Basic Terms of Digital Advertising | டிஜிட்டல் அட்வர்டைசிங் முக்கிய வார்த்தைகள்

டிஜிட்டல் அட்வர்டைசிங்

Basic Terms

சிறிய தொழில் முதல் மிகப்பெரிய தொழில்நிறுவனம் வரை டிஜிட்டல் அட்வர்டைசிங்கை சார்ந்து இருக்கின்றன. வளர்ந்துவரும் இந்த துறை குறித்த படிப்புகளும் பயிற்சிகளும் துவங்கிவிட்டன

கடந்த பதிவில் டிஜிட்டல் அட்வர்டைசிங் எதற்க்காக வளர்ச்சி அடைந்துகொண்டே போகிறது என்பதனை பார்த்தோம். இந்த பதிவில் டிஜிட்டல் அட்வர்டைசிங் இல் பயன்படும் முக்கிய Term களை பார்ப்போம். இதனை தெரிந்துகொள்வது அடுத்து வரும் பதிவுகளை படிக்க, புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும்.

Advertisers

விளம்பரங்களை இணையதளத்தில் பகிர நினைப்பவர்கள், முதலாளிகள். சரவணா ஸ்டோர் விளம்பரம் வருகிறதென்றால் அதில் Advertisers “Saravana  Store” தான்.

Publisher

எந்த இணையதளத்தில் விளம்பரம் காட்டப்பட இருக்கின்றதோ அந்த இணையதளம் “Publisher” என அழைக்கப்படும். ஒரு Publisher க்கு கீழாக ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட இணையத்தளங்களோ இருக்கலாம்.

DSP

ஆங்கில விரிவாக்கம் “Demand Side Platform”. DSP இன் மிக முக்கிய வேலை, Advertisers அவர்களது விளம்பரங்களை விரும்பிய அளவிற்கு இணையதளங்களில் இடம்பெற செய்வதற்கான தொழில்நுட்ப வசதியினை வழங்குவது, அதற்காக Inventory Source (பல இணையதளங்கள் அல்லது Publishers அடங்கியது) உடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது, RTB யில் பங்கேற்பது என மிக முக்கிய பணிகளை செய்கிறது.

SSP

ஆங்கில விரிவாக்கம் “Supply Side Platform”. இணையதளம் வைத்திருப்பவர்கள் அவர்களின் இணையதளத்தில் இருக்கின்ற ‘Ad Space’ ஐ நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பத்தினை வழங்குவது. நாம் inventory என சொல்வது  ‘Ad Space’ ஐ தான்.

Ad Exchange

Technology that allows advertisers to advertise and publishers to buy advertising in real time

Real Time  இல் விளம்பரதாரர்கள் விளம்பரங்களை விற்கவும்  இணையதள குழுமங்கள் விளம்பரங்களை வாங்கவும் தேவைப்படுகின்ற தொழில்நுட்பம்.

Bid Request :

இணையதள பக்கம் திறக்கப்படும்போது அங்கிருந்து சில தகவல்கள் விளம்பரங்களை வழங்கிடும் நிறுவனங்களோடு தொடர்புடைய கணினி சர்வர்களுக்கு அனுப்பப்படும், அதற்க்கு பெயர்தான் Bid Request. அதில் இணையதளத்தின் முகவரி, IP address போன்ற பல தகவல்கள் அதில் அடங்கி இருக்கும்.

Ad Impressions :

The number of times an ad has been served. எத்தனை முறை விளம்பரம் காட்டப்பட்டதோ அதன் எண்ணிக்கை தான் impressions என அழைக்கப்படும்.

Ad Click :

The number of times user interact with an ad [click the ad preview] தாங்கள் பார்த்திட்ட விளம்பரத்தை எத்தனை முறை கிளிக் செய்கிறோம் என்பதன் எண்ணிக்கை

Ad Actions

When user make an action like subscribe or purchase after seeing or click an ad விளம்பரத்தை பார்த்தவுடனோ அல்லது கிளிக் செய்த உடனோ பார்ப்பவர்கள் அந்த பொருளை இணையதளத்தில் வாங்கினால் அதற்கு ‘Ad Action’ என்று பெயர்.

Ad Banner

The ad unit which showing on a webpage or a mobile application இணையதளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷனில் தெரிகிற விளம்பரம்.

CPM

Cost per Thousand impressions ஆயிரம் முறை விளம்பரத்தை காட்டுவதற்கு ஆகின்ற செலவுத்தொகை

CPC [Cost per Click]

When user clicks an ad, the advertiser pay this amount [avg basis] விளம்பரத்தை பார்ப்பவர் ஒருமுறை கிளிக் செய்தால் Advertiser [விளம்பரதாரர்] கொடுக்கின்ற தொகை. பெரும்பாலும் சராசரியான முறையிலேயே இந்த தொகை அளிக்கப்படும்.

CPL [Cost per Lead]

When user make an action, the advertiser pays this amount [avg basis] விளம்பரத்தை பார்ப்பவர் ஒருமுறை Action  செய்தால் Advertiser [விளம்பரதாரர்] கொடுக்கின்ற தொகை. பெரும்பாலும் சராசரியான முறையிலேயே இந்த தொகை அளிக்கப்படும்.

Ad Exchange

Technology that allows advertisers to advertise and publishers to buy advertising in real time

Real Time  இல் விளம்பரதாரர்கள் விளம்பரங்களை விற்கவும்  இணையதள குழுமங்கள் விளம்பரங்களை வாங்கவும் தேவைப்படுகின்ற தொழில்நுட்பம்.

Read more digital advertising terms here

Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்