CRED App
அதாவது சரியானவர்களுக்கு தொடர்ந்து வெகுமதி அளிப்பதன் மூலமாக அவர்களை ஊக்குவிக்க முடியும் – அதன் மூலமாக ஒரு நெருக்கடியில்லாத பொருளாதார சூழலை உருவாக்கிடவேண்டும் “
CRED App என்பது ஆன்லைன் மூலமாக உங்களது கிரெடிட் கார்டுக்கு பில் கட்டும் வசதி கொண்ட ஒரு ஆப். நீங்கள் சரியான நேரத்திற்குள் (last due for paying credit card bill) பில் கட்டிவிட்டால் உங்களுக்கு ‘cred coins’ வழங்கப்படும். அந்த ‘cred coins’ ஐ கொண்டு நீங்கள் Myntra, Blue Tokai, BookMyShow, and Airbnb போன்ற 30 க்கும் மேற்பட்ட பிராண்டு பொருள்களை வாங்க பயன்படுத்திக்கொள்ள முடியும். CRED ஆனது புகழ்பெற்ற ஸ்டார்ட்அப் நபரான குணால் ஷா (Kunal Shah) என்பவரால் துவங்கப்பட்டிருக்கிறது. குணால் ஷா ஏன் இந்த நிறுவனத்தை உருவாக்கினார்? இந்நிறுவனம் எப்படி செயல்படுகிறது? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
Founder of FreeCharge
CRED App பிசினஸை துவங்குவதற்கு முன்னதாக பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமான Freecharge எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக துவங்கி நடத்தினார். FreeCharge என்பது எளிமையாக மொபைல்களுக்கு recharge செய்யும் வசதி கொண்ட இணையதளம், அங்கே சென்று recharge செய்பவர்களுக்கு கூப்பன் வழங்கப்படும். பின்னர் இந்த FreeCharge கம்பெனியை $400 மில்லியன் டாலர்களுக்கு Snapdeal நிறுவனத்திடம் விற்றார். தற்போது Freecharge நிறுவனம் Axis நிறுவனத்திடம் இருக்கிறது.
FreeCharge நிறுவனத்தின் வெற்றியினால் முன்னனி Startup Founder ஆக அறியப்பட்டார் குணால் ஷா.
How Cred Started ?
2015 ஆம் ஆண்டு FreeCharge நிறுவனத்தை விற்ற பிறகு பயணம் செய்வது, பிற வளர்ந்த நாடுகளை கவனிப்பது அவற்றிடம் இருந்து படிப்பினைகளை பெறுவது என நீண்ட காலத்தை செலவு செய்திருக்கிறார். அப்படி கவனித்தபோது வளர்ந்த மேலை நாடுகளில் இருக்கும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் தனி மனிதர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதனை கண்டிருக்கிறார். அங்கிருக்கும் பெட்ரோல் பங்குகளில் ஆட்கள் இருப்பதில்லை, கேஷியர் இல்லாத பல கடைகள் அங்கு இருக்கின்றன என சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட நிகழ்வுகள் “அதாவது சரியானவர்களுக்கு தொடர்ந்து வெகுமதி அளிப்பதன் மூலமாக அவர்களை ஊக்குவிக்க முடியும் – அதன் மூலமாக ஒரு நெருக்கடியில்லாத பொருளாதார சூழலை உருவாக்கிடவேண்டும் ” என்ற எண்ணத்தை அவரிடம் விதைத்திருக்கிறது.
தற்போதைய சூழலில் நீங்கள் சரியான நேரத்தில் கிரெடிட் கார்டு பில் கட்டாமல் போனால் அல்லது உங்களது பில்லில் ஒரு ரூபாய் குறைத்து கட்டிவிட்டால் கூட 30 விதமான மறைமுக கட்டணங்களையும் வட்டியையும் கட்டவேண்டி இருக்கும். தற்போது இருக்கும் முறைகள் நீங்கள் தவறு செய்வதற்கு ஏதுவாகவே பல வழிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே தான் சரியான நேரத்திற்குள் தங்களது கிரெடிட் கார்டு பில் கட்டுவதனை ஊக்குவிக்கும் விதமாக சரியான நேரத்திற்குள் பில் கட்டுபவர்களுக்கு reward வழங்கி ஊக்குவிக்கும் Cred ஐ துவங்கும் யோசனை ஏற்பட்டது. எந்த விதத்தில் செலவினை குறைப்பது, சரியான லோன் மற்றும் இன்சூரன்ஸ் பெறுவது எப்படி, எதில் முதலீடு செய்வது என்பது போன்று பணம் சார்ந்த விசயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது CRED App.
How CRED app will work?
நீங்கள் இந்த ஆப்பை டவுன்லோடு செய்தபிறகு பின்வரும் தகவல்களை கொடுக்கவேண்டி இருக்கும்,
Nameஅப்படி approval கிடைத்தபின்
Mobile number
Email ID
Date of Birth
PAN number
Address and Pin Code
Gender
பின்னர் Experian and CRIF போன்ற நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் மூலமாக உங்களது Credit Card இன் உடைய ஸ்கோர் பெறப்படும். அது 750 க்கும் மேலே இருந்தால் மட்டுமே உங்களுக்கு approval கிடைக்கும். அப்படி approval கிடைத்தபின் உங்களது மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கிரெடிட் கார்டுகளும் CRED app இல் சேர்க்கப்படும்.
Special Features
CRED app இரண்டு முக்கிய வசதிகளை கொடுக்கிறது. Card Protect” and “Smart Statements” தான் அவை. உங்களது கிரெடிட் கார்டு பில்களை ஆராய்ந்து தேவையில்லாமல் ஏதேனும் பணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆராய்ந்து உங்களுக்கு தகவல்களை வழங்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் பில் செலுத்துவதற்கான தேதியை நியாபகப்படுத்துவது முதல் பல்வேறு வசதிகளையும் வழங்குகிறது.
CRED – Reward :
CRED அனைவரையும் ஏற்றுக்கொள்வது இல்லை. குறிப்பிட்ட ஸ்கோர் வைத்திருப்பவர்களை மட்டுமே ஏற்கிறது. அவர்கள் சரியாக செயல்படும் போது அவர்களுக்கு reward coin வழங்கப்படுகிறது. CRED உடன் பார்ட்னர்ஷிப் வைத்திருக்கும் Myntra, Blue Tokai, BookMyShow, and Airbnb போன்ற 30 க்கும் மேற்பட்ட பிராண்டு பொருள்களை வாங்க பயன்படுத்திக்கொள்ள முடியும்.
CRED Privacy Policy நீங்க கவனிக்க வேண்டியது?
எந்தவொரு ஆப் அல்லது எதிலும் கணக்கு துவங்குவதற்கு முன்னதாக அவர்களின் பிரைவசி பாலிசியை படிப்பது மிகவும் நல்லது . வீடியோ எடிட் செய்கின்ற ஒரு ஆப்பாக இருக்கும் ஆனால் அவர்கள் நம் மொபைலில் இருந்து பல தகவல்களை எடுப்போம் என கூறியிருப்பார்கள். ஆகவே பிரைவசி பாலிசியை படியுங்கள். நாங்கள் கிரெட் இன் பிரைவசி பாலிசியை படித்தோம், அதில் மிகவும் கவனிக்கவேண்டிய விசயம், கிரெடிட் கார்டு தகவல்கள் உங்களது மின்னஞ்சலுக்கு வரும்போது அதனை திறந்து படிப்போம் என்ற விசயம் இருக்கிறது. நீங்கள் இதற்காக முன்னரே permission கொடுத்திருந்தால் தான் இதனை அவர்களால் செய்திட முடியும். இது குறித்து அவர்கள் குறிப்பிடும் போது, கிரெடிட் கார்டு தொடர்பான மின்னஞ்சல்களை மட்டுமே படிப்போம் என உறுதிகூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் நேரடியாக படிக்கப்போவதில்லை AI தான் படிக்கப்போகிறது. நீங்கள் என்ன பொருள் எவ்வளவு விலைக்கு வாங்குகிறீர்கள்? எப்போது பணம் செலுத்துகிறீர்கள்? நீங்கள் எப்போது எந்த பொருளை வாங்குகிறீர்கள்? என பல கேள்விகளுக்கான பதில் அவர்களிடத்தில் இருக்கும்
நீங்கள் வேண்டுமானால் உங்களது பர்மிஷனை இந்த லிங்கில் சென்று https://myaccount.google.com/permissions நீக்கிக்கொள்ளலாம்.
CRED க்கு வருமானம் எங்கிருந்து கிடைக்கிறது?
எந்தவொரு நிறுவனத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு அவர்களுக்கு எங்கிருந்து வருமானம் கிடைக்கிறது என்பதனை அறிந்தாலே போதும். CRED க்கு எங்கிருந்து வருமானம் கிடைக்கிறது என்பது குறித்த சரியான தகவல்களை நம்மால் பெற இயலவில்லை. ஆனால் அந்த துறையில் இருப்பவர்கள் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்கள் அதனைத்தான் பார்க்க இருக்கிறோம்.
>> CRED நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கிற நபர்களை தான் வாடிக்கையாளர்களாக வைத்திருக்கிறது. அவர்களுக்கு வழங்கப்படும் reward மூலமாக குறிப்பிட்ட பிராண்டுகளில் பொருள்களை வாங்க முடியும் என்று சொன்னோம் அல்லவா? – புதிய பிராண்டுகளை நல்ல வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமானது, ஆகவே பிராண்டுகள் குறிப்பிட்ட பணம் செலுத்தி CRED உடன் தொடர்பு வைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
>> தகவல்கள் தான் முதலீடே. CRED பல நல்ல வாடிக்கையாளர்களின் வரவுசெலவு கணக்குகளை நிர்வகிப்பதனால் அதன் மூலமாக பல முடிவுகளை எடுக்க முடியும். வரப்போகும் காலங்களில் இவர்களே ஒரு கிரெடிட் கார்டு போன்ற ஒரு விசயத்தை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
உங்களுக்கு வேறு ஏதேனும் ஒரு ஆப் அல்லது நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமா? அப்படியென்றால் கமெண்டில் பதிவிடுங்கள்.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.