Site icon Tech Tamilan

கிலோகிராம் ஆம்பியர் கெல்வின் மோல் வரையறை மாறியது | Definitions of kilogram, Ampere, Kelvin and mole changed

 


 

அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற ஒவ்வொன்றையும் கிலோகிராம், லிட்டர், மீட்டர் போன்ற அலகுகளில் தான் வாங்குகிறோம். சரி கடைக்காரர் ஒரு கிலோ என்று ஒரு எடைக்கல்லை பயன்படுத்துகிறார், இன்னொரு கடைக்காரர் இன்னொரு எடைக்கல்லை பயன்படுத்துகிறார் இரண்டும் சம எடையில் இருப்பதில்லை, சின்ன வித்தியாசங்கள் இருக்கவே செய்யும். புதிதாக ஒரு எடைக்கல்லை உருவாக்க வேண்டுமெனில் எந்த எடைக்கல்லை ஆதாரமாக வைத்துக்கொண்டு உருவாக்குவது?

 

பாதுகாப்பாக வைக்கபட்டுள்ள 1 KG சிலிண்டர் வடிவ எடைக்கல்

 

இதற்கான தீர்வாகத்தான் உலகிற்க்கே பொதுவான ஒரு மாதிரி எடைக்கல் 129 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. பிளாட்டினம் மற்றும் இரிடியம் இவற்றினால் ஆன சிலிண்டர் போன்ற வடிவமைப்பிலான எடைக்கல் பாதுகாப்பாக பிரான்சில் உள்ள International Bureau of Weights and Measures இல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மாதிரி உருவாக்கப்பட்டு ஒவ்வொரு நாடுகளுக்கும் கொடுக்கப்படும். அந்த நாடுகள் மாதிரியை வைத்துக்கொண்டு எடைக்கற்களை உருவாக்குவார்கள். அதனை சமூகத்தின் பல நிலைகளில் உள்ளவர்களுக்கும் விநியோகிப்பார்கள். அந்த எடைக்கற்கள் கடைகளில் பயன்படுத்தப்படும்.


மாதிரிக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்ற எடைக்கற்களின் எடையில் காற்று மாசின் காரணமாக மாற்றங்கள் நடைபெறுவதாகவும் இதனால் மிக நுட்பமான அறிவியல் ஆய்வுகளை செய்வதில் சில மாறுபாடுகள் குழப்பங்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு வந்தது


இந்த குறைபாட்டை களைவதற்கு 60 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றுகூடி கிலோகிராம் ஆம்பியர் கெல்வின் மோல் ஆகியவற்றிற்கான வரையறைகளை மாற்றிக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனால் கிலோகிராம் ஆம்பியர் கெல்வின் மோல் ஆகியவற்றை அளவிடுவதற்கான மாதிரி மாற்றப்படும்.

 

Definition-of-kilogram-changed

 

தற்போது கிலோகிராம் என்பதற்கு சிலிண்டர் வடிவிலான எடைக்கல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் இயற்பியலில் பயன்படுத்துகின்ற பிளாங்க் மாறிலி (Planck Constant) மூலமாக கிலோகிராம் எடை நிறுவப்படும்.


ஒரு எடைக்கல்லை பிரதியெடுத்து பயன்படுத்தினால் துல்லியமாக இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் காற்று மாசு ஏற்படுத்துகின்ற மாசுபாட்டினால் எடையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பும் இருக்கின்றது. அதே சமயம் பிளாங்க் மாறிலி  (Planck Constant) என்பதனை எந்த இடத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால் எடை துல்லியமானதாக இருக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

Planck constant, h = (6.62×10−34mkg/s)


இப்போதும் ஒரு கிலோ என்பது அதே அளவாகத்தான் இருக்கும் . மாதிரியில் தான் தற்போது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது . புதிய எடைக்கற்கள் புதிய மாதிரியை அடிப்படையாக கொண்டு துல்லியமானதாக தயாரிக்கப்படும் .


The seven units of the metric system and their fundamental constants:

 

 

 

 

 

 


TECH TAMILAN

 

Exit mobile version