Site icon Tech Tamilan

எந்த நிலையில் இருக்கிறது கொரோனாவிற்கான மருந்து? vaccine for corona

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்து தற்போது முதல்கட்டமாக [Phase 1] 375 பயனாளர்களிடம் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் அடுத்த கட்ட பரிசோதனைகளை சில மருந்துகள் அடைந்திருக்கின்றன.

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்து தற்போது முதல்கட்டமாக [Phase 1] 375 பயனாளர்களிடம் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் அடுத்த கட்ட பரிசோதனைகளை சில மருந்துகள் அடைந்திருக்கின்றன.

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்து தற்போது முதல்கட்டமாக [Phase 1] 375 பயனாளர்களிடம் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் அடுத்த கட்ட பரிசோதனைகளை சில மருந்துகள் அடைந்திருக்கின்றன.

Corona Vaccine

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்து தற்போது முதல்கட்டமாக [Phase 1] 375 பயனாளர்களிடம் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. உலகின் பிற பகுதிகளில் அடுத்த கட்ட பரிசோதனைகளை சில மருந்துகள் அடைந்திருக்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்படி உலகின் பல்வேறு பகுதிகளில் 140 க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உலக தொழில்நுட்பம் பெருமளவில் உயந்துவிட்ட நிலையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு நாட்கள் எடுக்கின்றன என பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

அதன்படி, கொரோனா வைரஸ் அடிக்கடி தனது நிலையை மாற்றிக்கொள்வதனால் சவாலாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் க்கான மருந்து என்பது கொரோனா வைரஸின் ஒரு பகுதி தான். ஆனால் மாற்றப்பட்ட இந்த வைரஸ்கள் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை தூண்டி எதிர்ப்பு மருந்தை உருவாக்க உதவும் 

ஒரு தடுப்பு மருந்து நோயாளிகளுக்கு கொடுப்பதற்கு முன்னதாக பல்வேறு பாதுகாப்பு சோதனைகளை அது கடந்தாக வேண்டும். படிப்படியான அந்த சோதனைகளை கடந்த பிறகு மனிதர்களுக்கு இந்த தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை என அறிவிக்கபட்ட பின்னர் தான் வழங்கப்படும். இதனால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 12 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம். 

கொரோனா தடுப்பு மருந்து எப்படி சோதிக்கப்படுகிறது?

உலக சுதாராக நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி நான்கு கட்டங்களாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை செய்யப்படுகிறது. 

 

Pre-clinical [ ஆய்வக சோதனை] 

 

இந்த நிலையில் கண்டறியப்பட்ட தடுப்பு மருந்தானது விலங்குகளுக்கு கொடுக்கப்பட்டு வேலை செய்கிறதா என பார்க்கப்படும் 

 

phase 1 

 

இந்த நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறதா தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்பது கண்காணிக்கப்படும் 

 

phase 2 

 

இந்த நிலையில் சில நூறு மனிதர்களுக்கு இந்த மருந்து கொடுத்து கண்காணிக்கப்படும். மேலும் எவ்வளவு மருந்து கொடுக்கலாம் என்பதற்கான சோதனைகளையும் இந்த நிலையில் அறிய விஞ்ஞானிகள் முற்படுவார்கள். 

 

phase 3 

 

இந்த நிலையில் சில ஆயிரம் பேருக்கு இம்மருந்து கொடுக்கப்படும். பாதுகாப்பாக இருக்கிறதா/வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பது போன்ற சோதனைகள் நடைபெறும். 

 

இவை அனைத்தையும் கடந்த பிறகு தான் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொடுக்க அனுமதி வழங்கப்படும். 


எந்த நிலையில் இருக்கிறது கொரோனாவிற்கான மருந்து?

தற்போது உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்படி, இறுதிக்கட்ட சோதனையில் [Phase 3] மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. Phase 2 வை  11 நிறுவனங்களும் Phase 1 ஐ 19 நிறுவனங்களும் கடந்திருக்கின்றன. 

இந்தியாவை பொறுத்தவரைக்கும் ஹைதராபாத்தில் இருக்கும் பாரத் பையோடெக் ஆய்வகம் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் தயாராகும் இம்மருந்து [COVAXIN] தற்போது தான் Phase 1 நிலையில் இருக்கிறது. இதற்காக 375 தன்னார்வலர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். இன்னும் பல்வேறு சோதனைகளை செய்திட வேண்டி இருப்பதனால் 2021 இறுதியில் தான் இம்மருந்து கிடைக்கும் என சொல்லப்படுகிறது. 

இறுதிக்கட்டத்தில் இருக்கும் கொரோனா தடுப்பு மருந்து எவை?

உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள தகவல்படி மூன்று நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. 

 

Sinovac : சீன நிறுவனமான Sinovac பிரேசில் நாட்டில் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது. 

 

University of Oxford/AstraZeneca  : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி ஒரு சிம்பன்சி வைரஸ் வழியாக வழங்கப்படுகிறது. இந்த மருந்து கொரோனா வைரஸில் காணப்படும் புரத கூர்முனைகளின் மரபணு குறியீட்டைக் கொண்டுள்ளது மற்றும் மனித உடலில் ஒரு வலுவான நோயெதிர்ப்பு பதிலைத் தூண்டுகிறது. இந்த தடுப்பூசி இங்கிலாந்தில் ஒருங்கிணைந்த 2/3 சோதனையில் உள்ளது மற்றும் சமீபத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் 3 ஆம் கட்ட சோதனைகளுக்கு சென்றுள்ளது.

 

CanSino Biologics Inc./Beijing Institute of Biotechnology : சீன நிறுவனமான கன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் பெய்ஜிங் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி இரண்டாம் கட்ட  சோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் விசாரணையில் இருந்து எந்த தரவும் வெளியிடப்படவில்லை. ஒரு உலகில் முதலில், தடுப்பூசி இப்போது இராணுவ பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது எவ்வளவு பரவலாக விநியோகிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

University of Melbourne/Murdoch Children’s Research Institute : ஆஸ்திரேலியாவில் உள்ள முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான காசநோய் தடுப்பூசியைப் பயன்படுத்தி 3 ஆம் கட்ட சோதனை நடத்துகிறது. இந்த தடுப்பூசி கோவிட் -19 க்கு எதிராக நேரடியாக பாதுகாப்பதாக கருதப்படவில்லை, ஆனால் உடலின் குறிப்பிட்ட நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version