Site icon Tech Tamilan

Facebook stored Passwords in Plain Text – Change your password now, Experts

facebook

facebook

Change your password now

Facebook இல் பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் Plain Text ஆக எவரும் படிக்கும் விதத்தில் சேமிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே உங்களது பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.


பல மில்லியன் கணக்கான facebook பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் plain – text இல் சேமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது . இந்த தகவல்கள் facebook இன் சர்வரில் சேமிக்கப்பட்டு இருந்தாலும் facebook இல் வேலைபார்ப்பவர்களால் எளிதில் திருட முடியும் . என்கிரிப்ட் அல்லது ஹேஷிங் செய்யப்படாமல் நேரடியாக இந்த பாஸ்வேர்டுகள் சேமிக்கப்பட்டு இருக்கின்றன . இவற்றில் 2012 ஆம் ஆண்டு பாஸ்வேர்டுகளும் அடங்கும்.

Kerbs on Security இல் இதுகுறித்த தகவல் வெளியானவுடன் , தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள் பெரும்பாலனவர்கள் – உடனடியாக அனைவரும் password ஐ மாற்ற வேண்டும் மற்றும்  இரண்டு அடுக்கு பாதுகாப்பு (2FA) முறையை ON செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் .

ஏற்கனவே பலமுறை தகவல் பாதுகாப்பு குறைபாடு பிரச்சனைகளை சந்தித்து வந்திருக்கின்றது . Passwords in Plain Text என்கிற பிரச்சனை பேசப்பட்டவுடன்
facebook சார்பாக அதன் இணையப்பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கின்றது . அதில் , கடந்த ஜனவரி மாதம் நடந்த தகவல் பாதுகாப்பு சோதனையில் சில பயனாளர்களின் கடவுச்சொல் பிறரால் படிக்கும் விதத்தில் சேமிக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தோம் . எங்களது login system பாஸ்வேர்டுகளை மாஸ்க் செய்திடும் முறையிலானவை , அப்படி இருக்கும்போது இவை படிக்கின்ற விதத்தில் சேமிக்கப்பட்டு இருப்பது எங்களது கவனத்தை பெற்றது .

 

இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்துள்ளோம் , கூடுதலாக அந்த
பயனாளர்களுக்கு தகவலையும் தெரிவிக்க இருக்கின்றோம் . அனைத்து பாஸ்வேர்டுகளுமே எங்கள் சர்வரில் சேமிக்கப்பட்டு இருந்தன , இதுவரை வெளியில் இருந்தோ அல்லது உள்ளே வேலை பார்ப்பவர்களாலோ இந்த password கள் பயன்படுத்தப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போதைய யுகத்தில் மிகப்பெரிய சமூகவலைத்தளமாக இருக்கக்கூடிய Facebook பல தொழில்நுட்ப குறைபாடுகளை அண்மையில் சந்தித்து வருவது வருத்தத்திற்கு உரியது. இந்த பிரச்சனைகளை கடந்து பாதுகாப்பான சமூக வலைத்தளமாக Facebook வரவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.

Password Checkup Extension : உங்களது பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டுள்ளதா? என்பதனை அறிவது எப்படி?

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version