டிசம்பர் 04,2019 – புதன்கிழமை அன்று environmental think tank Germanwatch என்ற அமைப்பு 181 நாடுகளில் 2018 ஆம் பருவநிலை மாற்றத்தின் காரணமாக நடந்த பாதிப்புகளை ஆய்வு செய்து அந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி பருவநிலை மாற்றம் காரணமாக அதிக பாதிப்புகளை கண்ட நாடுகளில் பட்டியலில் 5 ஆம் இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஜப்பான் முதல் இடத்திலும் அதனைத்தொடர்ந்து பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, மடகாஸ்கர் நாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் தான் அதிகப்படியான பாதிப்புகள் நடைபெற்று இருக்கின்றன. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை மற்றும் அதனால் நிலச்சரிவு பிரச்சனைகளால் பாதிப்படைந்தது கேரளா. இந்த பாதிப்பில் 324 பேர் மரணம் அடைந்தார்கள், 2,20,000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 20000 வீடுகளும் 80 அணைகளும் பாதிப்படைந்தன. அடுத்ததாக தமிழகத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்திய கஜா புயலின் தாக்கமும் இந்தப்பட்டியலில் நாம் முன்னிலை வகிக்க காரணம்.
1999 முதல் 2018 வரையிலான பாதிப்புகளை ஆராய்ந்தால் அதில் புவேர்ட்டோ ரிக்கோ முதலிடம் வகிக்கிறது. இந்தப்பட்டியலில் இந்தியா 17 ஆம் இடம் வகிக்கிறது.