How to FIND and REPLACE values in Excel Just in 2 Minutes

எக்ஸலில் இருக்கக்கூடிய ஆப்சன்களில் மிகவும் பயனுள்ள ஆப்சன் தான் find / replace. நீங்கள் எக்ஸலில் பல தகவல்களை பதிவிட்டு முடித்துவிட்டிர்கள். ஆனால் தற்போது ஒரே ஒரு வார்த்தைக்கு பதிலாக வேறொரு வார்த்தையை பதிவிட்டால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறீர்கள் அல்லது ஒரு வார்த்தைக்கு தவறான ஸ்பெல்லிங் (Spelling) பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அதனை மாற்ற விரும்புகிறீர்கள். இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு செல்லாக சென்று அந்த வார்த்தையை மாற்றிட வேண்டிய அவசியம் இல்லை. find / replace ஆப்சனை பயன்படுத்தி ஒரு நொடியில் மாற்றிடலாம். வார்த்தைகள் மட்டுமல்ல ஒரு எழுத்து , எண் என எதனையும் மாற்றிடலாம்.

Find Syntax : Ctrl + F
Replace Syntax : Ctrl + H

Find and Replace Steps :

> முதலில் எந்த ரோவ் (Row), காலம்(Column), சீட் (Sheet ) இல் ஒரு டேட்டாவுக்கு பதிலாக இன்னொன்றை மாற்றிட விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்யுங்கள்.

> Ctrl + H ஐ அழுத்திடுங்கள்

> Find What இல் பழைய டேட்டாவை பதிவிடுங்கள்

> Replace With இல் புதிய டேட்டாவை பதிவிடுங்கள்

> கிளிக் “Replace All “

Previous

Copy Paste செய்வது எப்படி?

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.