தி எது? வாருங்கள் பார்ப்போம்.


News that shows google pay and phonepe going to cost 30% for transaction from January 2021

பொதுவாக ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகத்தான் யுபிஐ (UPI : Unified Payments Interface) என்ற வசதியே அறிமுகப்படுத்தப்பட்டது.  அண்மையில் UPI மூலமாக மட்டுமே மாதத்திற்கு 2 பில்லியனுக்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. இது வரவேற்கப்படக்கூடியது தான் என்றாலும் கூட, ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனையில் 80% பண பரிவர்த்தனைகள் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் Google Pay, PhonePe என்ற இரண்டு ஆப்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.


இதுதான் தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. சில நிறுவனங்கள் மட்டுமே ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் பயன்படுத்துவது ஆரோக்கியமானது இல்லை என கருதுகிறது என்சிபிஐ. ஆகவே தான் ஜனவரி 2021 முதல் ஒவ்வொரு நிறுவனமும் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்படும் பண  பரிவர்த்தனையில் 30% மட்டுமே மேற்கொள்ளவேண்டும். அதாவது ஒரு மாதத்திற்கு யுபிஐ மூலமாக 100 பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால் கூகுள் பே அதிகபட்சமாக 30 பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பதுதான் புதிய கட்டுப்பாடு.



இப்படி கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலமாக அதிகப்படியான ஓவர் லோடு ஆவதை தவிர்க்க முடியும் என கருதுகிறது என்சிபிஐ. சரி, அதற்கு மேல் ஒரு நிறுவனம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முயன்றால் என்னவாகும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கூடுதலாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு அதிகபட்ச கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருக்கிறது.


பரிவர்த்தனை மேற்கொள்ள நாம் கட்டணம் செலுத்த வேண்டுமா?


கூகுள் பே மூலமாக பரிவர்த்தனை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படும் என கூகுள் முன்பு தெரிவித்து இருந்தது. ஆனால் பின்னர், அமெரிக்காவில் மட்டும் தான் கட்டணம் என்றும் இந்தியாவில் இலவசம் என்றும் விளக்கம் தெரிவித்தது. இப்போது என்சிபிஐ 30% பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளதால் கூகுள் , போன் பீ சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.


அதன்படி, ஒரு மாதத்திற்கு 4 அல்லது 5 பரிவர்த்தனைகள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என சொல்லலாம். அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் சிறிதளவு கட்டணம் வசூலிக்கலாம்.

கூப்பன் கொடுப்பது, பணம் வழங்குவது போன்றவற்றை Gpay, PhonePe போன்ற நிறுவனங்கள் நிறுத்தலாம் என சொல்லப்படுகிறது.



வாட்ஸ்ஆப் ஆண்டு முயற்சிகளுக்கு பிறகு தற்போது தான் பணம் அனுப்பும் வசதியை கொண்டுவர இருக்கிறது. அநேகம் பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப்பில் பண பரிவர்த்தனை வசதி கொண்டுவரப்பட்டால் அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் 30% கட்டுப்பாடு கொண்டுவரப்படுவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


பயனாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைக்கு 30% கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால் சில கட்டுப்பாடுகள் வரலாம். சில நிறுவனங்கள் சிறிதளவு கட்டணமும் விதிக்க வாய்ப்பு உண்டு. அந்த விவரங்கள் பிறகு தான் நிறுவனங்களால் வெளியிடப்படும்.


TECH TAMILAN

Exit mobile version