Site icon Tech Tamilan

நியூராலிங்க் என்றால் என்ன? Neuralink In Tamil

Neuralink’s Elon musk brain reading tech

Neuralink’s Elon musk brain reading tech

Neuralink’s system embedded in a laboratory rat

Mind Reading Teachnology

மூளை செயலிழப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் முடங்கிப்போன மனிதர்கள் கணினி அல்லது செல்போன் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்திடச்செய்வதுதான் இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம். 2020 இல் மனிதர்களில் இந்த கருவி சோதனை செய்யப்பட இருக்கிறது.


யார் இந்த எலன் மஸ்க்?

Click Here 

சிலிக்கான் வேலியில் 1 பில்லியன் மதிப்புள்ள மூன்று நிறுவனங்களை நிர்வகித்த இரண்டாவது நபர் என்ற மாபெரும் சாதனைக்கு உரியவர் Elon Musk (எலன் மஸ்க்). புதிது புதிதாக எதையாவது யோசித்துக்கொண்டே இருக்கும் நபர்கள் பலர் இருக்கலாம், ஆனால் நினைத்தை உருவாக்கிட மிகப்பெரிய தொகையினை செலவு செய்ய துணிபவர்களில் முதன்மையானவர் யார் என்றால் எலன் மஸ்க்கை கூறலாம். அவருடைய துணை நிறுவனமான நியுராலிங்க் (Neuralink) ஏதோ ஒன்றினை ரகசியமாக செய்து வருகிறது என்பது மட்டும் தான் இதுவரைக்கும் வெளியில் தெரிந்த விசயம். தற்போது அந்த நியுராலிங்க் (Neuralink) நிறுவனம் மனித மூளையையும் இயந்திரத்தையும் இணைக்கின்ற இணைப்பானை (brain-machine interface) உருவாக்குகிற பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்  எலன் மஸ்க்.

இந்த கண்டுபிடிப்பின் மூலமாக, மூளை செயலிழப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் முடங்கிப்போன மனிதர்கள் கணினி அல்லது செல்போன் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்திடச்செய்வதுதான். 2020 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒரு நோயாளிக்கு சோதனை செய்து பார்த்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் எலன் மஸ்க். ஜூலை 16, 2019 அன்று நடந்த நிகழ்வில் இந்த திட்டம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார். தான் தற்போது இந்த அறிவிப்பினை மேற்கொள்ளுவதற்கு முக்கிய காரணம், உலகில் இருக்கும் அறிவாளிகள் இந்த நிறுவனத்தில் இணைந்து பணியாற்றிட வரவேண்டும் என்பதற்காகத்தான் என்றார். (நீங்களும் அறிவாளியா இருந்தா விண்ணப்பிக்கலாம்)

Big Advantage “threads” : இணைப்பான்கள்

தற்போது இருக்கக்கூடிய இணைப்பான்களை (interface) காட்டிலும் மிகவும் குறைவான பாதிப்புகளை மூளைக்கு ஏற்படுத்துகிற “threads” ஐ நியுராலிங்க் (Neuralink) நிறுவனம் உருவாக்கிவருகிறது. 4 முதல் 6 மைக்ரோமீட்டர் அளவுடைய இந்த “threads” ஆனது மனிதர்களின் தலைமுடியினைவிட அளவில் சிறியது. ஆனாலும் இதில் மிக அதிக அளவிலான தகவல்களை அனுப்ப மற்றும் பெற முடியும் என்பது சிறப்பான விசயம். தற்போது மூளையில் இணைப்பினை உருவாக்கிட ரோபோ ஒன்றினையும் இந்த நிறுவனம் உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விசயம்.

எப்படி இந்த இணைப்பு செயல்படுகிறது?

மூளையில் இருக்கக்கூடிய தசை பகுதி துளையிடப்பட்டு அங்கே “threads” ஐ பொருத்துவார்கள். அந்த “threads” ஆனது வெளிப்புறமாக இருக்கின்ற கருவியுடன் (processor) இணைக்கப்பட்டு இருக்கும். பின்னர் அந்த கருவியினை புளூடூத் உடன் மொபைல் அல்லது கணினியோடு இணைத்துவிட்டால் குறிப்பிட்ட அந்த கருவியை இயக்க முடியும். அதாவது நீங்கள் நினைத்தாலே போதுமானது கருவி செயல்படும். ஆனால் அதற்கான பயிற்சிகள் அவசியமென்று நினைக்கிறேன்.


குரங்கால் கணினியை இயக்க முடியும்

இந்த நிகழ்வில் பேசும் போது “ஒரு குரங்கு தனது மூளையால் கணினியை கட்டுப்படுத்தியது” என தெரிவித்தார். எந்தவொரு சோதனையும் முதல் கட்டமாக விலங்குகளில் இருந்துதான் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் அரசாங்கத்திடம் இருந்து முறையான அனுமதி பெற்றே இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த திட்டத்தை வெளியிடப்போவதில்லை இப்போதைய சூழலில் வெளியிடப்போவதில்லை எனவும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒரு நோயாளிக்கு சோதனை செய்து பார்த்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் எலன் மஸ்க்.

மிகப்பெரிய நன்மை காத்திருக்கிறது

எந்தவொரு தொழில்நுட்பத்திலும் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும். அது பயன்படுத்துவர்களின் எண்ணத்தை பொறுத்தது. எலன் மஸ்க் இன் இந்த முயற்சியும் மிகப்பெரிய நன்மைகளை கொண்டிருக்கிறது. விபத்திலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ மூளை பாதிப்பு அடைந்தவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய பேருதவியாக இருக்கும். பேச்சு திறனை இழந்தவர்கள் கூட மீண்டும் பேச்சு திறனை அடையவைக்க முடியும் என்பது போன்ற பயன்பாடுகள் இந்த தொழில்நுட்பத்தில் இருக்கின்றன. பயன்பாட்டிற்கு வரும்போது இதற்கான செலவுத்தொகை எவ்வளவு இருக்குமென்பது தெரியவில்லை, ஆனால் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்லும் என்பது மட்டும் உண்மை.

Read this also :

யார் இந்த எலன் மஸ்க்?

Click Here 





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version