Site icon Tech Tamilan

Google My Business Profile சஸ்பெண்ட் ஆயிடுச்சா? இதை பண்ணுங்க

How to setting up google my business and my website

Google My Business Profile ஒவ்வொரு சிறிய கடைக்காரருக்கும் அவசியமான ஒன்று. இந்த ஆன்லைன் உலகில் பெரும்பான்மையானவர்கள் தங்களுக்கு தேவையான கடைகளை கூகுள் மேப்பில் தேடித்தான் கண்டறிகிறார்கள். அப்படி தேடுகிறவர்களுக்கு உங்களது கடை காண்பிக்கப்பட வேண்டுமெனில் உங்களது Google My Business Profile ஆக்டிவாக இருக்க வேண்டும். ஒருவேளை உங்களது Google My Business Profile சஸ்பெண்ட் ஆகி இருந்தால் உங்களது கடை யாருக்கும் காண்பிக்கப்பட மாட்டாது. நீங்கள் உடனடியாக செயல்பட்டு உங்களது Google My Business Profile ஐ மீட்பது அவசியம்.

Google My Business Profile பெரும்பான்மையான நேரங்களில் தானாக சஸ்பெண்ட் ஆவது இல்லை. மாறாக, Google My Business Profile admin செய்திடும் சில தவறுகளால் தான் சஸ்பெண்ட் ஆக வாய்ப்பு உள்ளது.

  1. நீங்கள் பிசினஸ் பெயரை மாற்ற முயற்சி செய்தாலோ அல்லது அடிக்கடி மாற்றினாலோ உங்களது கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்.
  2. நீங்கள் verify செய்துவிட்ட பிறகு கடையின் முகவரியை மாற்றினால் உங்களது கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்.
  3. நீங்கள் தவறான தகவல்களை உங்களது கணக்கில் பதிவு செய்து வைத்திருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படும்.
  4. வேறு யாரேனும் உங்களது Google My Business Profile க்கு claim செய்து நீங்கள் அதனை reject செய்யாமல் வைத்திருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படும்.
  5. நீங்கள் தவறான விசயங்களுக்காக பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படும்.

Google My Business Profile சஸ்பெண்ட் ஏன் ஆகிறது? அதனை எப்படி தவிர்ப்பது? ஒருவேளை சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டால் எப்படி reinstatement file செய்வது என்பதை பின்வரும் வீடியோவில் தெளிவாக கூறி இருக்கிறேன்.

Exit mobile version