How to add ads.txt in your site? | adsense blank ad issue fixed | wordpress | blogging tutorials

Ads.txt issue notification

Ads.txt

ஜுன் மாத துவக்கத்தில் இருந்து பெரும்பாலான இணையதளங்களில் விளம்பரங்கள் தோன்றுவதில் சிக்கல் எழுந்தது . ads.txt ஐ இணையதளத்தில் அப்லோட் செய்தவுடன் அந்த பிரச்சனை நீங்கிவிட்டது .


IAB ஆனது டிஜிட்டல் அட்வர்டைஸிங் இல் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவதற்காக Authorized Digital Sellers அல்லது ads.txt எனும் முறையை அறிமுகப்படுத்தியது. இணையதளம் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்களது இணையதளத்தில் பின்வரும் ads.txt எனும் பைலை அப்லோட் செய்திருக்க வேண்டும். மற்ற SSP அல்லது inventory அல்லது பிற விளம்பரங்களை வாங்கும் நிறுவனங்கள் (exchanges ) படிக்கின்ற (crawl) விதமாக வைத்திருக்க வேண்டும்.

ads.txt இன் பயன் என்னவென்றால், என்னிடம் ஒரு Adsense கணக்கு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதில் எனக்கென்று ஒரு Publisher Id ஒன்று வழங்கப்பட்டு இருக்கும். நான் நிர்வகிக்கின்ற இணையதளமான https://techtamilan.in இல் விளம்பரங்களை காண்பிக்க என்னுடைய Adsense இல் இருந்து தான் ad tag ஐ போட்டிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். குறிப்பிட்ட அந்த இணையதளம் குறிப்பிட்ட publisher கணக்கோடு தொடர்புடையதுதானா என்பதனை உறுதி செய்துகொள்ளவே ads.txt ஐ இணையதளத்தில் பகிரச்சொல்கிறது IAB .

அனைத்து இணையதளத்திலும் ads.txt கண்டிப்பாக இருக்கவேண்டும் என கட்டாயம் இல்லை. Google Adsense ஐ பொறுத்தவரைக்கும் ads.txt ஒவ்வொரு இணையதளத்திலும் இருக்கவேண்டியது அவசியம் தான் என்றாலும் மற்ற நிறுவனங்களை பொறுத்து அது கட்டாயமா இல்லையா என்பது மாறும். அது நீங்கள் எந்த Exchange உடன் தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்பதனை பொறுத்து மாறும்.

 

How to Create an ads.txt file

Ads.txt placement

ads.txt பைலை உருவாக்கிடுவது மிகப்பெரிய வேலையெல்லாம் இல்லை. மிகவும் எளிமையாக 30 வினாடிகளில் செய்துமுடிக்க முடிந்த வேலையே. பின்வரும் முறையில் ஒரு notepad இல் தகவலை பதிவிட்டு அதனை உங்களது இணையதளம் ஹோஸ்ட் செய்யப்படும் இடத்தில் இப்படி call செய்தால் “https://techtamilan.in/ads.txt” பார்க்க முடிந்தவாறு போட்டுவிடுங்கள்.

google.com, pub-515015869553737, DIRECT, f08c47fec0942fa0

இதிலேயே இன்னொரு முறையும் இருக்கிறது,

google.com, pub-515015869553737, RESELLER, f08c47fec0942fa0

DIRECT – இணையதளத்தை வைத்திருப்பவர் நேரடியாக adsense கணக்கினை நிர்வகிக்கிறார் எனில் DIRECT என பதிவிட வேண்டும்.

RESELLER – இணையதளத்தை நிர்வகிப்பவர் நேரடியாக adsense கணக்கினை நிர்வகிக்காமல் இன்னொருவரால் (like agency) நிர்வகிக்கப்படுகிறது எனில் RESELLER என பதிவிட வேண்டும்.






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.