Site icon Tech Tamilan

Facebook Down பிரச்சனை தீர்ந்தது – இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் செயல்படுகிறது

facebook mark zukerberg

facebook mark zukerberg

facebook mark zukerberg

Issue Fixed

ஜூலை 04 அதிகாலை பிரச்சனையை சரி செய்துவிட்டதாக Facebook நிறுவனம் அறிவித்துள்ள்ளது

நேற்று (ஜூலை 03) மாலை முதல் இன்ஸ்டாகிராம்,வாட்ஸ்ஆப்,முகப்புத்தகம் ஆகியவற்றில் இமேஜ் மற்றும் வீடியோ டவுன்லோடு ஆகவில்லை என்ற பிரச்சனை எழுந்தது. ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக இந்த பிரச்சனை எழுந்தது. முன்னனி சமூக வலைதளங்கள் திடீரென முடங்கி போனவுடன் இணைய பயனாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர். ஒருவழியாக இன்று (ஜூலை 04) அதிகாலை பிரச்சனையை சரி செய்துவிட்டதாக Facebook நிறுவனம் அறிவித்துள்ள்ளது.

காரணம் என்ன?

இன்ஸ்டாகிராம்,வாட்ஸ்ஆப், Facebook ஆகிய மூன்றுமே ஒரு நிறுவனத்தின் கீழ் செயல்படுகிற கிளை நிறுவனங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ள Facebook, வழக்கமான பராமரிப்பு பணிகளின் போது ஏற்பட்ட சில குளறுபடிகளால் இமேஜ் மற்றும் வீடீயோவை அப்லோட் செய்வதிலும் டவுன்லோட் செய்வதிலும் பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனை குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாக்ராமிலும் பதிவிட்டு இருக்கிறது Facebook .

ஒரே நிறுவனத்தின் கீழ் இருந்தால் இதுதான் பிரச்சனை?

பெரும்பாலான நிறுவனங்களின் வணிக மற்றும் தொடர்பு நிலையமாக Facebook உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் தான் இருக்கின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் சிறிய சிறிய நிறுவனங்களை வாங்கி தன்னுடைய கிளை நிறுவனமாக மாற்றிக்கொள்ளுகிற போக்கு அண்மைக்காலமாகவே நடந்துவருகிறது. இப்படி அனைத்து நிறுவனங்களுமே ஒரு நிறுவனத்தின் கீழ் வரும்போது ஒரேயடியாக பாதிக்கப்படுவது அல்லது ஒரேயடியாக அணைந்து தகவல்களும் திருடப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. கவனிப்பார்களா?





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version