User Roles எப்படி செட் செய்வது? | What are the different user roles available in wordpress?

நீங்கள் உங்களது blog ஐ ஆரம்பித்த பிறகு போஸ்ட்களை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதலில் செய்ய வேண்டியது யார் இந்த போஸ்ட்களை எழுதுகிறார்  என்கிற தகவலை அப்டேட் செய்வதுதான் .

இதற்கு நீங்கள் இடதுபக்கமாக இருக்கின்ற Users tab க்குள் சென்று User name க்கு கீழே இருக்ககூடிய edit ஆப்சனை கிளிக் செய்து எழுதுபவரது பெயரை அப்டேட் செய்து கொள்ளுங்கள் .

ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் போஸ்ட்களை எழுதினால் Add New என்கிற ஆப்சனை கிளிக் செய்து அடுத்த நபரின் பெயரை பதிவிடலாம் .

புதிதாக இணைபவரின் பெயர், மின்னஞ்சல், password மற்றும் அவர்களின் Role ஆகியவற்றை பதிவிடுங்கள். ஒவ்வொரு Role க்கும் சில வசதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த நபர்களால் குறிப்பிட்ட சிலவற்றை மட்டுமே செய்திட முடியும்.

Administrator Role : Administrator Role வைத்திருப்பவரால் அனைத்தையுமே செய்ய முடியும். ஆகவே நம்பிக்கையானவர்களுக்கு மட்டுமே Administrator Role கொடுப்பது நல்லது.

Editor Role : Editor Role வைத்திருப்பவரால் போஸ்ட் எழுதுவது, அப்டேட் செய்வது, கமெண்டில் மாற்றம் செய்வது, போஸ்ட்களை வெளியிடுவது போன்றவற்றை செய்திட முடியும். Themes, plugins, or widgets போன்றவற்றில் எந்த மாறுதலையும் செய்திட முடியாது.

Author Role : Author Role வைத்திருப்பவரால் போஸ்ட் எழுதுவது, அப்டேட் செய்வது, போஸ்ட்களை வெளியிடுவது போன்றவற்றை செய்திட முடியும். ஆனால் அவர் எழுதியவற்றில் மட்டுமே இந்த மாறுதல்களை செய்திட முடியும். மற்றொரு user எழுதியவற்றை மாற்றிட இயலாது.

Contributor Role : Contributor Role வைத்திருப்பவரால் போஸ்ட் எழுதுவது, அப்டேட் செய்வது போன்றவற்றை செய்திட முடியும். ஆனால் அவரால் Publish செய்திட முடியாது. அந்த போஸ்டை admin அல்லது editor பார்த்து பின்னர் அவர்கள் publish செய்தால் மட்டுமே publish ஆகும். மேலும் அவர்களால் Media Library ஐ பயன்படுத்திட இயலாது. தேவை ஏற்பட்டால் admin அல்லது editor இன் உதவியை நாடலாம்.

Previous

Learn Excel in Tamil

Next

எக்ஸலில் இருக்கக்கூடிய முக்கிய ஆப்சன்கள்






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.