இணையதளங்களின் மூலமாக சம்பாதிக்க முதன்மையானது விளம்பரம். குறிப்பாக AdSense மூலமாக விளம்பரங்களை இணையதளங்களில் இடம்பெற வைப்பது மிகவும் எளிமையானது. AdSense இல் உங்களுக்கான Account ஐ முதலில் திறப்பது அவசியம். அதற்கான வழிமுறைகள் https://techtamilan.in/blogging-tutorial/how-to-monetize-your-blog-using-google-adsense/ இருக்கின்றன. நாம் இந்த பகுதியில் பார்க்க இருப்பது AdSense Auto Ads ஐ உங்களது இணையதளத்தில் எளிமையாக இடம்பெற வைப்பது எப்படி என்பதனை தான்.
பொதுவாக மற்ற publisher களில் layout க்கு ஏற்றவாறு creative tag ஐ generate செய்து நமது இணையதளத்தில் போட வேண்டி இருக்கும். இதனால் நமக்கு கூடுதல் வேலை ஏற்படும். AdSense Auto Ads அந்த வேலைப்பளுவை குறைக்கிறது. ஆம் நண்பர்களே ! இந்த ஆப்சனை பயன்படுத்தினால் பார்க்கும் கருவிகளுக்கு ஏற்றவாறு அல்லது நபர்களுக்கு ஏற்றவாறு தகுந்த விளம்பரங்களை AdSense இணையதளத்தில் இடம்பெற செய்யும்.
இதனை எவ்வாறு செய்வது என்பதனை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
How to setup Auto Ads in wordpress?

> Create Adsense account using your gmail [
https://www.google.com/intl/en_in/adsense/start/
]

> Ads > AUTO ADS ஆப்சனை கிளிக் செய்து உங்களது தேவையான ad format களை தேர்ந்தெடுங்கள்

> பிறகு Setup AUTO ADS பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கான code காட்டப்படும். அருகிலேயே Copy and paste this code in between the <head> tags of your site என சொல்லப்பட்டு இருக்கும். இது என்னவென்றால் அந்த code ஐ Copy செய்து நமது Theme இல் உள்ள Header பகுதிக்குள் பதிவிட வேண்டும். Theme code ஐ மாற்றுவது சற்று பிரச்சனைக்கு உரிய விசயம் தான்.
> இந்த வேலையை எளிமையாக செய்து முடிக்க “Advanced Ads” என்ற plugin, WordPress இல் இருக்கின்றது.
How to use “Advanced Ads” plugin in wordpress?
> WordPress menu இல் plugin ஐ கிளிக் செய்திடுங்கள்
> Click Add New button
> Search இல் “Advanced Ads” என பதிவிடவும்
> Click Advanced Ads and click Install and Activate

> பிறகு Advanced Ads > Settings > AdSense இல் உங்களது Adsense publisher ID ஐ பதிவிடவும்
> Adsense publisher ID என்பது Adsense account இல் நுழைந்தவுடன் URL இல் இருக்கும் [Example : Pub-123123123123]
> Select : Enable the verification code and auto ads option
> அவ்வளவு தான், இந்த Advanced Ads plugin ஆனது Adsense code ஐ உங்களது இணையதளத்தின் Header பகுதிக்குள் போட்டுவிடும். நீங்கள் வேறு எதனையும் செய்யவேண்டி இருக்காது.
> இன்னும் இந்த plugin இல் இருக்கும் ஆப்சன்களை பயன்படுத்தி விளம்பரம் தோன்றுவதில் மாற்றங்களை செய்துகொள்ள முடியும்.
TECH TAMILAN