TNPSC போன்ற போட்டித்தேர்வுகளுக்கு படிப்போருக்கு உதவும் நோக்கத்தில் தொடர்ச்சியாக முக்கிய அரசு திட்டங்கள் குறித்து பதிவிட்டு வருகிறோம். அந்தவகையில், இந்தப்பதிவில், தமிழக அரசின் சார்பாக அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம் [tamilnadu sanitation workers development scheme] குறித்து பார்க்கலாம்.
திட்டத்தின் பெயர் : தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்
திட்டத்தின் நோக்கம்
1. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
2. தூய்மைப் பணியாளர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுதல்
3. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியை வழங்குதல்
4. தூய்மைப் பணிக்கு தேவையான இயந்திர கருவிகளை இயக்க முறையாக பயிற்சி அளிப்பது
5. தூய்மைப் பணியாளர்கள் விரும்பினால் மாற்றுத் தொழில் துவங்கி வங்கிக்கடன் வசதி
போன்ற பல சிறப்பான நோக்கங்களை உள்ளடக்கியது தான் தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்.
திட்டம் எப்படி செயல்படுத்தப்பட இருக்கிறது?
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மொபைல் ஆப் மூலமாக சுமார் 30 கேள்விகள் தூய்மைப் பணியாளர்களிடம் கேட்கப்படும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஒருங்கிணைக்கப்படும். அப்படி சேகரிக்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தூய்மைப் பணியாளர்களின் வாழ்வினை மேம்படுத்த தேவையான நடவெடிக்கைகள் செயல்படுத்தப்படும்.
இந்தத்திட்டதை, தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் மதுரையில் டிசம்பர் 09,2022 அன்று துவங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்தத்திட்டம், சென்னை, மதுரை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை, சேரன்மகாதேவியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TECH TAMILAN