Site icon Tech Tamilan

ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டை விமர்சித்த மார்க் ஜுக்கர்பெர்க்

பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்போவதில்லை, கோகோ கோலா அதிரடி, ஏன்? | “Stop Hate For Profit”

பேஸ்புக்கில் விளம்பரம் செய்யப்போவதில்லை, கோகோ கோலா அதிரடி, ஏன்? | “Stop Hate For Profit”

Facebook founder Mark Zuckerberg unhappy about the apple iOS 14 changes


பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் ஆப்பிள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக iOS 14 இல் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல கட்டுப்பாடுகள் குறித்து தான் தனது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்

அண்மையில் தனது பணியாளர்களுடன் ஆன்லைன் உரையாடலில் பங்கேற்கும் போது ஆப்பிள் நிறுவனம் தனது iOS 14 இல் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஒரு பணியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது “ஆப்பிள் நிறுவனம் ஆரோக்கியமான போட்டியை தடுக்கிறது, புதுமைகளை தடுக்கிறது, கட்டுப்பாடற்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது” என விமர்சித்து இருக்கிறார் மார்க்.

பேஸ்புக் vs ஆப்பிள்

பயனாளர்களை பின்தொடர்வதில் ஆப்பிள் நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிற தடை தான் தற்போது பேஸ்புக் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அந்நியப்பட வைத்திருக்கிறது. உதாரணத்திற்கு, iOS 14 இல் ஒரு ஆப்பானது பயனாளரின் IDFA identifier ஐ ரெகார்ட் செய்வதற்கான அனுமதியை பயனாளர் வெளிப்படையாக கொடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. IDFA identifier ஐ பெற்றால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பயனாளரை பின்தொடர்ந்த்து அவருடைய தேவைக்கு ஏற்ற விதத்திலான விளம்பரங்களை காட்டிட முடியும்.

ஆப்பிள் தனது iOS 14 இல் வெளிப்படையாக அனுமதி கொடுக்கும் ஆப்சனை வைத்திருப்பதால் பயனாளர்கள் பெரும்பாலானவர்கள் “No” கொடுக்கவே வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்த பயனாளர்களை பின்தொடர்வதில் பின்னடைவு ஏற்படுகிறது என தெரிவிக்கிறது பேஸ்புக். இது குறித்து தனது பிளாக்கில் ஒரு கட்டுரையையும் வெளியிட்டு இருக்கிறது [Facebook blogpost]. Audience Network ஐ பயன்படுத்தி ஒரு பயனாளருக்கு ஏற்ற விளம்பரத்தை காண்பிப்பதில் தொய்வு ஏற்படுகிறது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது பேஸ்புக்.

சோதனை முயற்சியில் 50% க்கும் அதிகமான அளவில் பப்ளிசர்களின் வருமானம் பாதிக்கப்படுவதாக தெரியவந்து இருக்கிறது. iOS 14 முழு வீச்சில் செயல்படும் போது வருமான குறைவு மேலும் வீரியமடையும் என பேஸ்புக் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பயனாளரும் புதியவர் போன்றே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு விளம்பரங்கள் காண்பிக்கப்படும். ஆகவே பயனாளரின் கடந்த கால செயல்பாடுகளை பொறுத்து விளம்பரங்களை காண்பிப்பதில் சிக்கல் எழும். இதனால் பயனற்ற பல விளம்பரங்களை காண்பிக்க வேண்டிய தேவை ஏற்படும்.

இதுபோலவே அண்மையில் ஆப்பிள் பிளேஸ்டோரில் பேஸ்புக் ஆப் இடம்பெறுவதற்கு முன்னதாக  Instant Games எனும் வசதியை பேஸ்புக் ஆப்பிலிருந்து நீக்குமாறு ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டது.

ஒரு ஆப் ஆப்பிள் பிளேஸ்டோரில் இடம்பெறுவதற்கு 30% வரியை ஆப்பிள் கேட்கிறது உள்ளிட்ட பல தகவல்களை பயனாளர்களுக்கு காண்பித்து அவர்களுடைய பணம் எந்தவகையில் போகிறது என்பதை காண்பிக்கும் ஒரு வசதியையும் ஆப்பிள் நீக்கச்சொல்லி இருக்கிறது.

வெளிப்படையாக விமர்சித்த மார்க் ஜுக்கர்பெர்க்

இதுபோன்ற தொடர்ச்சியான செயல்பாடுகளினால் தான் 50,000 பணியாளர்கள் கலந்துகொண்ட ஒரு ஆன்லைன் கலந்துரையாடலில் ஒரு பணியாளர் கேட்ட கேள்விக்கு ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்தார் மார்க் ஜுக்கர்பெர்க். அப்போதுதான் “ஆப்பிள் நிறுவனம் ஆரோக்கியமான போட்டியை தடுக்கிறது, புதுமைகளை தடுக்கிறது, கட்டுப்பாடற்ற முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது” என விமர்சித்து இருக்கிறார் மார்க்.

Exit mobile version