நாம் அன்றாடம் பயன்படுத்தும் கணினி பற்றி அறிந்துகொள்ள அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். எனக்குள்ளும் அந்த ஆர்வம் உண்டு. அப்படி, கணினி பற்றி அறிந்துகொள்ள நினைக்கும் போது இரண்டு பாகங்கள் தான் பெயரிலும் செயல்பாட்டிலும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. அவை, RAM மற்றும் ROM. இவை இரண்டும் அதன் பெயரிலும் பயன்பாட்டிலும் வெவ்வேறானவை என நான் தெரிந்து கொண்டேன்.
இவை இரண்டும் எந்த எந்த நிலையில் பயன்படும், RAM, ROM இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்னைப்போலவே நீங்களும் ஆர்வமுடன் இருந்தால் நிச்சயமாக இது உங்களுக்கான பதிவு தான். கணினி பற்றி அறிந்துகொள்ள விரும்பினால் இங்கே ஏராளமான கட்டுரைகள் இருக்கின்றன. நீங்கள் படித்து பயன்பெறலாம்.
ROM என்றால் என்ன?
ROM என்பதன் ஆங்கில விரிவாக்கம் Read Only Memory. நாம் ஒரு கணினியை ஆன் செய்தவுடன் அது சில வேலைகளை தானாகவே செய்கிறது அல்லவா, அதற்கு சில புரோகிராம்கள் அவசியம் தானே. அப்படி, கணினி செயல்படுவதற்கு தேவையான புரோகிராம்கள் சேமிக்கப்பட்டு இருக்கும் இடம் தான் ROM மெமரி.

அதோடு, Input / Output கருவிகள் அனைத்தும் சரியான செயல்படுவதற்கும் ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள் அவசியம்.
ROM மெமரியில் உள்ளவற்றை யாராலும் அழிக்கவோ அல்லது மாற்றவோ முடியாது. ஒருமுறை மட்டுமே அதிலே புரோகிராம்களை பதிவேற்றம் செய்திட முடியும்.
கணினியில் மட்டுமல்லாது நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல்வேறு எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளிலும் இயங்கத் தேவையான புரோகிராம்களை சேமித்து வைக்க ROM மெமரி பயன்படுத்தப்படுகிறது.
RAM என்றால் என்ன?
RAM என்பதன் ஆங்கில விரிவாக்கம் Random Access Memory. நாம் ஒரு கணினியை ஆன் செய்துவிட்ட பிறகு ஏதேனும் ஒரு வேலையை செய்வோம் அல்லவா. அந்த குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு கணினிக்கு சில தகவல்கள் தற்காலிகமாக தேவைப்படும். அது, டேட்டாவாக இருக்கலாம், சிறிய புரோகிராமாக இருக்கலாம். இவை அனைத்தும் RAM மெமரியில் தான் சேமித்து வைக்கப்படும்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு புகைப்படத்தை எடிட் செய்திட நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த குறிப்பிட்ட வேலையை செய்திகொண்டு இருக்கும் போது மட்டும் குறிப்பிட்ட புகைப்படத்தை ஸ்டோரேஜ் இல் இருந்து எடுத்துவந்து RAM இல் வைத்திருக்கும். அப்போது தான் உங்களால் வேகமாக வேலையை செய்ய முடியும்.
அந்த வேலையை முடித்துவிட்டு வேறு வேலையை செய்யத் துவங்கினால் ஏற்கனவே எடுத்து வந்த புகைப்படம் RAM மெமரியில் இருந்து அகற்றப்பட்டு நீங்கள் இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலைக்கான பைல்கள் தான் RAM இல் இருக்கும்.
RAM மெமரியில் தகவல்கள் அனைத்தும் ட்ரான்ஸிஸ்டர்களில் [transistor] தான் சேமிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் கணினியை OFF செய்துவிட்டால் RAM இல் இருக்கும் ஒட்டுமொத்த தகவல்களும் அழிந்துவிடும். இப்படித்தான் RAM மெமரி செயல்படும்.
RAM ROM difference in Tamil
RAM ROM இரண்டும் வெவேறானவை என்பதனையும் இரண்டிற்கும் வெவ்வேறு பயன்பாடுகள் இருக்கின்றன என்பதனையும் நாம் மேலே பார்த்தோம். அவற்றை தவிர இன்னும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.
RAM | ROM |
RAM என்பதன் ஆங்கில விரிவாக்கம் Random Access Memory | ROM என்பதன் ஆங்கில விரிவாக்கம் Read Only Memory |
ROM மெமரியை விடவும் RAM மெமரியின் விலை அதிகமாக இருக்கும். | ROM மெமரி RAM மெமரியை விடவும் விலை குறைவானதாக இருக்கும். |
RAM மெமரியின் வேகம் ROM உடன் ஒப்பிடும் போது அதிகமாக இருக்கும். | ROM மெமரியின் வேகம் RAM மெமரியை விடவும் குறைவானதாக இருக்கும். |
ROM உடன் ஒப்பிடும் போது அதிகமான தகவல்களை RAM இல் சேமிக்க முடியும் | RAM உடன் ஒப்பிடும் போது குறைவான தகவல்களைத்தான் ROM இல் சேமிக்க முடியும் |
RAM இல் தகவல்களை அழிக்கவோ, மாற்றவோ முடியும். | ROM இல் உள்ள தகவல்களை படிக்க மட்டுமே முடியும். அழிக்கவோ மாற்றவோ முடியாது. |
CPU வினால் நேரடியாக RAM இல் உள்ள தகவல்களை பெற முடியும். | CPU வினால் நேரடியாக ROM இல் உள்ள தகவல்களை பெற முடியாது. குறிப்பிட்ட தகவலை RAM மெமரிக்கு கொண்டு வந்து பிறகு தான் பயன்படுத்த முடியும். |
கணினி ON இல் இருக்கும் வரைக்கும் தான் RAM இல் உள்ள தகவல்கள் இருக்கும். OFF ஆகிவிட்டால் அழிந்துவிடும். | ROM மெமரிக்கு பவர் தேவை இல்லை. எவ்வளவு நாட்கள் நீங்கள் OFF செய்து வைத்திருந்தாலும் ROM இல் உள்ள தகவல்கள் அப்படியே இருக்கும். |
கணினி பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். காலம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆகவே, கணினி உட்பட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம். நீங்கள் அப்படிப்பட்ட ஆர்வம் கொண்டவராக இருந்தால் நமது இணையதளத்தை தொடர்ந்து பாருங்கள். அருமையான டெக் சம்பந்தமான பதிவுகள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்.