Site icon Tech Tamilan

ES File Explorer App is not Safe | உங்களது மொபைலில் இருக்கும் தகவலை திருடலாம்


கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களும் பயன்படுத்தக்கூடிய மொபைல் ஆப் ES File Explorer பாதுகாப்பு அற்றது எனவும் அந்த ஆப்பில் திரைமறைவில் ஒரு சர்வர் இயங்குவதாகவும் அதுவே பயனாளரின் மொபைலில் இருக்கக்கூடிய தகவலை திருட உதவுவதாகவும் ஹேக்கர் ஒருவர் கண்டறிந்துள்ளார் .


——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

ES File Explorer Can Be Hacked: Elliot Alderson

 

எளிமையான முறையில் ஆண்ட்ராய்டு மொபைல் அல்லது டேப்லெட்டில் உள்ள file , data ,documents முதலியவற்றை பிரவுஸ் செய்வதற்கு ES File Explorer ஆப் பயன்படுவதனால் கிட்டத்தட்ட 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் இந்த ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

சில மாதங்களுக்கு முன்பாக ஆதார் தகவல்களை திருட முடியாது  எனக்கூறி டிராய் சேர்மன் RS சர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு சவால் விடுத்தபோது , சர்மாவின் தகவல்களை வெளியிட்டு அதிர்வலைகளை கிளப்பினார் , எலியட் அல்டேர்ஸ்ன் எனும் ஹேக்கர் . பின்னர் அந்த தகவல் ஆதார் மூலமாக திருடப்பட்டது அல்ல , பொது வெளியில் கிடைத்த தகவல்கள் என மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

 


அந்த எலியட் அல்டேர்ஸ்ன் தான் தற்போது, ES File Explorer ஆப் பாதுகாப்பற்றது எனவும் மொபைலில் இருந்து தரவுகளை திருட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


எப்படி  ES File Explorer ஆப் ஹேக் செய்யப்படுகிறது?

 

ES File Explorer ஆப்பில் ஒரு hidden web server இயங்குகிறது. ES File Explorer ஆப்பில் ஒரு வீடீயோவை கிளிக் செய்கிறோம் எனில் MX Player போன்ற வேறொரு ஆப்பில் வீடீயோவை play செய்வதற்கு இந்த hidden web server ஆனது HTTP Protocol ஐ பயன்படுத்தி தான் இந்த வேலையை செய்கிறது. இந்த portal ஐ பயன்படுத்தி தான் ஹேக்கர்களால் உங்களது மொபைலில் இருந்து தகவல்களை திருட முடியும் என்கிறார் எலியட் அல்டேர்ஸ்ன்.

 

இதற்காக அவர் சிறியதொரு program ஒன்றினை எழுதியுள்ளார், அதனைக்கொண்டு ஒரே WIFI அல்லது LAN இணைப்பில் இயங்கக்கூடிய மொபைல் அல்லது டேப்லெட்டில் இருக்கும் Images, Videos , Phone Numbers போன்ற அனைத்து தகவல்களையுமே எடுக்க முடியும். இதனை ஒரு செயல்முறை விளக்கமாகவே ES File Explorer செய்து காண்பித்து இருக்கிறார் எலியட் அல்டேர்ஸ்ன்.


ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பயப்பட வேண்டுமா?

 


நிச்சயமாக பயப்படத்தான் வேண்டும். ஒரே WIFI அல்லது LAN இல் இணைந்திருந்தால் மட்டுமே தகவலை திருட முடியும் என்றிருந்தாலும் நம்மோடு இணைத்திருப்பவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதனை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. ஹேக்கர்களே கூட நமது WIFI அல்லது LAN இல் இணைந்து தகவலை திருடவும் வாய்ப்பிருக்கிறது.

 

ES File Explorer App ஐ அதிக நபர்கள் பயன்படுத்துவதனால் அந்த நிறுவனம் இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு விரைவில் இதனை பாதுகாப்பானதாக மாற்றிட வேண்டும்.

——————————————————————————————-
Advertisement:





——————————————————————————————–

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் WhatsApp சிறந்த தகவல் பற்றிமாற்றத்திற்கான ஓர் ஆப்பாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்கள் WhatsApp ஐ பயன்படுத்தினாலும் அதில் இருக்கக்கூடிய சிறந்த Features ஐ பலர் ...
உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...

TECH TAMILAN

Exit mobile version