Google Follows You
உங்களுடைய மொபைலில் கூகுள் மேப் அல்லது கூகுளின் பிற சேவைகளை பயன்படுத்தினால் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்ற தகவல்களை கூகுள் சேகரித்து வைக்கிறது. உங்களால் மட்டுமே இந்த தகவலை பார்க்க முடியும் என்கிறது கூகுள். நீங்கள் விரும்பினால் இதனை தடுத்து நிறுத்திக்கொள்ள முடியும்.
Read this also :
What is G Suite? Why Google Increasing Price for G Suite? | Explained in Tamil
ஆபாச தளங்களுக்கு தடைவித்த கூகுள் நல்ல முயற்சி
போன சனிக்கிழமை நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள் என கேட்டால் சிலருக்கு நியாபகம் இருக்கலாம் சிலர் யோசித்து சொல்லலாம். ஆனால் போன வருடம் இதே நாள் நீங்கள் எங்கு சென்றீர்கள் என்ற தகவல் கூட கூகுளிடம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் எத்தனை மணிக்கு எந்த இடத்தில் நீங்கள் என துல்லியமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும். இதனை நீங்களே சோதித்தும் பார்த்துக்கொள்ள முடியும்.
கூகுளின் கூகுள் மேப் [Google Map] அல்லது கூகுளின் பிற சேவைகளை [Google Services] உங்களது மொபைலில் பயன்படுத்தினால் உங்களது இணைய நடவெடிக்கைகள் தொடங்கி நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள் என்ற தகவல்வரை கூகுள் சேமிக்க துவங்கி விடுகிறது. இதற்க்கு கூகுள் சொல்லும் விளக்கம் “We track your information to provide better service” என்பதுதான்.
உதாரணத்திற்கு சென்னையை சேர்ந்த நீங்கள் மும்பைக்கு சென்று “Hotels near me” அதாவது “எனக்கு அருகில் இருக்கும் ஹோட்டல்கள் என்ன” என சர்ச் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கூகுள் உங்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்திற்கு அதாவது மும்பையில் இருக்கும் ஹோட்டல்களை காட்டும். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை குறிப்பிடாமல் தேடினால் கூட நீங்கள் இருக்கும் இடத்தை சார்ந்து சர்ச் ரிசல்ட் ஐ காட்டும். இது உங்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும். இதனை தான் கூகுளும் “better service” என கூறுகிறது.
How to know your location history?
இந்த லிங்கை கிளிக் செய்திடுங்கள்
https://myaccount.google.com/privacycheckup
Start Now ஆப்சனை கிளிக் செய்திடுங்கள்
Location History ஆப்சனுக்கு கீழே இருக்கின்ற “MANAGE LOCATION HISTORY” ஐ கிளிக் செய்திடுங்கள்
Timeline இல் ஆண்டு மாதம் தேதி ஐ குறிப்பிடுங்கள்
நீங்கள் அந்த தினத்தில் எங்கெல்லாம் சென்றீர்கள் என்ற தகவல் காட்டப்படும்
How to delete your location History?
படத்தில் காட்டப்பட்டுள்ள Trash பட்டனை கிளிக் செய்து இதுவரை ரெகார்ட் செய்யப்பட்ட லொகேஷன் தரவுகளை அழித்துவிடலாம்.
Manage Location History ஆப்சனை கிளிக் செய்து “Turn Off” செய்து கொள்ளலாம்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.