Site icon Tech Tamilan

கார்-டி புற்றுநோய் சிகிச்சையில் ஒரு மைல்கல் : அனைத்துவிதமான புற்றுநோய்களை குணப்படுத்தும் செல் கண்டுபிடிப்பு

CAR - T Cancer Treatment கார்-டி

CAR - T Cancer Treatment கார்-டி

CAR - T Cancer Treatment கார்-டி

CAR T

புற்றுநோயை குணப்படுத்துவதில் கார்-டி புற்றுநோய் சிகிச்சை முறை ஒரு வரப்பிரசாதம் என மருத்துவர்கள் கூறிவந்த நிலையில் அனைத்து புற்றுநோய்களையும் குணப்படுத்த வல்ல பொதுவான டி செல்களை கண்டறிந்துவிட்டதாக மருத்துவ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள்.

மருத்துவத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்க்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் கூட கார்-டி புற்றுநோய் சிகிச்சை முறை என்பது புதுமையானதொரு சிகிச்சை முறையாக இருக்கிறது. இந்த சிகிச்சை முறையில் நோயாளியின் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரத்த வெள்ளை அணுக்களில் மாறுதலை உண்டாக்கி அதனைக்கொண்டே புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. இப்படி மாற்றப்படும் வெள்ளை அணுக்களால் குறிப்பிட்ட வகை புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்க முடியும் என நம்பப்பட்டு வந்த சூழலில் அனைத்துவகை புற்றுநோய் செல்களையும் அழிக்க வல்ல பொதுவான வெள்ளை அணுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக Nature Immunology எனும் பருவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கார்-டி சிகிச்சை என்றால் என்ன?

புற்றுநோயைத் தாக்கி அழிக்கும் வகையில் நோயாளியின் நோய் எதிர்ப்பு அமைப்பையே மாற்றியமைக்கும் சிகிச்சை முறை தான் கார்-டி  சிகிச்சை முறை. இந்த முறையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தம் வெளியேற்றப்பட்டு ரத்த வெள்ளை அணுக்கள் பிரித்தெடுக்கப்படும். புற்றுநோய் உயிரணுக்களைக் கண்டறிந்து கொல்லும் வகையில் மரபணு முறையில் அந்த வெள்ளை அணுக்கள் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் நோயாளியின் உடலுக்குள் அந்த வெள்ளையணுக்கள் அனுப்பப்படும். மாற்றம் செய்யப்பட்ட வெள்ளை அணுக்கள் புற்றுநோய் அணுக்களை கண்டறிந்து அதனை தாக்கி அழிக்கும்.

குறிப்பிட்ட வகை கேன்சர் அணுக்களை கண்டறிந்து அழிக்கும் இந்த சிகிச்சை முறைக்கு கிட்டத்தட்ட 4.75 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவாகும். அதேபோல இந்த முறையிலான சிகிச்சை முறையில் பக்க விளைவுகளும் இருக்கவே செய்கின்றன.

அனைத்துவிதமான புற்றுநோய்களை குணப்படுத்தும் செல் கண்டுபிடிப்பு

அனைத்து நோயாளிகளுக்கும் அனைத்துவிதமான புற்றுநோய் அணுக்களை கண்டறிந்து அழிக்கும் யுனிவெர்சல் வெள்ளை அணுக்கள் [‘universal’ T-cell] கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இன்னமும் இந்த மாதிரி மனிதர்களில் சோதனை செய்து பார்க்கப்படவில்லை என்றாலும் கூட, இப்படி ஒன்று இருக்கவே முடியாது என மருத்துவ உலகில் கூறிக்கொண்டிருந்த விசயம் சாத்தியம் தான் என தெரிய வந்திருப்பது புரட்சிகரமான விசயமாக பார்க்கப்படுகிறது.

இப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள செல்லானது நல்ல செல் எது, புற்றுநோய் செல் எது என பிரித்துப்பார்க்கும் திறனுள்ளதாக இருக்கும். இதனால் எந்தவிதமான புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்க முடியும்.

தற்போது ஆரம்ப நிலையில் தான் இந்த மருத்துவ சிகிச்சை இருக்கிறது. இன்னமும் இந்த மருத்துவ சிகிச்சையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படுவது அவசியமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version