What is Brand Safety and Why Is It Important in Digital Advertising | Tamil

Brand safety Example

Brand Safety

நீங்கள் இந்த படத்தில் பாருங்கள், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற செய்திக்கு பக்கவாட்டில் Dating விளம்பரம் வருகிறது. இது எப்படி பயனுள்ளதாக இருக்கும்.

நாம் ஏற்கனவே கூறியதைப்போல மில்லியன் கணக்கில் பணம் புரளுகிற துறையாக டிஜிட்டல் அட்வெர்டைஸிங் இருக்கிறது. அப்படி லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரங்களை வெளியிடும் விளம்பரதாரர்கள் தங்களது நிறுவனத்தின் பிராண்ட் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என எண்ணுவார்கள் அல்லவா? அவர்களின் தேவையை பூர்த்தி செய்திட கொண்டுவரப்பட்ட தொழில்நுட்பம் தான் பிராண்ட் சேஃப்டி . இந்த பகுதியில் பிராண்ட் சேஃப்டி என்றால் என்ன? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? என்பதனை விரிவாக பார்க்கலாம்.

What is Brand Safety?

Brand safety, when applied to Digital Marketing, refers to the tools and strategies that ensure an online ad does not appear in a context that could potentially damage the advertiser’s brand.

 

IAB says,

 

Brand safety refers to the strategy put into place to help ensure that online advertisements or

associations do not appear on websites or in videos and articles that may conflict with a brand’s

image, mission or goals (including online environments where media wastage – often related to

viewability and fraudulent activity – is rife). Keeping a brand aligned with the values and mission of a company is paramount in a digital world where one erroneously placed ad can ruin its reputation.

டிஜிட்டல் அட்வர்டைசிங்

அதாவது ஒரு விளம்பரதாரரின் பிராண்டை பாதிக்கின்ற விதமாக, தகவல்கள் இருக்கின்ற இணையதள பக்கத்தில் விளம்பரங்கள் தோன்றுவதை தடுப்பதற்கான தொழில்நுட்பம் தான் பிராண்ட் சேஃப்டி.

 

உதாரணத்திற்கு, சரவண பவன் நிறுவனம் டிஜிட்டல் அட்வெர்டைஸிங்கில் விளம்பரங்களை போட அணுகுகிறது எனவைத்துக்கொள்வோம். இப்போது சரவண பவன் நிறுவனத்தின் விளம்பரத்தினை “சென்னை ஹோட்டல்களில் உணவில் தரமில்லை” என்ற தலைப்புடன் செய்தி வெளியாகி உள்ள இணையதள பக்கத்தில் காண்பித்தால் என்னவாகும்?

 

>> அந்த விளம்பரம் காட்டப்படுவதினால் சரவண பவன் நிறுவனத்திற்கு பயன் இருக்காது

 

>> சரவண பவன் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு குறையும்

 

இன்னும் ஒரு உதாரணத்தை பார்ப்போம், மலேசியா விமானம் காணாமல் போய்விட்டது, பயணித்தவர்கள் இறந்திருக்க வாய்ப்பு என்ற செய்திக்கு அருகில் “சுற்றுலா செல்ல மிகக்குறைந்த கட்டணம்” என விளம்பரம் தோன்றினால் அது நன்றாகவா இருக்கும்? பார்ப்போரின் மனதில் ஒருவித வெறுப்புணர்வை அது உருவாக்கிடாது? இதனை தடுக்க உதவுகின்ற தொழில்நுட்பம் தான் பிராண்ட் சேஃப்டி.

இப்படி விளம்பரதாரர்களின் பிராண்ட் மதிப்பினை குறைக்கின்ற வகையில் விளம்பரங்கள் காண்பிக்கப்படுவதை தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட தொழில்நுட்பம் தான் பிராண்ட் சேஃப்டி.

IAB – Dirty Dozen

iab-logojpg

IAB அமைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 பிரிவுகளை “Dirty Dozen” என வகைப்படுத்துகிறது. குறிப்பிட்ட இந்த பிரிவுகளுக்கு கீழே வருகின்ற இணையத்தளபக்கங்கள் விளம்பரங்கள் காண்பிக்கப்படுவதில் இருந்து தவிர்க்கப்படுகின்றன.

 

1. Military conflict

2. Obscenity

3. Drugs

4. Tobacco

5. Adult

6. Arms

7. Crime

8. Death/injury

9. Online piracy

10. Hate speech

11. Terrorism

12. Spam/harmful sites

13. Fake news [கூடுதல்]

இவைகளை தாண்டி, குறிப்பிட்ட விளம்பரதாரரின் பிராண்டின் மதிப்பினை குறைக்கும் விதமாக தகவல்கள் அடங்கி இருக்கின்ற இணையதள பக்கங்களும் இந்த கட்டுப்பாட்டில் வருகின்றன.

Technology and brand safety

Brand safety Example

விளம்பரங்கள் சரியான இணையதள பக்கங்களில் தான் தோன்றுகிறதா என்பதனை உறுதிப்படுத்துவதில் பெரும்பொறுப்பு DSP க்களுக்கு தான் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் பல விதங்களில் விளம்பரதாரரின் பிராண்ட் மதிப்பு குறையாமல் இருக்க வேலை செய்கிறது. பின்வரும் மூன்று முக்கிய நிறுவனங்கள் brand safety துறையில்  மிகப்பெரிய அளவில் செயலாற்றி வருகின்றன.

 

1. Peer39

2. MOAT

3. Integral Ad Science (IAS)

 

brand safety என்பது பின்வரும் மூன்று நிலைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.

 

>> Pre-bid

 

இணையதள பக்கத்தை திறக்கும் போது விளம்பரங்களை காண்பிக்க Pre-bid request ஒன்று அனுப்பப்படும். அவ்வாறு அனுப்பப்படும் Pre-bid வரும் இணையதள பக்கம் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே அடுத்தகட்டத்துக்கு அனுமதிக்கப்படும். இல்லையேல் விளம்பரங்களை காண்பிக்க இயலாது.

 

>> Viewability and verification

 

விளம்பரங்களை பார்ப்பது உண்மையான மனிதர் தானா (real user) என்பதனை அறிய இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. Ad Fraud உள்ளிட்டவற்றில் இருந்து விளம்பரதாரர்களை காப்பதற்கு இது உதவும்.

 

>> Ad blocking

 

தற்போது பல விளம்பரதாரர்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இதன்படி தங்களது targeting க்கு மாறான இடங்களில் உண்மையான விளம்பரம் தோன்றுவதை தவிர்த்துவிட்டு (ad blocking) default விளம்பரத்தை காண்பிப்பது தான். விளம்பரத்திற்க்காக மிகப்பெரிய தொகையினை செலவு செய்யும் தங்களது பணம் சரியான இடங்களில் தோன்றுகிறதா (from showing up next to inappropriate content) உண்மையாலுமே மனிதர்கள் தான் விளம்பரத்தினை பார்க்கிறார்களா (Ad Fraud) என்பதனை உறுதி செய்வது தான் Brand Safety நிறுவனங்களின் முக்கியப்பணி. இதனை மீறுகின்ற பட்சத்தில் விளம்பரமானது பிளாக் [ad block] செய்யப்படும்

Brand Safety என்பது நாளுக்கு நாள் சவாலான தொழில்நுட்பமாக வளர்ந்துவருகிறது என்பதுதான் உண்மை. இன்டர்நெட் ஐ சார்ந்து இது இருப்பதனால் இதில் ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதே உண்மை. சவால்கள் இருந்தாலும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் தகவல்களையும் வைத்துக்கொண்டு Brand Safety ஐ வழங்குவதற்கான முயற்சிகளில் டிஜிட்டல் அட்வெர்டைஸிங் கம்பெனிகள் முயன்றுகொண்டு இருக்கின்றன.

Previous

First Price Auction vs Second Price Auction

Next

Learn Digital Advertising





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.