What is Ad Fraud? How does it affect digital Market?

Ad Fraud

“Ad Fraud” மூலமாக பெருமளவு பணம் வீணாவதாக குற்றசாட்டு எழுகிறது. இதனை எவராலும் மறுக்கவும் முடியாது. உலக அளவில் நாள் ஒன்றுக்கு $51 மில்லியன் டாலர் விளம்பரதாரர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்திருக்கிறது


அதிக மொபைல் மற்றும் இணைய பயன்பாட்டின் காரணமாக தற்போது டிஜிட்டல் முறையில் விளம்பரம் செய்வது அதிகமாகிக்கொண்டே வருகிறது. இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் மட்டும் 12,000 கோடி ரூபாய்க்கும்  அதிகமாக டிஜிட்டல் முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் 9,266 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது 30% வளர்ச்சி ஆகும். 2019 ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகமாவே இருக்கும்.

இத்தனை வளர்ச்சியினை டிஜிட்டல் விளம்பரம் அடைந்தாலும் “Ad Fraud” மூலமாக பெருமளவு பணம் வீணாவதாக குற்றசாட்டு எழுகிறது. இதனை எவராலும் மறுக்கவும் முடியாது. உலக அளவில் நாள் ஒன்றுக்கு $51 மில்லியன் டாலர் விளம்பரதாரர்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிய வந்திருக்கிறது.

 

> > “Ad Fraud” என்றால் என்ன?

> > எவையெல்லாம் “Ad Fraud”?

இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதனைதான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

“Ad Fraud” என்றால் என்ன?

Online Fraud - Women lost her 1 lakh rupees

ஓர் இணையத்தளத்தையோ அல்லது மொபைல் ஆப்பையோ பார்க்கும் போது விளம்பரங்கள் தோன்றும். அவ்வாறு விளம்பரங்களை காட்டுவதற்கு விளம்பரதாரர்கள் (Advertisers) பணம் செலுத்திட வேண்டும். விளம்பரங்கள் காட்டப்பட்டாலும் (Impressions) விளம்பரங்களை பார்ப்பவர்கள் அதனை கிளிக் செய்தாலும் அதற்கேற்றவாறான பணம் இணையதளத்தின் ஓனர்களுக்கு வழங்கப்படும்.

 

உதாரணத்திற்கு Google Adsense விளம்பரங்களை கிளிக் செய்வதை பொறுத்து இணையதள ஓனர்களுக்கு பணம் வழங்குகிறது. மனிதர்கள் விளம்பரங்களை பார்ப்பதும், தேவைப்படுகின்ற விளம்பரங்களை கிளிக் செய்வதும் இயல்பான ஒன்று. ஆனால் சிலர் கணினிகளை பயன்படுத்தியோ அல்லது வேலைக்கு ஆட்களை அமர்த்தியோ விளம்பரங்களை கிளிக் செய்து பணம் சம்பாதிக்கின்றனர்.

 

இப்படிப்பட்ட நபர்களால் ஏராளமான பணம் வீணாகிறது. உதாரணத்திற்கு ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து ஆப்பை இன்ஸ்டால் செய்தால் பணம் வழங்குகிறோம் எனும் போது, ஏமாற்றிடும் நபர்களால் உண்மையாலுமே ஆப் இன்ஸ்டால் செய்யப்படாமலேயே பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால் பணம் முதலீடு செய்பவருக்கு பணம் வீணாகிறது.

 

எவையெல்லாம் “Ad Fraud”?

Invisible and Hidden Ads

 ஒரு இணையதளத்தில் விளம்பரத்தினை காட்டிட வேண்டும் எனில் ஒரு Ad Tag ஐ அதில் பதிவிட வேண்டும். ஆனால் சிலர் 1×1 என்ற Iframe tag க்குள் காட்டிடும் போது இணையதளத்தை பார்ப்பவர்களுக்கு கண்களில் படாது . ஆனால் மிக சிறிய அளவில் தோன்றும், கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படும்.

Bots Traffic

 கணினி , VPN போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலியான முறையில் விளம்பரங்களை காணுவது போல செய்வது.

Click Fraud

 கணினி , VPN போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலியான முறையில் விளம்பரங்களை காணுவது போல செய்வது.

ஆண்டுக்கு ஆண்டு இணைய விளம்பரத்தில் முதலீடு அதிகரிப்பதை போன்றே அதில் இருந்து தவறான முறைகளில் சம்பாதிப்போரும் அதிகரிக்கவே செய்கின்றனர். இதனை தடுக்க பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை ஒவ்வொரு நிறுவனமும் செய்துகொண்டு தான் இருக்கின்றன. இருந்தாலும் 100% பாதுகாப்பு என்பது இன்னும் எட்டப்படவில்லை என்பதே உண்மை.

Previous

What is Branding?

Next

Connected TV Advertising Explained in Tamil


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.