Site icon Tech Tamilan

உங்க பிசினஸை பெருக்குவது எப்படி?பிராண்டிங் என்றால் என்ன? பிராண்டிங் இன் நன்மைகள் என்ன? | Branding Explained in Tamil

உங்க பிசினஸை பெருக்குவது எப்படி? | Branding Explained in Tamil

உங்க பிசினஸை பெருக்குவது எப்படி? | Branding Explained in Tamil

உங்க பிசினஸை பெருக்குவது எப்படி? | Branding Explained in Tamil

Branding

மற்ற டிவியை காட்டிலும் 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என சோனி பிராண்ட் டிவியை வாங்குகிறோம் அல்லவா. அது எதனால்? ஏனென்றால் அது ஒரு பிராண்ட். அந்த பிராண்ட் டிவி நீண்ட நாள் உழைக்கும் என்ற நம்பிக்கை.

ஒரு பெயர் அல்லது லோகோ அல்லது வசனம் அல்லது அடையாள குறி இவற்றை காணும்போது ஒரு கம்பெனியின் பெயர் நினைவுக்கு வந்தால் அதற்கு பெயர் தான் “பிராண்டிங்”. பிராண்டிங் என்பது ஒரு நிறுவனத்தின் பொருளை மற்ற நிறுவனங்களின் பொருள்களில் இருந்து பிரித்துக்காட்டுவது, நிறுவனத்தினை மக்களுக்கு நினைவூட்ட பயன்படுவது.

பிராண்டிங் தவிர்க்க முடியாதது ஏன்?

இன்றைய தொழில் யுகத்தில் ஒரே பொருளை வெவ்வேறு தரத்துடன் பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. நல்ல பொருளை “Brand” பெயரில் விற்பனை செய்தால் மட்டுமே அந்த குறிப்பிட்ட நிறுவனம் தயாரிக்கும் பிற பொருள்களின் மீதான நம்பிக்கையையும் அது கூட்டும். உதாரணத்திற்கு “ஆப்பிள்” நிறுவன மொபைல் நன்றாக செயல்படுகிறது என வைத்துக்கொள்வோம். நாளை அவர்களே புதிய மொபைல் ஒன்றினை வெளியிடுகிறார்கள் எனில் மக்களிடம் அந்த புதிய மொபைலை கொண்டு செல்ல “ஆப்பிள்” என்ற பிராண்டிங் பயன்படும்.

மக்களின் நம்பிக்கையை பெரும்

எத்தனை தொலைக்காட்சிகள் வந்தாலும் சோனி டிவி சும்மா அருமையா தெரியும் என கூறும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அத்தனை சோனி டிவி யையும் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் பார்த்த அல்லது கேள்விப்பட்ட சோனி டிவி பற்றிய கருத்தாக அது இருக்கலாம்.  இந்த இடத்தில் சோனி என்பதுதான் பிராண்டிங். சோனி நிறுவனம் அதற்கடுத்து டிவி வெளியிட்டாலும் மக்கள் அதே நம்பிக்கையை வைத்திருப்பார்கள். தரமான பொருள்களை உற்பத்தி செய்வது மட்டுமே விற்பனையை பெற்றுத்தந்தது விடாது. அதோடு சேர்த்து பிராண்டிங் செய்திடும்போது மக்களின் நம்பிக்கையை பெரும்.

புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தரும்

ஒரு நல்ல நிறுவனத்தின் பொருளை மக்கள் நிச்சயமாக அடுத்தவர்களுக்கு பரிந்துரைப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பெயரிலேயே தொடர்ச்சியாக நல்ல பொருள்களை விற்பனை செய்திடும்போது அந்த நிறுவனத்தின் பெயர் அல்லது லோகோ போன்றவை மக்களின் மனதில் எளிமையாக பதிந்துவிடும். புதியவர்களுக்கு பரிந்துரை செய்திட அல்லது விளம்பரம் செய்திட கூட எளிமையானதாக இருக்கும்.

பணியாட்களுக்கு பெருமை அளிக்கும்

நான் ஒரு நிறுவனத்தில் பணி செய்கிறேன் எனில் அங்கு என்ன வேலை பார்க்கிறேன் என்பது முக்கியமல்ல. ஆனால் அந்த நிறுவனம் பிறருக்கு பரிட்சயமானதாக இருக்கும்போது எனது நிறுவன பெயரை கூறிக்கொள்வதில் ஒரு பெருமை இருக்கும். உதாரணத்திற்கு TCS அல்லது Wipro போன்ற கம்பெனிகளில் சாதாரணமான வேலை செய்தாலும் வெளியில் சொல்லிக்கொள்வதற்கு பெருமையாக இருக்கும்.

 

அப்படிப்பட்ட சூழலில் பணியாட்கள் திருப்தியோடு சிறப்பாக பணியாற்றுவார்கள்.

விலையில் சமரசத்தை உண்டாக்கும்

ஒரே விதமான பொருள் இருவேறு நிறுவனங்களில் விற்பனைக்கு வந்தாலும் மக்கள் ஒரு நிறுவனத்தின் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். விலை சற்று அதிகமானதாக இருந்தாலும் அந்த நிறுவனத்தில் வாங்கினால் நன்றாக இருக்கும் என நம்புவார்கள். அதற்க்கு காரணம் “பிராண்டிங்” தான்.

 

நீங்கள் ஒரு நிறுவனத்தை துவங்குகிறீர்கள் எனில் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று. பிராண்டிங் செய்வதன் துவக்கப்புள்ளி “விளம்பரம்”. அதற்கடுத்ததாக இருப்பது “தரம்”. பிராண்டிங் என்பது ஏதோ ஒரு இரவில் கிடைத்துவிடக்கூடியது அல்ல, தொடர்ச்சியாக சிறப்பான சேவையை செய்வதன் மூலமாகவே நல்ல “பிராண்டிங்” ஐ உருவாக்கிட முடியும். ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அந்த பிராண்டிங்கே உங்களுக்கு எதிரானதாக மாறிவிடவும் வாய்ப்பு உண்டு.







Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version