Site icon Tech Tamilan

Desktop vs Laptop : எதனை வாங்கலாம் என குழப்பமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு குழந்தைக்கும் கணினி கற்றுக்கொள்வது என்பது அவசியமானதாக இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை செய்வதற்கும் கணினி இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆகவே, கணினி வாங்குவது என்பது அடிப்படையான விசயமாக மாறிவிட்டது. கணினி வாங்கப்போகிறோம் என்ற முடிவிற்கு ஒருவர் வந்துவிட்டால் அடுத்து எழக்கூடிய முக்கியமான கேள்வி “Desktop Computer” வாங்கப்போகிறோமா அல்லது Laptop வாங்கப்போகிறோமா என்பது தான்.

Desktop vs Laptop, இந்த இரண்டிலுமே நாம் நினைத்த வேலையை செய்திட முடியும் என்றாலும் கூட, வேகம் [computing power], வடிவமைப்பு [design], சிறப்பம்சங்கள் [features], திறன் [performance] போன்றவை வேறுபடவே செய்யும். ஆகவே, கம்ப்யூட்டர் வாங்கப்போகும் ஒவ்வொருவரும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் இரண்டிற்கும் உள்ள நிறை குறையை அறிந்துகொண்டு வாங்குவது சிறந்தது.

இந்தக்கட்டுரை எழுதப்பட்டு இருப்பதன் முக்கிய நோக்கமே, கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும் ஒருவர் Laptops vs Desktops ஐ தெரிந்து கொண்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே.

Advantages of Laptops

Portability : லேப்டாப் வாங்குவதன் முக்கியமான நன்மையே Portability தான். நீங்கள் எங்கு சென்றாலும் லேப்டாப்பை உங்களுடனேயே கொண்டு செல்வது என்பது மிகவும் எளிமையானது. ஒரு பேக்கை மாட்டிக்கொண்டு நீங்கள் லேப்டாப்பை கொண்டு சென்றுவிட முடியும். அதேபோல, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்துகொண்டு உங்களது வேலையை செய்துவிட முடியும். அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு லேப்டாப் தான் சிறந்தது. 

Convenience : லேப்டாப் கையாளுவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். அதேபோல, Wi-Fi, Bluetooth, and USB ports என அனைத்துமே இருக்கும். ஆகவே, நீங்கள் எளிமையாக எதை வேண்டுமானாலும் செய்துகொள்ள முடியும். 

Power Consumption : டெஸ்க்டாப் உடன் ஒப்பிடும் போது லேப்டாப் குறைந்த அளவிலான மின்சாரத்தையே பயன்படுத்துகிறது. இப்போது வரக்கூடிய லேட்டஸ்ட் லேப்டாப்களில் அதிக நேரத்திற்கு நீடித்து இருக்கும் பேட்டரிகள் தரப்படுகின்றன. ஆகவே, நீங்கள் நீண்ட நேரத்திற்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் கூட பயன்படுத்தலாம். 

Modern Technology : லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் அனைத்தும் பெரும்பான்மையாக லேப்டாப்பில் தான் பயன்பாட்டுக்கு முதலில் வரும். மேற்படுத்தப்பட்ட திரை, புராசஸர், தொடுதிரை, என பல தொழில்நுட்பங்கள் லேப்டாப்பில் கிடைக்கும்.

Checkout this laptop:

Advantages of Desktops

Performance : எப்போதுமே டெஸ்க்டாப் தான் வேகத்திற்கு சிறந்தது. இதிலே இருக்கும் powerful processors, high-end graphics cards, மற்றும் large amounts of memory and storage உங்களுக்கு மிகப்பெரிய மென்பொருளைக்கூட இலகுவாக பயன்படுத்தும் வசதியை வழங்கும். பொதுவாக, வீடியோ எடிட்டிங், கேமிங் உள்ளிட்ட அதிக திறன் தேவைப்படும் வேலைகளுக்கு டெஸ்க்டாப் தான் சிறந்த ஒன்றாக இருக்கும். 

Upgrade : உங்களுக்கு வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றாலோ அல்லது மெமரியை அதிகரிக்க வேண்டும் என்றாலோ நீங்கள் அதற்கான மாறுதல்களை எளிமையாக டெஸ்க்டாப் கணினியில் செய்துகொள்ள முடியும். இது லேப்டாப்பில் அவ்வளவு எளிதாக சாத்தியமில்லை. 

Cost : நீங்கள் ஒரே specification கொண்ட லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் விலையை கேட்டுப்பார்த்தால் டெஸ்க்டாப்  விலை தான் குறைவானதாக இருக்கும். 

Self Made : நீங்கள் உங்களது தேவைக்கு ஏற்றாற்போல ஒரு டெஸ்க்டாப் கணினியை உருவாக்கிக்கொள்ள முடியும். பல கடைகளில் இப்படி அசெம்பிள் செய்து டெஸ்க்டாப் கணினியை வழங்குகிறார்கள்.

Checkout Desktop Computer Here

Disadvantages of Laptops

Cost : லேப்டாப் விலை எப்போதுமே அதிகமாகவே தான் இருக்கும். உங்களுக்கு லேப்டாப் செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்வது உட்பட பல சௌகரியங்களை தந்தாலும் கூட டெஸ்க்டாப் கணினியின் விலையோடு ஒப்பிடும் போது அதிகமாக இருக்கும். 

Performance : மிகப்பெரிய வேலைகளை செய்திடுவதற்கு டெஸ்க்டாப் தான் பொருத்தமானதாக இருக்கும். பெரும்பாலும் லேப்டாப், சௌகரியங்களை உள்ளடக்கியதாகவே இருக்கும். ஆகவே, அதில் திறன் என்பது சற்று குறைவாகவே இருக்கும். 

Upgrade : உங்களுக்கு ஏற்றாற்போல எந்தவித மாறுதல்களையும் உங்களால் லேப்டாப்பில் செய்துகொள்ள முடியாது. உதாரணத்திற்கு உங்களது கணினியின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமானால் RAM ஐ மாற்றிடுவது அவ்வளவு எளிதானது இல்லை. ஆனால், டெஸ்க்டாப்பில் இதை எளிமையாக செய்ய முடியும்.

Disadvantages of Desktops

Portability : இப்போதுள்ள காலகட்டத்தில், நாம் வெவ்வேறு இடங்களில் இருந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்படி இருக்கும் சூழலில் அதற்கு டெஸ்க்டாப் பொருத்தமாக இருக்காது. 

Space Occupation : நீங்கள் உங்களது வீட்டில் டெஸ்க்டாப் கணினி வைக்க வேண்டுமெனில் அதற்கான ஓர் இடத்தை நீங்கள் தயார் செய்திட வேண்டும். இது சிலருக்கு பிரச்சனையாக இருக்கலாம். 

Power Consumption  : லேப்டாப்பை ஒப்பிடும் போது டெஸ்க்டாப் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தும். அதேபோல, மின்சாரம் வீட்டில் இல்லாத சூழலில் உங்களால் லேப்டாப்பை பயன்படுத்த முடிவது போல டெஸ்க்டாப் பயன்படுத்த முடியாது. பயன்படுத்த வேண்டுமெனில் நீங்கள் UPS பொறுத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

நான் லேப்டாப் வாங்குவதா? டெஸ்க்டாப் வாங்குவதா? 

குறைந்தது 35 ஆயிரம் செலவு செய்து வாங்கக்கூடிய இந்த விசயத்தில் நீங்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. நான் இங்கே தந்திருக்கும் சில கேள்விகளுக்கு பதிலை நீங்கள் சொன்னாலே நீங்கள் எதை வாங்க வேண்டும் என்கிற தெளிவு பிறந்துவிடும். 

1. நீங்கள் வீட்டில் அல்லது ஒரே இடத்தில் இருந்து தான் வேலை செய்வீர்களா அல்லது அடிக்கடி இடம் மாறி வேலை செய்வீர்களா? 

2. உங்களுக்கு பணம் ஒரு பொருட்டா? 

3. நீங்கள் பெரிய சாப்ட்வேர்களை பயன்படுத்துவீர்களா? கேமிங்க்காக வாங்குகிறீர்களா? 

4. மின்சாரம் உங்கள் பகுதியில் அடிக்கடி போகுமா? 

ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வோருக்கு, பெரிய பெரிய சாப்ட்வேர்களை பயன்படுத்த வேண்டியவர்களுக்கு நிச்சயமாக டெஸ்க்டாப் தான் பெஸ்ட். அடிக்கடி மின்சாரம் போனால் நீங்கள் UPS பயன்படுத்தலாம். 

அடிக்கடி இடம் மாறி வேலை செய்தாக வேண்டிய சூழல் உள்ளவர்கள் வேறு வழியில்லை லேப்டாப் தான் வாங்க வேண்டும். பெரிய சாப்ட்வேர்களை பயன்படுத்தினால் சற்று அதிக விலை கொடுத்தாவது லேப்டாப்பை வாங்க வேண்டும்.

Exit mobile version