Site icon Tech Tamilan

கூகுள் மீனாவைவிடவும் எங்களோட பிளெண்டர் சாட்பாட் தான் சிறந்தது பேஸ்புக் அறிவிப்பு

கடந்த ஜனவரி மாதத்தில் உலகிலேயே சிறந்த சாட்பாட் [chatbot] எங்களுடைய மீனா சாட்பாட் தான் என கூகுள் அறிவித்து இருந்தது. இந்த சூழ்நிலையில் ஏப்ரல் 29 அன்று பேஸ்புக் அவர்களது பிளாக்கில் வெளியிட்ட பதிவில் தற்போதைக்கு உலகில் சாட்பாட்களிலேயே எங்களுடைய பிளெண்டர் தான் சிறந்தது என கூறியிருக்கிறது.

Chatbot

ChatBot என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து படியுங்கள். ChatBot குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்தவண்ணம் இருக்கிறது. ஆனால் இன்னமும் 100% மனிதர்களைப்போலவே உரையாடக்கூடிய ChatBot உருவாக்கப்படவில்லை. திரும்ப திரும்ப கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமான ChatBot தான் தற்போது பெரிதும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் ஒரு சிறந்த ChatBot ஐ உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனமும் பேஸ்புக் நிறுவனமும் இறங்கியிருக்கிறது. இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது அதில் தங்களுடைய ChatBot Meena தான் உலகிலேயே சிறந்த ChatBot என தெரிவித்து இருந்தது. 

இதன் சிறப்பம்சம் குறித்து கூறும்போது, மனிதர்கள் பேசுவதைப்போலவே உரையாடுவதற்கு ஏதுவாக இந்த நியூரல் நெட்ஒர்க்கில் 2.6 பில்லியன் அளவுருக்கள் [parameter] உள்ளீடாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பில்லியன் வார்த்தைகள் – 341ஜிபி text data உள்ளீடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சமூக வலைதளங்களில் பேசப்படும் உரையாடல்களும் அடங்கும். அதேபோல இதில் ஒரு என்கோடர் பிளாக் [Encoder Block] பயனாளர் தரும் தகவலை புரிந்துகொள்ளவும் 13 டிகோடர் பிளாக் [Decoder Block] பதிலை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது என கூகுள் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 

தற்போது பேஸ்புக் நிறுவனம் தங்களது பிளாக்கில் வெளியிட்டுள்ள தகவலில், தற்போதைய சூழ்நிலையில் இருக்கும் ChatBot களிலேயே எங்களுடையது தான் சிறந்து என்றும் உரையாடலை மேற்கொண்டு தொடர்வதிலும் மனிதர்களுக்கு நிகராக உரையாடல் நிகழ்த்துவதிலும் இதுவே சிறந்தது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். இது கூகுள் சாட்பாட் மீனாவையும் சேர்த்துதான். 

பேஸ்புக் தகவலின்படி மிகச்சிறந்த டிகோடர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நியூரல் நெட்ஒர்க்கில் 9.4 பில்லியன் அளவுருக்கள் [parameter] உள்ளீடாக கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. கூகுள் 2.6 பில்லியன் அளவுருக்களை மட்டுமே உள்ளீடாக கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் தகவல்படி பார்த்தால் கூகுளை விடவும் 3.6 மடங்கு அதிகம். 

பேஸ்புக் நிறுவனத்தின் பிளெண்டர் சாட்பாட்டை மனிதர்களின் மூலமாக சோதித்து பார்த்ததில் மீனாவைவிடவும் பிளெண்டர் சிறப்பாக செயல்படுவதாக 75% பேர் தெரிவித்து உள்ளனர். 67% பேர் பிளெண்டர் மனிதர்கள் போலவே உரையாடலை நிகழ்த்துவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பேஸ்புக் நிறுவனத்தின் பிளெண்டர் சாட்பாட் குறித்து கூகுள் நிறுவனம் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

பேஸ்புக் நிறுவனம் தங்களது பிளெண்டர் சாட்பாட்டை ஓபன் சோர்ஸாக வெளியிட்டு உள்ளனர். இதன் மூலமாக இந்த துறையில் பணியாற்றுகிறவர்கள் இதனை மீள் உருவாக்கம் செய்திட முடியும். அதேபோல மாறுபாடுகளையும் செய்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளது. 

மேலும் டெக்னாலஜி சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க இந்த பட்டனை கிளிக் செய்து இணைந்திடுங்கள்

Click Here! Get Updates On WhatsApp

Sridaran
Baskaran

Blogger

நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version