Site icon Tech Tamilan

DARQ தொழில்நுட்பம் என்றால் என்ன? | DARQ technology in tamil

AI-ML Artificial Intelligence vs Machine Learning explained in tamil

AI-ML Artificial Intelligence vs Machine Learning explained in tamil

பல தனித்துவமான தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து புதிய தொழில்நுட்ப மாறுதல்களை தற்போது வல்லுநர்கள் பல துறைகளில் ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த மாறுதல்கள், பல தொழில் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கும் பேருதவி புரிகின்றன. அதிலே ஒன்று தான் DARQ தொழில்நுட்பம். அதுபற்றி இந்தப்பதிவில் பார்க்கலாம்.

What is DARQ?

Distributed ledger technology (DLT), artificial intelligence (AI), extended reality (XR) மற்றும் Quantum computing இந்த நான்கு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய தொழில்நுட்பம் தான் DARQ தொழில்நுட்பம். இந்தப்புதிய தொழில்நுட்பமானது நிறுவனங்களை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. 

தொழில் போட்டி அதிகரித்து வரக்கூடிய சூழலில் இந்த நான்கு முன்னணி தொழில்நுட்பங்களை தங்களது நிறுவனங்களில் புகுத்தி அதன் மூலமாக வெற்றிபெற பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன. சுமார் 85% நிறுவனங்கள் ஏற்கனவே இதனை சோதித்துவிட்டன என்கிறது தகவல்கள்.

Blockchain

Distributed ledger technology (DLT) : தற்போது கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒரு நிறுவனம் பயன்படுத்தும் பட்சத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தகவல்களை சேமிக்க முடியும், அதேபோல தகவல்களை பகிர்வது மற்றும் தகவல்களை சரிபார்ப்பது எளிமையானதாக இருக்கும். 

Artificial intelligence : திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலைகளுக்கு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதனை தானியங்கு முறையில் செய்யும் பணியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இது உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்க உதவும். 

Extended reality (XR) : மிகவும் சிக்கலான பணிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு Extended reality தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக, இயந்திரங்கள் உருவாக்கம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பணிகளுக்கான பயிற்சி அளிக்க பெரிய அளவில் உதவும். 

Quantum computing : குவாண்டம் கம்பியூட்டிங் இன்றளவும் புதிய தொழில்நுட்பமாக இருந்து வருகிறது. மிகவும் சிக்கலான கணிதங்களுக்கு விரைவாக பதில்களை கண்டறிய பெரிதும் இவை உதவும். 

DARQ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள்

GE Aviation மற்றும் Microsoft ஆகிய நிறுவனங்கள் Distributed ledger technology தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. 

LEGO Wear என்ற நிறுவனம் Extended reality தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 100% விர்ச்சுவல் ஸ்டோரை திறந்துள்ளது. 

Volkswagen நிறுவனம் Quantum computing ஐ பயன்படுத்தி மிகவும் பிஸியான இடங்களில் ட்ராபிக் தகவல்களை ஒருங்கமைக்கிறது.

DARQ Conclusion

DARQ என்பது மிகவும் சூப்பரான நான்கு தொழில்நுட்பங்களின் கூட்டுப்பெயர் தான். இதில் ஏதேனும் ஒன்றினையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்பங்களையோ இணைத்து புதியதொரு தொழில்நுட்பத்தை உருவாக்கியோ அல்லது ஏற்கனவே இருக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியோ ஒரு நிறுவனத்தால் வெற்றியடைய முடியும். பல சிக்கலான பிரச்சனைகளுக்கு இந்த நான்கு தொழில்நுட்பங்களின் மூலமாக தீர்வுகள் காணப்பட்டுள்ளன.

TECH TAMILAN

Exit mobile version