Site icon Tech Tamilan

ஆபாச தளங்களுக்கு தடைவித்த கூகுள் நல்ல முயற்சி | Google banned Child abuse keywords


தொழில்நுட்பம் இளம்தலைமுறையினர்  தங்களது அறிவினை வளர்த்துக்கொள்வதில் பெரும்பங்கு ஆற்றினாலும் மறுபக்கம் விளையாட்டு , ஆபாச வீடியோக்கள் என அவர்களை சீரழிக்கவும் தவறுவதில்லை .  பலமுறை ஆபாச இணையதளங்களை முடக்கிட வேண்டும் என்கிற குரல் எழுந்தாலும் அதற்கான நடவெடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படவில்லை .



இதுகுறித்த வழக்குகளும் அவ்வப்போது தொடரப்படுவதை அனைவருமே அறிவோம் . தற்போது இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் பேரிலும் ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை நிறைவேற்றும் பேரிலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோக்களை இணையத்தில் தேடினால் அவை கிடைக்காதவண்ணம் சில வார்த்தைகளை கூகுள் தடை செய்துள்ளது .

 

கூகுள் மட்டுமல்ல யாஹூ போன்ற பல்வேறு சர்ச் என்ஜின்களும் இந்த தடையை கொண்டுவந்துள்ளன . இணையத்தின் வருகையினால் பாலியல் வீடியோக்களை கண்டு குற்றங்கள் செய்வது அதிகரித்துக்கொண்டு வரக்கூடிய சூழலில் இந்நிறுவனங்களின் தடை வரவேற்பை பெற்றுள்ளது .

Google banned Child abuse search keywords



நாமும் இந்த தடை உண்மையாக செயல்படுகின்றதா என சோதனை செய்ய கூகுள் சர்ச் இல் என தேடிப்பார்த்தோம் . அப்படி பார்க்கையில் இந்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தபட்ட இணைய தளமும் , குழந்தைகளை பாலியல் தொந்தரவிற்கு உட்படுத்துவது குற்றம் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது .

Child pornography keywords banned in Google



மேலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு எண்ணான 1098 உம் காட்டப்படுகிறது .

பெரிய சர்ச் நிறுவனங்கள் இத்தகைய நடவெடிக்கையை எடுத்தாலும் பல இணையதளங்கள் இந்திய அரசால் முடக்கப்பட்டாலும்  முழுமையாக இந்த வீடியோக்களை தடை செய்ய இயலவில்லை என்பதே நிதர்சனம் . சிலர் பிராக்சி , VPN போன்றவற்றினை பயன்படுத்துவதும் முக்கிய காரணம் .

தற்போது எடுக்கப்பட்டுள்ள முயற்சி வரவேற்கப்படவேண்டியது.


TECH TAMILAN

Exit mobile version