இணையதளம் என்றால் என்ன? முதல் இணையதளம் எது?

Menu's are very important part of website. By creating a menu you can direct visitors to right place

Website

இணையதளம் (website) என்பது மின்னணு வடிவில் பல தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும் இணையப்பக்கங்களின் தொகுப்பு என பொருள் கொள்ளலாம்.

இணையதளம் (website) என்பது மின்னணு வடிவில் பல தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும் இணையப்பக்கங்களின் தொகுப்பு என பொருள் கொள்ளலாம். அவ்வாறு சேகரிக்கப்பட்ட இணைய பக்கங்களை முகப்பக்கத்திற்கு (domain) சென்று பிரௌசர் உதவியுடன் திறந்து பார்க்க முடியும்.

அந்த முழுப்பக்க முகவரி வெப்சைட் (website URL) என அழைக்கப்படுகிறது. உதாரணமாக http://pamarankaruthu.com/ இது ஒரு வெப்சைட் முகவரி (website URL).

இணையதளத்தை எவ்வாறு பார்க்க முடியும்?

FIRST WEBSITE(http://info.cern.ch/) (http://info.cern.ch/)

இணையதளத்தை திறந்து பார்க்க உதவக்கூடிய டூலின் பெயர் பிரௌசர் (Web Browser). இன்று பல பிரௌசர்கள் (browser) பயன்பாட்டுக்கு வந்துள்ளன. Google நிறுவனத்தின் கூகிள் குரோம் (Google Chrome) , மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer), எட்ஜ் (Edge), சபாரி (Safari), Firefox போன்றவை சில பிரௌசர்கள் .

இந்த பிரௌசர்களில் ஏதேனும் ஒன்றை தரவிறக்கி அதனை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு உங்களுக்கு தேவையான இணைய முகவரியை அதில் இட்டு அந்த இணையதளத்தின் பக்கங்களை திறந்து பாருங்கள்.

முதல் இணையதளம் செயல்பாட்டுக்கு வந்த தினம் ஆகஸ்ட் 06, 1991. இதனை CERN நிறுவனத்தை சேர்ந்த Tim Berners-Lee என்பவரால் உருவாக்கப்பட்டது. அந்த இணையதளம் இதுதான் (http://info.cern.ch/) திறந்து பாருங்கள்.

யாரெல்லாம் இணையதளத்தை உருவாக்க முடியும் ?

For creating a attractive and responsive website, it is important to choose right themes

இன்று தொழில்நுட்பமும் கல்வியும் வளர்ந்துவிட்டது. இப்போது யார் வேண்டுமானாலும் மிக எளிமையாக தங்களுக்கான இணையதளத்தை திறந்து கொள்ளமுடியும். ஆனால் அதற்காக கொஞ்சம் காசு செலவு செய்தால் போதுமானது.

நிறுவனங்கள், கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் , தனிநபர்கள் என பலரும் தங்களது தேவைக்கேற்ப இணையதளத்தை திறந்துகொண்டு அதன் மூலமாக தங்களது கருத்துக்களை உலகிற்கு கொண்டு சேர்க்கின்றனர்.

இணையதளத்தின் நன்மை என்ன ?

இணையத்தின் மூலமாக உங்களது கருத்துக்களை உலகின் எந்த மூலையில் உள்ளவரும் ,உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் எழுதும் கருத்துக்களை நீங்களும் படிக்கலாம்.

சாதாரண வியாபாரியாக உள்ளூரில் மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஒருவரால் இணையத்தின் உதவியால் உலகம் முழுமைக்கும் தன்னுடைய பொருள் பற்றி கூறி விற்றிட முடியும்.

படிக்கும் மாணவர்கள் இணையத்தின் உதவியால் பல தகவல்களை வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

இன்னும் பல நன்மைகள் இணையதளத்தின் உதவியால் கிடைத்திருக்கிறது.

உங்களுக்கான இணையதளத்தை நீங்களே உருவாக்குவது எப்படி என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

Previous

பிளாக்கிங் என்றால் என்ன?

Next

இன்டர்நெட் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி?





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.