Site icon Tech Tamilan

இ-காமர்ஸ் என்றால் என்ன? E commerce meaning in tamil

நீங்கள் இன்டர்நெட் மூலமாக பொருளை விற்கிறீர்கள் அல்லது வாங்குகிறீர்கள் எனில் அதற்கு பெயர் தான் இ காமர்ஸ். இதனை தனியாகவோ அல்லது அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிற நிறுவனங்களுடன் இணைந்தோ செய்யலாம்.

[Ecommerce meaning in tamil] நீங்கள் இன்டர்நெட் மூலமாக பொருளை விற்கிறீர்கள் அல்லது வாங்குகிறீர்கள் எனில் அதற்கு பெயர் தான் இ-காமர்ஸ். இதனை தனியாகவோ அல்லது அமேசான், பிளிப்கார்ட் போன்ற பிற நிறுவனங்களுடன் இணைந்தோ செய்யலாம். இந்தப்பதிவில் இகாமர்ஸ் குறித்து விரிவாக தமிழில் பார்க்கலாம். நீங்கள் Ecommerce meaning in tamil என சர்ச் செய்திருந்தால் அதற்கான பதிலை இங்கே நிச்சயமாக பெறலாம்.

இந்தியா மிகப்பெரிய சந்தை என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே தான் பல பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்கின்றன. இந்தியாவில் அதிகரித்து இருக்கும் ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு, அதிவேக இன்டர்நெட் சேவை மற்றும் எளிதான ஆன்லைன் பண பரிவர்த்தனை இவற்றின் காரணமாக பொருள்களை மக்கள் ஆன்லைனில் வாங்க பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆகவே தான் பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இப்படி இன்டர்நெட் உதவியால் பொருள்களை விற்று வருகிறார்கள். அப்படி, இன்டர்நெட் மூலமாக பொருள்கள் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் தான் இ காமர்ஸ் என அழைக்கப்படுகிறது.

நமக்குத் தெரிந்தது அமேசான், பிளிப்கார்ட் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களைத்தான். ஆனால், சிறியதும் பெரியதுமாக சுமார் 20,000 க்கும் மேற்பட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

இ காமர்ஸ் என்பது எப்படி நடக்கிறது?

இ காமர்ஸ் குறித்து எழக்கூடிய ஒரு இயல்பான கேள்வி இது. அதற்கு முன்னதாக, இ காமர்ஸ் என்பதனை அதனை யார் செய்கிறார்கள் என்பதைப்பொறுத்து சில வகைகளாக பிரிக்கலாம்.

 

1. அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள்

2. அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பொருள்களை விற்கும் தனி நபர்கள்/நிறுவனங்கள்

3. தனி தளத்தில் பொருள்களை விற்கும் நிறுவனங்கள்

4. சமூகவலைத்தளத்தில் பொருள்களை விற்கும் சாமானியர்கள்

மேற்கூறிய நான்கு உதாரணங்களிலுமே விற்பனை என்பது இன்டர்நெட் மூலமாகவே நடக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் பல பொருள்களை தாங்களாகவே உற்பத்தி செய்தோ அல்லது இறக்குமதி செய்தோ ஆன்லைனில் விற்கிறார்கள். அதேபோல, ஒரு நிறுவனமோ அல்லது தனி நபரோ தங்களது தளத்தை பயன்படுத்தி அவர்களது பொருள்களை விற்றுக்கொள்ள அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கிறார்கள். அப்படி, அவர்களது தளத்தை பயன்படுத்தி விற்பனை நடந்தால் அதற்கான கமிஷன் தொகையை அவர்கள் பிடித்துக்கொள்வார்கள்.

அமேசான் போன்ற பெரிய இ காமர்ஸ் தளங்களை பயன்படுத்தாமல் தாங்களாவே இணையதளத்தின் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்களின் மூலமாகவோ பல நிறுவனங்கள் தங்களது பொருள்களை விற்பனை செய்து வருகின்றன.

ஒரு தனி நபர் இ-காமர்ஸ் பிசினஸில் ஈடுபட முடியுமா?


நிச்சயமாக ஒரு தனி நபரால் தனியாகவோ அல்லது அமேசான் போன்ற இ காமர்ஸ் தளங்களில் இணைந்தோ இந்த பிசினஸில் ஈடுபட முடியும். இதற்காக பெரிய முதலீடு என்பது தேவையில்லை. அதேபோல அதிக நேரத்தையும் இதற்காக அதிக நேரத்தையும் செலவு செய்திட வேண்டியது இல்லை. இந்த காரணங்களால் பலரும் தற்போது வெற்றிகரமாக இ காமர்ஸ் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக வீட்டிலேயே இருந்து வேலை செய்திட நினைக்கும் பெண்களுக்கு இ காமர்ஸ் பெரிய வரமாக மாறியுள்ளது.

இந்தப்பதிவில் ஒரு தனிநபர் எப்படி இ காமர்ஸ் பிசினஸில் ஈடுபட முடியும் என்பதையும் அதிலே சாதிக்க இருக்கும் வாய்ப்புகள் பற்றியும் பார்க்கலாம்.

ஒரு தனி நபர் எப்படி இ-காமர்ஸ் பிசினஸில் ஈடுபட முடியும்?

இ-காமர்ஸ் பிசினஸ் என்பது உங்கள் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ கொள்முதல் செய்து அவற்றை அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் லாபம் தரும் அளவில் விற்பனைக்கு வைத்து அதனை மக்கள் வாங்கும் போது அதன் மூலமாக லாபம் ஈட்டுவது தான் இ-காமர்ஸ். ஒரு தனிநபரால் நிச்சயமாக இ-காமர்ஸ் பிசினஸில் ஈடுபட முடியும்.

உதாரணத்திற்கு, உங்கள் ஊர் திருப்பூர் என வைத்துக்கொள்வோம். அங்கே விலை மிகவும் குறைவாக ஆடை உள்ளிட்டவை கிடைக்கும் என வைத்துக்கொள்வோம். அந்த ஆடை உற்பத்தியாளரிடம் நேரடியாக சென்று பேசி 100 ஆடைகளை குறைந்த விலைக்கு வாங்கி பிறகு அவற்றை புகைப்படம் எடுத்து அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற தளங்களில் லிஸ்டிங் செய்திட வேண்டும். அமேசான், பிளிப்கார்ட் தளங்களை பார்ப்பவர்கள் உங்களது பொருள்களை வாங்க ஆர்டர் கொடுத்தால் நீங்கள் அந்த பொருள்களை அனுப்பி வைக்க வேண்டும். இடைப்பட்ட தரகராக அமேசான் இருக்கும். ஒரு விற்பனைக்கு இவ்வளவு கமிஷன் என வருகிற லாபத்தில் அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். பொருளுக்கான செலவு + கமிஷன் போன்ற செலவுகள் போக கிடைப்பது உங்களுக்கு லாபம்.

அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்றவற்றில் இகாமர்ஸ் செய்திட என்ன ஆவணங்கள் வேண்டும்?

அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற தளங்களில் நீங்கள் விற்பனையாளராக இணைவதற்கு உங்களுக்கு வங்கி கணக்கு இருக்க வேண்டும், அதோடு GST இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் உங்களால் இங்கே இணைந்து பொருள்களை விற்க முடியும்.

அமேசான் அல்லது பிளிப்கார்ட் அல்லாமல் இகாமர்ஸ் பிசினஸில் ஈடுபட முடியுமா?


நிச்சயமாக முடியும். அமேசான்/பிளிப்கார்ட் போன்ற பல நூற்றுக்கணக்கான இகாமர்ஸ் தளங்கள் உள்ளன. இவை இரண்டும் மக்களுக்கு பரிட்சயமானவையாக இருப்பதனால் இங்கே உங்களது பொருள்களை பட்டியலிட்டால் அதிகம் பேர் வாங்குவார்கள், அது தான் வித்தியாசம்.

 

ஆனால், இவை போன்ற தளங்களில் இணையாமல் நீங்கள் உங்களுக்காகவே வடிவைக்கும் ஒரு இணையதளத்தின் மூலமாக பொருள்களை விற்பனைக்கு வைத்து லாபம் ஈட்ட முடியும். ஆனால், அதற்கு முதலீடு சற்று அதிகமாக தேவைப்படும். அதேபோல, உங்களது இணையதளத்தை பிரபல்யம் ஆக்கும் வேலையிலும் நீங்கள் ஈடுபட வேண்டி இருக்கும். புதிதாக இகாமர்ஸ் பிசினஸில் இணைய விரும்புகிறவருக்கு இது சவாலான விசயமாக இருக்கும்.

இன்னும் பலரோ அமேசான் அல்லது பிளிப்கார்ட் போன்ற தளங்களில் இணையாமல் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே இகாமர்ஸ் பிசினஸில் ஈடுபட்டு வருகிறார்கள். உண்மையிலேயே பலர் இதை வெற்றிகரமாக செய்து வருகிறார்கள்.

இகாமர்ஸ் பிசினஸில் வெற்றிபெற என்ன அவசியம்?

இகாமர்ஸ் பிசினஸில் வெற்றிபெற கடின உழைப்பு என்பதை விட கொஞ்சம் புத்திசாலித்தனம் தான் அவசியம். இகாமர்ஸ் பிசினஸில் ஈடுபட விரும்புகிறவர்கள் சொதப்பும் முக்கியமான விசயம், எந்த பொருளை விற்கப்போகிறோம் என்பது தான். நமக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் எது மக்களுக்கு விருப்பப்பட்டதாக இருக்கும், குறிப்பிட்ட கால கட்டத்தில் எந்த பொருள்களை மக்கள் வாங்குவார்கள், எந்த பொருளுக்கு போட்டி குறைவாக இருக்கிறது என சிந்தித்து பொருள்களை தேர்வு செய்து களத்தில் இறங்கினால் வெற்றி நிச்சயம்.

அதேபோல, ஏற்கனவே இந்தத்துறையில் லாபம் ஈட்டிக்கொண்டு இருக்கும் நபர்களிடம் இருந்து கற்றுகொள்ளுவதும் இந்தத்துறையில் வெற்றிபெற எளிதாக இருக்கும்.

Ecommerce In Tamil, How to do Ecommerce in tamil, how to make money from Ecommerce in tamil, Ecommerce Tamil, Ecommerce meaning in tamil

Exit mobile version