போட்டித்தேர்வின் வெற்றியாளர் – சத்ரியன்


கடினமாக போட்டித்தேர்வுகளுக்கு படிக்கின்ற மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் விதமாகவும் இருக்கும் என்ற நோக்கத்தில் வெற்றி பெருகிறவர்களுக்கு சிறு தொகையை பரிசளிக்கும் விதமான போட்டித்தேர்வை நடத்த துவங்கி இருக்கிறோம். அதன்படி மார்ச் 16 அன்று முதல் தேர்வை வெளியிட்டு இருந்தோம். இது இரண்டாவது தேர்வு.

 

அதில் முதல் இடம் பிடித்திருப்பவர் வாணியம்பாடியை சேர்ந்த சத்ரியன். அவருக்கு பரிசுத்தொகையான 100 ரூபாய் வழங்கப்பட்டுவிட்டது. மிகச்சிறிய தொகையாக இருந்தாலும் அவரை இது ஊக்கப்படுத்தும் என நம்புகிறோம். பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அடுத்து வரக்கூடிய தேர்வில் நீங்கள் தேர்ச்சி அடைய வாழ்த்துக்கள். 

 

இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

அறத்துக்கீறுண்டோ பிரித்தெழுதுக

 

அறத்துக்கீறு + உண்டோ  

அறத்து + கீறு + உண்டோ

அறம் + அது + ஈறு + உண்டோ

அறத்துக்கு + ஈறு + உண்டோ [சரியான விடை]

 

புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும் புரட்சி வேண்டுமடா என முழங்கியவர்

 

வஉசி

விவேகானந்தர்

முவ

இராமலிங்க பிள்ளை [சரியான விடை]

 

கொலைவாளினை எட்டாமிகு; கொடியோர் செயல் அறவே என கூறியவர்

 

முவ

திருவிக

பாரதிதாசன் [சரியான விடை]

பாரதியார்

 

பிரித்தெழுது உரமொருவற்கு

 

உரம் + ஒருவற்கு

உரம் + ஒருவன் + கு [சரியான விடை]

உரமொருவன் + கு

உரம் + ஒருவர் + கு

 

ஒரு நகரத்தில் 32000 பேர் இருக்கிறார்கள். அவர்களில் 40% பேர் ஆண்கள், 25% பெண்கள், மீதம் இருப்பவர்கள் குழந்தைகள் எனில் குழந்தைகளின் எண்ணிக்கை என்ன?

 

11200 [சரியான விடை]

10200

10000

 

 சியோல் அமைதி விருது எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது ?

 

1990 [சரியான விடை]

2000

2010

 

எட்னா எரிமலை அமைந்துள்ள நாடு?

 

இத்தாலி [சரியான விடை]

அமெரிக்கா

ரஷ்யா

 

பிறவி இருள், ஒளியமுது , வாழ்க்கைப் போர் – இலக்கண குறிப்பு வரைக

 

உருவகங்கள் [சரியான விடை]

பண்புத்தொடர்

வினைத்தொகை

 

புதுக்கவிதையின் தந்தை என போற்றப்படுபவர் யார்?

 

ந. பிச்சமூர்த்தி [சரியான விடை]

சேக்கிழார்

பெரியார்

 

ஒரு மிதிவண்டியின் விலை ரூ 1500 என குறிக்கப்பட்டுள்ளது. அந்த மிதிவண்டியை கடைக்காரர் ரூ 1350 க்கு விற்கிறார் எனில் அவர் எவ்வளவு கொடுத்த தள்ளுபடி சதவிகிதம் எவ்வளவு?

 

10% [சரியான விடை]

15%

20%

 

BioAsia 2020 இந்த ஆண்டு எங்கு நடைபெற்றது

 

தெலுங்கானா  [சரியான விடை]

ஆந்திரா

தமிழ்நாடு

 

உலக வானொலி தினம்

 

பிப்ரவரி 13 [சரியான விடை]

மார்ச் 13

ஏப்ரல் 13

 

Bhabha Kavach [பாபா கவாச்] என்பது

 

கவச உடை  [சரியான விடை]

தானியங்கி பீரங்கி

ராணுவ அணி

 

கொல்கத்தாவில் நடைபெற்ற பெண்களுக்கான தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில்  64 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

 

ராக்கி ஹால்டர் [சரியான விடை]

பிவி சிந்து

மீராபாய் சானு

 

அறிவுசார் சொத்து பட்டியலை அமெரிக்காவின் Global Innovation Policy Centre (GIPC) பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டது. அதில் இந்தியா எத்தனையாவது இடம் பிடித்திருக்கிறது?

 

40 [சரியான விடை]

36

13

 

பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட சர்வதேச எரிசக்தி முகமையின் தரவரிசையில் அதிக மின் உற்பத்தியை உருவாக்கும் நாடுகளின் இந்தியா  எந்த இடத்தில் இருக்கிறது?

 

3 [சரியான விடை]

4

5

 

சர்வதேச மகிழ்ச்சி தினம்

 

மார்ச் 20 [சரியான விடை]

மார்ச் 21

மார்ச் 22

 

உலகளாவிய மறு சுழற்சி நாள்

 

மார்ச் 18 [சரியான விடை]

மார்ச் 19

மார்ச் 21

 

கிராமங்களில் நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்திடும் சட்டம்

 

கிராம் நியாயாலயச் சட்டம், 2008 [சரியான விடை]

கிராம் நியாயாலயச் சட்டம், 2018

கிராம் நியாயாலயச் சட்டம், 2020

 

கரோனா வைரஸ் பரவ எது முக்கியக்காரணம்

 

மக்கள் நெருக்கமாக இருப்பது

கைகளை கழுவாமல் இருப்பது

காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பது

இவை அனைத்தும் [சரியான விடை]

 

மாதிரி தேர்வுகளை எழுதி எழுதி பயிற்சி பெற : https://techtamilan.in/tnpsc-online-test/

அடுத்த தேர்வு பற்றிய தகவல்களை தவறாமல் தெரிந்துகொள்ள இந்த பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள் [Click Here]






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.