Demand Side Platform என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?

what is demand side platform - dsp

DSP

real time bidding ஐ சப்போர்ட் செய்கிற ஒரு மென்பொருள் DSP [Demand Side Platform] என அழைக்கப்படுகிறது. விளம்பரதார நிறுவனங்கள் [Advertisers] இணையதளங்களில் விளம்பரம் தோன்றும் இடங்களை பப்ளிசர்களிடமிருந்து [Publisher] வாங்கவதற்கு DSP ஐ பயன்படுத்துகின்றன.

Do you want to read more about demand side platform? You can refer this website where you can read all about the programmatic advertising.

இணையதளங்களில் விளம்பரங்கள் தோன்றும் இடங்களை ஆங்கிலத்தில் inventory [இன்வெண்ட்டரி] என அழைப்பார்கள்.ஆரம்பகாலங்களில் இப்படிப்பட்ட இன்வெண்ட்டரிகளை வாங்கிட வேண்டுமெனில் அந்த நிறுவனங்களோடு விளம்பரதாரர்கள் [Advertisers] பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விலையை நிர்ணயம் செய்து விளம்பரங்களை காட்டிடுவதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிடும். ஆனால் DSP வந்துவிட்ட பிறகு விளம்பரதாரர்கள் எளிமையாக இன்வெண்ட்டரிகளை வாங்கிட முடிகிறது, அதேபோல பப்ளிசர்களும் தங்களிடமிருக்கும் இன்வெண்ட்டரிகளை எளிமையாக விற்க முடிந்தது.

Read this same article in English Click Here

சரி, DSP என்றால் என்ன?

what is demand side platform - dsp

DSP என்பது ஒரு மென்பொருள், அந்த மென்பொருளானது real time bidding [Programmatic Bidding] ஐ சப்போர்ட் செய்திடும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். விளம்பரதாரர்களும் ஏஜென்சிகளும் தான் DSP யை பயன்படுத்துகின்றன.

DSP யின் மூலமாக விளம்பரதாரர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பப்ளிசர்கள், SSP, விளம்பர நெட்ஒர்க் போன்றவற்றோடு தொடர்புகொண்டு தங்களுக்கு வேண்டிய இன்வெண்ட்டரிகளை வாங்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, யாருக்கு விளம்பரங்களை காட்டிட வேண்டும் எனவும் யார் யாருக்கு விளம்பரங்கள் காட்டப்பட்டது என்பதனையும் கூட விளம்பரதாரர்கள் DSP யின் மூலமாக பெற முடியும். இதனை விளம்பரதாரர்கள் பயன்படுத்துவதனால் Advertiser Side Platform என்றுகூட அழைக்கலாம்.

DSP ஏன் தேவை?

டிஜிட்டல் அட்வர்டைசிங்

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு சோப் தயாரிக்கும் நிறுவனத்தை வைத்திருக்கிறீர்கள். இப்போது உங்களது சோப் குறித்து விளம்பரங்களை இணையதளங்களில் காட்டிட வேண்டும். நீங்கள் கூகுள் நிறுவனத்திடம் சென்றால் அவர்களின் Google Display Network manager மூலமாக அவர்களுக்கு கீழே இருக்கும் இணையதளங்களில் மட்டும் விளம்பரங்களை காட்டிட முடியும். பேஸ்புக் நிறுவனத்திடம் சென்றால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் விளம்பரங்களை காட்டிட முடியும். நீங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக் இரண்டிலும் தனித்தனியாக வேலை செய்திட வேண்டி இருக்கும்.

இதுபோலவே பிற தளங்களில் விளம்பரம் செய்திட நினைத்தால் அங்கேயும் தனியாக வேலை செய்திட வேண்டும். இதற்கு மாற்றாக நீங்கள் அனைத்துடனும் தொடர்புகொண்டுள்ள ஒரு DSP யிடம் சென்றால் ஒரே நேரத்தில் அனைத்து தளங்களிலும் விளம்பரங்களை காட்டிட முடியும். நீங்கள் தனித்தனியாக வேலை செய்திட அவசியம் இருக்காது. வேலைப்பளு குறையும்.

DSP யின் பயன்பாடுகள்

Online-Advertising-Fraud-What-You-Should-Know-About-Digital-Bots-DA

>> அனைத்தும் ஒரே இடத்தில் : பல்வேறு இன்வெண்ட்டரிகளை ஒரே இடத்தில் வாங்கிட முடியும்.

>> டார்கெட்டிங் : யாருக்கு விளம்பரம் காட்டப்படவேண்டும் என்பதனை கட்டுப்படுத்திட முடியும். உதாரணத்திற்கு, எந்த இடத்தில் இருப்பவர்களுக்கு, எந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, தங்களது வெப்சைட்டை பார்த்தவர்களுக்கு என அனைத்தையும் செய்ய முடியும்.

>> டேட்டா : விளம்பரம் பார்க்கபோகிறவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து எளிமையாக தகவல்களை பெற முடியும்.

>> ரிப்போர்டிங் : யாருக்கு எந்த நேரத்தில் விளம்பரங்கள் காட்டப்பட்டது போன்ற பல்வேறு ரிப்போர்ட்களை பெற முடியும். இதனால் தங்களது பணம் சரியான முறையில் செலவழிக்கப்பட்டுள்ளதா என்பதை விளம்பரதாரர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

I have written many articles about digital advertising in both English and Tamil. You can read more topics here,

Digital Advertising Topic – English 

Digital Advertising Topic – Tamil


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.