Command Prompt என்றால் என்ன?

கமெண்ட் பிராம்ப்ட் [Command Prompt] என்ற அதன் பெயருக்கு ஏற்றார் போலவே சில command களை கொடுப்பதன் மூலமாக பல வேலைகளை எளிமையாக செய்ய முடியும்.

open-command-prompt in tamil

cmd அல்லது Command Prompt என அழைக்கப்படும் அப்பிளிக்கேஷன் பெரும்பான்மையான விண்டோஸ் இயங்குதளங்களில் இருக்கிறது. command prompt (cmd.exe) ஐ உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். கமெண்ட் பிராம்ப்ட் என்ற அதன் பெயருக்கு ஏற்றார் போலவே சில command களை கொடுப்பதன் மூலமாக பல வேலைகளை எளிமையாக செய்ய முடியும். உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு folder இல் இருக்கின்ற பைல்களை திறப்பது, பிரதி எடுப்பது, புதிய போல்டரை உருவாக்குவது என துவங்கி பல நுட்பமான பணிகளையும் செய்ய முடியும்.

Command Prompt ஐ சிலர் DOS prompt அல்லது MS-DOS என அழைக்கிறார்கள். ஆனால் அது தவறு, Command Prompt இல் பயன்படுத்தப்படுகின்ற சில கூறுகள் (Command line) MS-DOS இல் இருக்கிறது. ஆனால் இரண்டும் ஒன்று அல்ல.

How to Access Command Prompt?

command prompt in tamil

உங்களுடைய விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்து Start menu அல்லது Apps screen இல் சென்று cmd என சர்ச் செய்து திறந்துகொள்ளலாம். நீங்கள் இந்த பாதையில் சென்றும் ஓபன் செய்துகொள்ள முடியும் C:Windowssystem32cmd.exe .

How to Use Command Prompt?

Command Prompt மிகவும் எளிமையான Command களை கொண்டதாக இருந்தாலும், மிக சரியான parameter மற்றும் syntax களை பயன்படுத்தினால் மட்டுமே சரியாக வேலை செய்யும்.

உதாரணத்திற்கு ஒரு போல்டரில் இருக்கக்கூடிய அனைத்து png இமேஜ் களையும் நீக்க வேண்டும் எனில் பின்வரும் command ஐ பயன்படுத்திடலாம்

del *.png

Ping Command

ping command

உங்களது கணினியில் இன்டர்நெட் வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது பிற நெட்ஒர்க் பிரச்சனைகள் எழுந்தாலோ Ping Command ஐ பயன்படுத்தி சரி செய்துகொள்ள முடியும்.

Example

ping www.google.com or ping 216.58.208.68

இந்த ping command ஐ பதிவிடும் போது ஒரு குறிப்பிட்ட அளவுள்ள தகவலை (packets) அந்த ஐபி முகவரிக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் அந்த தகவல் நமது சர்வருக்கு பெறப்படுகிறது. இதற்கு ஆகின்ற நேர அளவு காட்டப்படுவதனால் எங்கு பிரச்சனை என்பதை எளிமையாக தெரிந்துகொள்ள இயலும்.

ipconfig Command

ip config command

பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் Command களில் ipconfig Command ம் ஒன்று. LAN மூலமாக பல கணினிகள் இணைக்கப்பட்டிருக்கும்போது ஒவ்வொரு கணினியின் IP Address மற்றும் Default Gateway ஐ தெரிந்துகொள்வதற்கு ipconfig Command பயனுள்ளதாக இருக்கும்.

Ip config has a number of switches the most common are:

ipconfig /all – displays more information about the network setup on your systems including the MAC address.

ipconfig /release – release the current IP address

ipconfig /renew – renew IP address

ipconfig /? -shows help

ipconfig/flushdns – flush the dns cache

Hostname Command

உங்களது கணினியின் host ஐ கண்டறிவதற்கு இந்த எளிமையான கமன்ட் பயனுள்ளதாக இருக்கும்.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here