கணினியை எளிமையாக பயன்படுத்துவதற்கு மிக முக்கியமான ஒரு கருவி “Mouse”. 1961 ஆம் ஆண்டில் மரத்தால் ஆன முதல் மவுஸ் உருவாக்கப்பட்டது. வருடங்கள் கடக்க கடக்க அதன் அமைப்பில் பல மாற்றங்கள் நடந்துகொண்டே வந்தாலும் அன்றுமுதல் இன்றுவரை மவுஸ் செயல்படும் தொழில்நுட்பம் என்பது என்னவோ ஒன்று தான்.
இன்று வீடுகளிலும் அலுவலகங்களிலும் கணினி (Computer) இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அப்படி அனைவரும் பயன்படுத்துகிற கணினியை எளிமையாக பயன்படுத்துவதற்கு மிக முக்கியமான ஒரு கருவி “Mouse”. 1961 ஆம் ஆண்டில் மரத்தால் ஆன முதல் மவுஸ் உருவாக்கப்பட்டது. வருடங்கள் கடக்க கடக்க அதன் அமைப்பில் பல மாற்றங்கள் நடந்துகொண்டே வந்தாலும் அன்றுமுதல் இன்றுவரை மவுஸ் செயல்படும் தொழில்நுட்பம் என்பது என்னவோ ஒன்று தான்.
Who invented the computer mouse?
கம்ப்யூட்டர் மவுஸ் கண்டறியப்படுவதற்கு முன்பாக நீங்கள் ஒரு கணினியை இயக்கிட வேண்டுமெனில் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும், அப்போது தான் மவுஸ் இல்லாமல் அதனை இயக்கிட முடியும். டக்ளஸ் ஏங்கள்பர்ட் (douglas engelbart) என்ற அறிவியல் மாமேதை மவுஸ் என்பதனை கண்டுபிடித்து கணினியை அனைவரும் எளிமையாக பயன்படுத்துவதற்கான வழியை செய்தார்.
ஆரம்பகாலங்களில் மவுஸ் “X-Y Position Indicator” என்று தான் அழைக்கப்பட்டது. அது ஒயருடன் தொங்கும் போது எலியை போன்று இருக்கிறது என எவரோ சொல்லப்போக அதுவே வழக்கமாகி இன்று அனைவரும் மவுஸ் என அழைக்கும்படி ஆகிவிட்டது.
Types of Computer Mouse
- Ball-style computer mouse
- Optical Mouse
- Wireless Mouse
How ball-style computer mouse works?
மவுஸ் (Computer Mouse) பயன்படுத்தும் போது அதனை திருப்பி பின்பக்கமாக பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தால் ஒரு உருண்டையான பந்து ஒன்று சுழலும் வகையில் அமைப்பப்பட்டிருப்பதனை பார்த்திருக்கலாம், தற்போது இருக்கின்ற மவுஸ்களில் LED விளக்கு இருக்கும். பின்வருபவை தான் ஒரு மவுசில் இருக்கின்ற பாகங்கள்,
1. இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தினால் அதனை உணரும் சுவிட்ச் [Switch detects clicks of left mouse button]
2. நடுவில் இருக்கும் பட்டனை அழுத்தினால் அதனை உணரும் சுவிட்ச் [Switch for middle button]
3. வலது பக்க பட்டனை அழுத்தினால் அதனை உணரும் சுவிட்ச் [Switch for right button]
4. கணினியுடன் இணைக்கும் இணைப்பு [Old-style connection to PS/2 socket on computer]
5.அனலாக் சிக்னலை டிஜிட்டல் சிக்னலாக மாற்றிடும் சிப் [Chip turns back-and-forth (analog) mouse movements into numeric (digital) signals computer can understand]
6.X-axis வீல் இடது மற்றும் வலது பக்கம் நகரும் போது நகரும் [X-axis wheel turns when you move mouse left and right]
7.Y-axis wheel turns when you move mouse up and down [வீல் மேல் மற்றும் கீழ் பக்கம் நகரும் போது நகரும்]
8.Heavy rubber wheel [ரப்பர் வீல்]
9.Spring presses rubber ball firmly against X- and Y-axis wheels so they register movements properly [ரப்பர் பாலை அழுத்திடும் ஸ்ப்ரிங் அமைப்பு]
10.Electrolytic capacitor [எலெட்ரோலைடிக் கெப்பாசிட்டர்]
11. Resistors [ரெசிஸ்டர்ஸ்]
நாம் கம்ப்யூட்டர் மவுசை Computer Mouse) மேசையில் நகர்த்திடும் போது அடிப்பகுதியில் இருக்கின்ற பால் போன்ற அமைப்பு சுழலும். அப்போது அதன் பக்கவாட்டில் இருக்கும் X Axis மற்றும் Y Axis வீல்களை அழுத்தும் [6 மற்றும் 7]. இதன் மூலமாக மவுஸ் எந்த திசையில் நகர்த்தப்படுகிறது என்பதனை அறிய முடியும். உதாரணத்திற்கு நாம் மவுசை மேல்புறமாக நகர்த்திடும் போது Y Axis வீலை அழுத்தும், இடது மற்றும் வலது பக்கம் நகர்த்தப்படும் போது X Axis வீலை அழுத்தும். இரண்டுபக்கமும் நகரும் போது இரண்டு வீல்களும் அழுத்தப்படும்.
இரண்டு வீல்களும் ஒரு பிளாஸ்டிக் தடுப்பானுடன் இணைக்கப்பட்டு இருக்கும் (Plastic Spokes), நீங்கள் வீல்களை அழுத்திடும் போது இந்த தடுப்பான் சுழலும். அப்படி சுழலும் போது அவை ஒளிக்கற்றையை தடுக்கும். நீங்கள் வேகமாக நகர்த்தினால் இந்த Spoke வேகமாக சுழலும், ஆகவே அதிகமாக ஒளிக்கற்றையை தடுக்கும். இந்த அளவை கொண்டு எவ்வளவு வேகத்தில் மவுஸ் நகர்த்தப்படுகிறது என்பதனை அறிந்துகொள்ள முடியும்.
மவுசில் இருக்கின்ற சிப் இதனை அளவீடு செய்து கணினிக்கு கேபிள் மூலமாக தகவலை அனுப்புகிறது. கணினியில் இருக்கும் மென்பொருள் இந்த தகவலை பெற்று அதற்கேற்றவாறு கர்சரை நகர்த்தும்.
How an optical mouse works?
ஆப்டிகல் மவுஸ் முற்றிலும் வேறு தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது. தற்போது பெரும்பான்மையாக ஆப்டிகல் மவுஸ் தான் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மவுசை திருப்பி பார்த்தால் அடிப்புறத்தில் ஒரு LED விளக்கு எரியும், அதன் பக்கத்திலேயே போட்டோ செல் (Photo Cell) இருக்கும். LED விளக்கிலிருந்து வெளிப்பட்டு மேசையில் பட்டு எதிரொளித்து வரும் ஒளியினை அருகில் இருக்கும் போட்டோ செல்லில் (Photo Cell) படும். அப்படிப்படும் ஒளியினைக்கொண்டு எந்த திசையில் மவுஸ் நகர்கிறது என்பது அறியப்படும். நாம் மவுசை வெவ்வேறு திசைகளில் நகர்த்தும்போது வெவ்வேறு விதமான பேட்டர்ன் உருவாவதனை கொண்டு நாம் எந்த திசையில் நகர்த்துகிறோம் என்பதனை அறிய இயலும்.
How an wireless mouse works?
மற்ற மவுஸ்களில் தகவல் அனைத்தும் கேபிள் மூலமாக கணினிக்கு அனுப்பப்பட்டு அதற்கேற்றவாறு திரையில் கர்சர் (Cursor) நகரும். ஆனால் wireless mouse இல் தகவல் புளுடூத் அல்லது wifi மூலமாக அனுப்பப்பட்டு கணினி அதற்கேற்றவாறு செயல்படும். மற்ற மவுஸ்களுக்கு தேவையான மின்சக்தி கணினியில் இருந்தே பெறப்படும் ஆனால் wireless mouse இல் மவுசை தனியாக சார்ஜ் செய்ய வேண்டியது இருக்கும்.
கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here