Site icon Tech Tamilan

Bitcoin | Blockchain | Crypto Currency | BitCoin Explained in Tamil

BitCoin Explained in Tamil

BitCoin Explained in Tamil

 

பிட்காயின் குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பாக கிரிப்டோகரன்சி (Cryptocurrency)” குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.


கிரிப்டோகரன்சி என்றால் என்ன?

கரன்சி(Currency) என்றால் என்ன? பண நோட்டு (Currencies) , சில்லறைகள் (coins), டாலர்கள் (dollars), யூரோக்கள் (Euro) என சொல்லலாம். இவை அனைத்திற்கும் வடிவம் உண்டு. இவற்றை உங்கள் கண்களால் பார்க்க, கைகளால் கொடுத்து வாங்க முடியும். இது முற்றிலும் டிஜிட்டல் மயமானது இவை அனைத்திற்கும் மாற்றானது “கிரிப்டோகரன்சி (Cryptocurrency)”. ஆம் இது முற்றிலும் டிஜிட்டல் மயமானது. உங்களது கண்களால் பார்க்கவோ, தொடவோ முடியாது. இவை அனைத்தும் இணையத்தில் உள்ள வாலட் களில் எண் வடிவத்தில் இருக்கும். அந்த கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்பவர்களிடம் நீங்கள் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்டுத்திக்கொள்ளலாம், இணைய வர்த்தகத்தில் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.


கிரிப்டோ கரன்சியை உருவாக்குவது யார்?

இணையத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் கிரிப்டோகரன்ஸிக்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவை அனைத்துமே ஏதோ ஒரு குழுவால் ஏற்படுத்தப்பட்டவையே . கிரிப்டோ கரன்சி என்றவுடன் மக்களின் நினைவிற்கு முதலில் வருவது பிட்காயின் (bitcoin) தான். இது 2009 இல் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் சடோஷி நாகமோடோ (Satoshi Nakamoto) என்கிற தனிநபர் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அப்படிப்பட்ட நபர் யாரென்றே தெரியவில்லை. இதனை உருவாக்கியவர் தனி நபரா அல்லது குழுவா என கண்டுபிடிக்கமுடியவில்லை.


கிரிப்டோ கரன்சியை மக்கள் நம்புகிறார்களா?

பிட்காயின் (bitcoin) ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் விலை சில டாலர்களே. ஆனால் தற்போது ஒரு பிட்காயினின் விலை $10000 டாலர்களை தாண்டி நிற்கிறது. இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம் மக்கள் நம்புகிறார்களா இல்லையா என்பதனை. மக்கள் இதனை வரவேற்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இதனை யாராலும் கண்காணிக்க முடியாது, ஆகையால் இதற்க்கு வருமான வரி என்பது அவசியமில்லை ஆகையால் தான் தற்போது நிறுவனங்கள் கூட தற்போது பிட் காயின்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டன.


மார்க்கெட்டில் தற்போது இருக்கக்கூடிய கிரிப்டோ கரன்சிகள் என்ன

தற்போது புழக்கத்தில் பல கிரிப்டோ கரன்சிக்கள் இருக்கின்றன. அவற்றில் பிட்காயின் முன்னிலை வகிக்கிறது.


கிரிப்டோ கரன்சி வாங்கலாமா ? 100% நம்பிக்கையானதா ?

இணையத்தில் பல கிரிப்டோகரன்சி பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உருவாக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் இவற்றை வாங்குவது என்பது ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை போன்றதுதான். எப்போது இதன் மீதான நம்ம்பிக்கை மக்களிடத்தில் குறைய ஆரம்பிக்கிறதோ அப்போது அதன் மதிப்பு குறைந்துபோகும். உருவாக்கியவர்களே ஒருநாள் அதனை அழித்துவிட்டால் யாரிடமும் முறையிட வாய்ப்பிருக்காமல் போய்விடும். பல நாடுகள் ,பல நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டாலும் இந்தியாவை பொறுத்தவரை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன.


பிட்காயின் (Bit Coin) என்றால் என்ன?

 

முன்னனி இணையதளங்களின் தகவலின் படி உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய முதன்மையான க்ரிப்டோகரன்சிகளில் முன்நிலை வகிப்பது பிட்காயின் தான் . கிரிப்டோகரன்சியென்றால் முற்றிலும் இணையத்திலேயே இருக்ககூடிய டிஜிட்டல் கரன்சி .

 

இணையத்தில் புழக்கத்தில் உள்ள கிரிப்டோ கரன்ஸிக்கள்

 

நாம் பயன்படுத்தக்கூடிய பணம் கைகளால் தொட்டுப்பார்க்க முடியும் , பிறரிடம் நேரடியாக கொடுத்து வாங்க முடியும் . ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் டிஜிட்டல் மயமானது . இதனை ஆன்லைனில் பரிமாறிக்கொள்ளலாம் , பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் .

 


பிட்காயின் உருவான வரலாறு ? | History of Bit Coin in Tamil

 

பிட்காயின் 2009 ஆம் ஆண்டு உருவானது . இதனை உருவாக்கியது சடோஷி நாகமோடோ என அறியப்படுகிறது . இந்த பெயர் தனிநபரை குறிக்கிறதா அல்லது குழுவை குறிக்கின்றதா என தெரியவில்லை . இவரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது ” எந்த மத்தியதஸ்தரும் இல்லாத அதாவது RBI போன்று எந்த நிறுவனத்தையோ அல்லது சர்வரையோ சாராமல் முற்றிலும் தன்னிச்சையாக இயங்கக்கூடிய டிஜிட்டல் பணத்தை உருவாக்குவதே ” .
2011 இல் இதற்கான source code மற்றும் domain ஐ அறிமுகப்படுத்திவிட்டு தனது அடையாளங்களை அழித்துவிட்டார் . இதனால் இதுவரை பிட்காயின் உருவாக்கியது யாரென்றே தெரியவில்லை .

 


பிட்காயின் மக்கள் நம்பிக்கையை எப்படி பெற்றது ?

 

நாம் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கக்கூடிய பணத்தை உருவாக்குவது RBI என்கிற இந்திய அரசின் அமைப்பு , இதனைப்போலவே பல நாடுகளில் அந்த நாடுகளை சேர்ந்த அமைப்புகள் தங்கள் நாட்டுக்கென பணத்தை உருவாக்கிக்கொள்கின்றன . அதனை பரிமாற்றத்திற்கு பயன்படுத்தும் போது வங்கி என்கிற மூன்றாம் நபரின் உதவியோடு மட்டுமே செய்ய முடியும் .

 

கிரிப்டோகரன்சி

 

ஏதேனும் பொருளை வாங்கவேண்டும் என்றால் வங்கி அட்டையை பயன்படுத்தி வாங்குவோம் , அந்த வங்கி பொருளை விற்பவருக்கு பணத்தை வழங்கும் . இந்த எதுவுமே பிட்காயின் விசயத்தில் இல்லை . அதுதான் பிட்காயினின் நம்பிக்கையை அதிகரிக்க காரணம் .

 

இடைத்தரகர்களே கிடையாது

 

ஆம், பிட்காயின் இணையத்தில் ஒரு சில வழிமுறைகளை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது . ஆண்டுக்கு இவ்வளவு என்கிற விகிதத்தில் “mining ” என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றது .

 

நீங்கள் யாருக்காவது இந்த பணத்தை அனுப்பினால் நேரடியாக அவருக்கே சென்றுவிடும் . இதில் வங்கி போன்ற மூன்றாம் நபரின் கண்காணிப்போ தேவையோ இருக்காது .

 


பிட்காயினை கண்காணிப்பது யார்? | Who control and monitor Bitcoin?



பிட்காயின் தகவல் அனைத்தும் ஏதோ ஒரு சர்வரில் சேமிக்கப்பட்டு இருக்காது . மாறாக பிட்காயின் வைத்திருக்கக்கூடிய அனைவரது கணக்குகளிலும் மொத்த தகவலும் சேமிக்கப்பட்டு இருக்கும் . அதாவது வங்கி நமது விவரங்களை சேமித்து வைத்திருப்பதற்கு பதிலாக நாம் ஒவ்வொருவருமே அனைவரது தகவலையும் சேமித்து வைத்திருப்பதை போன்றது .

 

யாரேனும் ஒருவரிடத்தில் உணமையான தகவல் இருந்தால் கூட தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்படும் . இதுதான் இதன் மீதான நம்பிக்கையை அதிகரிக்க காரணம் .

 

இதனால் ஒவ்வொருமுறை பிட்காயின் அனுப்பும்போது யார் யாருக்கு பணம் அனுப்புகிறார் உள்ளிட்ட பல தகவல்கள், பிட்காயின் வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே அனுப்பப்பட்டு நமக்கு தெரியாமலேயே உறுதிப்படுத்தப்படும் . நாம் ஒருமுறை பண பரிமாற்றம் செய்திடும் போது ஒட்டுமொத்த தகவல்களையுமே அனுப்புவோம், இதனால் பிட்காயின் வைத்திருக்க கூடிய பலரை ஹேக் செய்தால் கூட யாரோ ஒருவரிடம் இருக்க கூடிய தகவலுடன் ஒத்துப்போகவில்லை என்றால் கூட அந்த பண பரிமாற்றம் நடைபெறாது.

 


பிட்காயின் உருவாவது எப்படி ? ஏதேனும் கட்டுப்பாடுகள் உள்ளனவா?

 

பிட்காயின் “mining ” என்கிற ஒரு வழிமுறைப்படி  உருவாக்கப்படுகிறது .
பிட்காயின் உருவாக்கியவர்கள் அதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் . அதன்படி 21 மில்லியன் பிட்காயின்களை மட்டுமே உருவாக்கிட முடியும் .

மேலும் தற்போது வரை 12 மில்லியன் பிட்காயின்கள் உருவாக்கப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள் . பிட்காயின் உருவாகும் அளவினை தானாக கட்டுப்படுத்திட  அல்காரிதம் [Self Executing Program] அதற்குள்ளேயே உள்ளது .

பிட்காயின் இரண்டு வழிகளில் உருவாக்கப்படுகிறது.

Mining மூலமாக உருவாவது என்னவென்றால், ஒவ்வொரு முறை பண பரிமாற்றம் நடைபெறும் போதும் தானாகவே செயல்படக்கூடிய Program உதவியுடன் கடினமாக ‘Puzzle’ ஒன்று உருவாகும். அதனை முதலில் கண்டுபிடிப்பவர்களுக்கு rewards வழங்கப்படும்.

அதன்படி தொடங்கப்பட்டபோது 2009 இல் பிட்காயின் ரிவார்டு 50 வழங்கப்பட்டது . அது தற்போது 12.5 என்கிற அளவில் தற்போது குறைந்துவிட்டது .ஒரு பிட்காயினின் மதிப்பு சுமார் 7 ஆயிரம் டாலர்கள் . இந்தியமதிப்பில் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகம் . இதனால் பிட்காயின் தனது முடிவான 21 மில்லியனை 2140 இல் எட்டும் என கணித்திருக்கிறார்கள் .

 


பிட்காயின் “mining ” என்றால் என்ன?

 

தங்கத்தை சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுப்பதற்கு “mining என்றுதான் பொருள் . அதனைபோலவே புதிய பிட்காயின்களை உருவாக்குவதற்கான செயல்முறைக்கு பெயர் “மைனிங் ” .

ஒருநபரோ அல்லது ஒரு குழுவோ யார் வேண்டுமானலும் இந்த மைனிங்கில் ஈடுபடலாம் . அதன்படி அவர்கள் குறிப்பிட்ட கணித புதிர்களை கண்டுபிடித்து விடுவதன் மூலமாக சில பிட்காயின்களை பரிசாக பெறலாம் .

 

Bitcoin_Transaction_Visual [Wikipedia]
ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல , ஒருவர் பிட்காயினை அனுப்பிடும் போது (அந்த நேரத்தில் வேறொருவர் அனுப்பினாலும் ) அனைத்து தகவல்களும் ஒரு block (பாதுகாக்கப்பட்ட  பெட்டி ) ஆக அனுப்பப்படும் . அந்த ப்ளாக்கை miners என அழைக்கப்படுவபர்கள் அதிக திறனுடைய கணினியின் வாயிலாக குறிப்பிட்ட சாப்ட்வேர் ஒன்றினை பயன்படுத்தி திறந்து அதனை ஒரு ஹாஷ் (hash) ஆக மாற்றுவார்கள் .

 

அந்த ஹாஷ் என்பது sequence of code . இந்த hash உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல , அதற்காக  அதிக திறன் கொண்ட கணினிகளும் , கிராபிக்ஸ் கார்டுகளும் , அவற்றை இயக்க அதிக மின்சாரமும் பயன்படுகிறது . ஒரே நேரத்தில் பலர் hash உருவாக்கத்தில் ஈடுபடுவதால் இதில் கடுமையான போட்டி நிலவுகின்றது . இதில் யார் வெற்றிபெற்று முதலாவதாக வருகிறார்களோ அவர்களுக்கு 2009 இல் 50 பிட்காயின் (தற்போது 12.5 பிட்காயின்) பரிசாக வழங்கபடுகிறது .

 


பிட்காயினின் மதிப்பை நிர்ணயிப்பது யார்?

 

தங்கத்தின் விலையை நிர்மாணிப்பது எது என்பதற்கான விடையே இதற்கான விடையும்  . ஆம் தங்கத்திற்க்கான தேவை , அதன் மீதான நம்பிக்கை , மக்களின் வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும்போது அதன் விலை அதிகரிக்கின்றது அல்லவா அதனைபோலவே தான் பிட்காயின் விசயத்திலும் நடக்கிறது .

 

21 மில்லியன் பிட்காயின்கள் மட்டுமே இருக்கும் என அதன் எல்லை தெரிந்துவிட்டதனால் அதனை வாங்க பலரும் விரும்புகிறார்கள் . அதற்கான தேவை அதிகரித்தபடியால் அதன் விலை கடுமையாக உயர்ந்துகொண்டிருக்கிறது .

 


பிட்காயினை வாங்குவது எப்படி? | How to buy Bit Coin?

 

பிட்காயினை “mining ” மூலமாக உருவாக்க முடியும் அல்லது பிறரிடமிருந்து பணம் கொடுத்து விலைக்கு வாங்கலாம் . அதற்கான இணையதளங்கள் நிறைய இருக்கின்றன .

 

  • Coinbase.com
  • Coinmama.com
  • Cex.io
  • Bitstamp.net
  • Paxful.com
  • Xcoins.io
  • Localbitcoins.com
  • Coinatmradar.com

 


பிட்காயினை வாங்கலாமா ?

 

பிட்காயினை வாங்க வேண்டாம் என RBI மற்றும் இந்திய அரசு கூறிவந்தாலும் பலர் இதனை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள் . இதனை வாங்கலாமா என கேட்டால் ? பங்குசந்தையில் பணம் போடுவது எவ்வளவு ஆபத்தானதோ அதனை போலவே ஆபத்தானது பிட்காயின் உள்ளிட்ட க்ரிப்டோ கரன்சிகள்  .

ஆனால் அவற்றிற்க்கான நம்பகத்தன்மை அனைவரிடத்திலும் அதிகரிப்பதால் அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது என்பதும் உண்மை .உதாரணத்திற்கு  ஒருவேளை இந்தியாவின் பொருளாதரம் பாதிக்கப்பட்டு  இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்தால் நீங்கள் பிட்காயினை வைத்து இருந்தால் அமெரிக்கா சென்று டாலராக மாற்றி வாழ்க்கையை தொடங்கலாம் .

ஆகவே போனாலும் நஷ்டமில்லை என்கிற அளவில் முதலீடு செய்து பார்க்கலாம் .

உலகின் அடுத்த கரன்சியாக மாறப்போவது கிரிப்டோகரன்சிதான் .

இந்திய ரிசர்வ் வங்கி பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் நம்பகத்தன்மை அற்றவை என்பதனால் அதில் இந்தியர்கள் முதலீடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது


TECH TAMILAN

Exit mobile version