Site icon Tech Tamilan

ROM என்றால் என்ன? ROM In Tamil

rom

What is ROM in tamil

ஒரு கம்ப்யூட்டர் அல்லது கருவி எப்படி OFF செய்யப்பட்டாலும் முக்கியமான தகவல்கள் மற்றும் புரோகிராம்களை நியாபகம் வைத்துக்கொள்கின்றன என்ற கேள்வி உங்களுக்கு எழுந்து இருக்கிறதா? அந்த இடத்தில் தான் ROM [Read Only Memory] இன் பங்களிப்பு வருகிறது. ஒரு கம்ப்யூட்டர் ON செய்யப்பட்டு வேலை செய்திட வேண்டுமெனில் ROM மிகவும் அவசியம். இந்தப்பதிவில் ROM என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது, அதன் பயன்பாடுகள் என்ன என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.


ROM என்பதன் ஆங்கில விரிவாக்கம் Read-Only Memory. கணினி உள்ளிட்ட எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளில் டேட்டாவை நிரந்தரமாக சேமித்துவைத்துக்கொள்ள பயன்படுத்தப்படுகின்ற மெமரி ROM எனப்படும். ROM இல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டேட்டா அல்லது சாப்ட்வேர் தான் கணினியை ON செய்வதற்கு தேவையான புரோகிராம்.

கணினியை ON செய்யவும் Input / Output கருவிகளின் செயல்பாட்டிற்கும் ROM இல் நிரந்தரமாக இருக்கும் புரோகிராம்கள் அவசியம்.

ROM என்பது Read Only Memory. அதாவது இதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகளை மாற்றிட முடியாது. கணினியை OFF செய்தாலும் இதிலிருக்கும் தரவுகள் அழியாமல் இருக்கும். நாம் முந்தைய பதிவில் பார்த்த RAM இல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தரவுகள் OFF செய்தால் அழிந்துவிடும்.

Types Of ROM

ROM இல் இருக்கக்கூடிய தகவல்களை அழித்திட முடியாது என்பதனால் பொதுவாக device களில் புரோகிராம்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த புரோகிராம்கள் தான் ஒரு ஹார்டுவேர் கருவி எவ்வாறு செயல்பட வேண்டும், மற்ற கருவிகளோடு எவ்வாறு தொடர்பு கொள்ளவேண்டும் என என்பதற்கான வழிமுறைகளை வழங்குகின்றது.

தரவுகளை அழித்திடும் வசதி கொண்ட சில Non – Volatile ROM களும் இருக்கின்றன

ROM எப்படி வேலை செய்கிறது?

ROM மெமரியில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் தகவல்கள் மற்றும் புரோகிராம்கள் அனைத்தும் நிரந்தரமானவை. RAM இல் இருக்கும் தகவல்கள் தான் கம்ப்யூட்டர் OFF செய்யப்பட்டால் அழிந்துவிடும். ஆனால், ROM இல் இருக்கும் தகவல்கள் கம்ப்யூட்டர் OFF செய்யப்பட்டால் கூட அழிந்துபோகாது. எவ்வளவு நாட்கள் ஆனாலும் அது அப்படியே இருக்கும்.

“masking” என்ற முறைப்படி தான் ROM வேலை செய்கிறது. ட்ரான்ஸிஸ்டர்ஸ் மற்றும் டையோட்ஸ் இவை முறைப்படி இணைக்கப்பட்டு தான் ROM சிப் உருவாக்கப்படுகிறது. அவை இணைக்கப்படும் விதத்திலேயே அதற்குள் உள்ள பைனரி மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஒருமுறை ROM Chip உருவாக்கப்பட்டுவிட்டால் அதில் உள்ள தகவல்களை உங்களால் மாற்றவே முடியாது. அதனால் தான் அதனை Read Only என்கிறோம்.

ROM உடன் இணைக்கப்பட்டுள்ள கருவி ON செய்யப்பட்டவுடன் ROM மெமரியில் இருக்கும் தகவலை புராசஸர் பெற்றிட முடியும். உதாரணத்திற்கு, ஒரு கம்ப்யூட்டர் உடன் இணைக்கப்பட்டு இருக்கும் ROM இல் bootstrap loader program இருக்கும். இதுதான், கம்ப்யூட்டரின் ஹார்டுவேரை RAM இல் இருக்கும் Operating System ஐ பெற்று ON செய்திட வைக்கும்.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

TECH TAMILAN

Exit mobile version