Site icon Tech Tamilan

கேன்சர் சிகிச்சையில் மாபெரும் முன்னேற்றம் | அறிகுறி வருவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கலாம்

கேன்சர் சிகிச்சையில் மாபெரும் முன்னேற்றம் | அறிகுறி வருவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கலாம்

Cancer Treatment

90% பேருக்கு கேன்சர் அறிகுறி தோன்றுவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கான குறியீடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5% பேருக்கு இதில் தவறான முடிவுகளும் பெறப்பட்டன.

கேன்சர் நோய் காரணமாக இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தாமதமாக சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் தான். விரைவாக கேன்சர் நோயை ஒருவரிடம் கண்டுபிடிக்க பெரும்பாலான ஆய்வுகள் உலகம் முழுமைக்கும் நடைபெற்றுவருகின்றன. தற்போது Nature Communications எனும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் படி ஒருவருக்கு கேன்சர் நோய்க்கான அறிகுறி ஏற்படுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவரது ரத்தத்தை சோதிப்பதன் மூலமாக கேன்சர் உருவாகுமா என்பதை கண்டறிய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். 

 

இதுகுறித்து சான் டியாகோவில்  இருக்கும் University of California யில் பயோ என்ஜினீயராக இருக்கும் குன் ஜாங் தெரிவிக்கும் போது “நாங்கள் சோதனை முடிவில் காட்டியது என்னவென்றால் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே கேன்சர் நோயாளிகளின் ரத்தத்தில் கேன்சர் உருவாவதற்கான அறிகுறிகள் இருந்ததை காட்டியுள்ளோம்” என தெரிவித்துள்ளார். 

 

கடந்த காலங்களில் புற்றுநோயை கண்டறிவதற்கு நோய் பாதித்தவரின் ரத்த மாதிரிகளை பெறுவார்கள். அதில் புற்றுநோயை உருவாக்கும் வீரியமிக்க உயிரணுக்கள் இருக்கின்றனவா என பார்ப்பார்கள். அதாவது, மரபணு மாற்றங்கள், டி.என்.ஏ மெத்திலேஷன் (டி.என்.ஏவுக்கு ரசாயன மாற்றங்கள்) அல்லது குறிப்பிட்ட இரத்த புரதங்கள் இருக்கின்றனவா என பார்ப்பார்கள். புற்றுநோயை கண்டறிவதில் இதுவொரு சிறந்த முறை என்பதை நிரூபிக்க முடியாது என தெரிவிக்கும் குன் ஜாங் அவர்களது முறையை விளக்குகிறார். 

 

சாங் மற்றும் அவருடன் பணியாற்றும் நிபுணர்கள் 2007 ஆம் ஆண்டு கேன்சர் அறிகுறி இல்லாத 1 லட்சத்து 23 ஆயிரம் பேரை சோதனைக்கு எடுத்துக்கொண்டார்கள். இவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்ட்டன. இவர்களிடம் இருந்து அவ்வப்போது பெறப்பட்ட ரத்த மாதிரிகளை சேகரித்து சோதிப்பதற்காக சோதனைக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கிட்டத்தட்ட 16 லட்சம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்த 10 ஆண்டுகளில் இவர்களில் 1000 பேருக்கு கேன்சர் நோய் உருவானது. 

PanSeer என அழைக்கப்பட்ட பரிசோதனை வயிறு, உணவுக்குழாய், பெருங்குடல், நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவற்றில் கேன்சர் ஏற்பட்டால் அதனை கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த முறையில் DNA வை மாற்றி அமைக்கக்கூடிய வேதிப்பொருள்கள் ரத்தத்தில் இருக்கின்றனவா கண்டறியப்படும். இரத்த மாதிரியிலிருந்து டி.என்.ஏவை தனிமைப்படுத்துவதன் மூலமும், புற்றுநோய் இருப்பதைக் குறிக்கும் மிகப் பெரிய வாய்ப்பு இருப்பதாக முன்னர் அடையாளம் காணப்பட்ட 500 இடங்களில் டி.என்.ஏ மெத்திலேசனை அளவிடுவதன் மூலமும் பான்சீர் சோதனை செயல்படுகிறது. ஒரு மெஷின் லேர்னிங் வழிமுறை கண்டுபிடிப்புகளை ஒரு மதிப்பெண்ணாக தொகுக்கிறது, இது ஒரு நபருக்கு நோய் இருப்பதற்கான வாய்ப்பைக் குறிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த 191 பங்கேற்பாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகளை பரிசோதித்தனர். பின்னர் அதே எண்ணிக்கையிலான ஆரோக்கியமான நபர்களுடன் அதனை ஒப்பிட்டனர் . 

 

அப்போது 90% பேருக்கு கேன்சர் அறிகுறி தோன்றுவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே அதற்கான குறியீடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5% பேருக்கு இதில் தவறான முடிவுகளும் பெறப்பட்டன. 

 

இந்த கண்டுபிடிப்பு குறித்து குறிப்பிடும் சாங், இன்னும் பல்வேறு மேம்பாடுகள் இந்த கண்டுபிடிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் என  ஒப்புக்கொள்கிறார். மீண்டும் மீண்டும் செய்யப்படும் சோதனைகள், அரசு சார்ந்த அமைப்புகளின் ஆதரவு ஆகியவை நடைபெற்றால் இன்னும் இதில் வெற்றிபெற முடியும் என்கிறார். “ஆரம்பக்கட்டத்திலேயே கேன்சர் நோய் பாதிப்பை கண்டறிவது என்பது மிகப்பெரிய விசயம் எனவும் குறிப்பிடுகிறார். 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version