தமிழக காவல்துறை “Kavalan – SOS” என்ற மொபைல் ஆப் ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தற்போது ஆபத்து காலங்களில் நாம் அழைத்திடும் 100 என்ற சேவையில் வழங்கப்படுவதை காட்டிலும் துரிதமான சேவை உங்களுக்கு “Kavalan – SOS” ஆப் மூலமாக கிடைக்கும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்காக சிறப்பான பணியாளர்களை கொண்ட 24/7 சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
Download Here
Android : https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos
Released on May 2018 but People don’t get awareness of this App
iPhone : https://itunes.apple.com/us/app/kavalan-sos/id1388361252?mt=8
Why Kavalan – SOS App Introduced?
இந்த வீடீயோவில் ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் பின்தொடருகின்றனர். அந்த பெண் உடனடியாக 100 என்ற எண்ணிற்கு அழைக்கிறார். அந்த பெண் சரியான இடத்தை குறிப்பிட்டு காவல்துறையினரிடம் சரியாக சொல்ல உடனடியாக நடமாடும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பெண் மீட்கப்படுகிறார்.
ஒருவேளை அந்த பெண் போலீசாரிடம் புகார் கூறுவதை அறிந்து குற்றவாளிகள் அந்த பெண்ணை தங்கியிருந்தால்?
அந்த பெண்ணுக்கு தான் இருக்கும் இடம் குறித்த சரியான தகவல் தெரியாமல் போயிருந்தால்?
இந்த இரண்டில் எது நடந்திருந்தாலும் அந்த பெண்ணுக்கு உதவி சரியான நேரத்தில் கிடைத்திருக்காது அல்லவா?
இங்குதான் ‘Kavalan – SOS‘ ஆப் பயன்படுகிறது.
How ‘Kavalan – SOS’ increase the possibility of Safety?
‘Kavalan – SOS’ ஆப்பினை உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் உங்களது homepage இல் தோன்றிடும் SOS என்கிற பட்டனை 5 நொடிகள் தொடர்ந்து அழுத்தினால் போதும் உங்களது மொபைல் ஆப் இல் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்ற தகவல் அனுப்பப்படும். அதோடு சேர்த்து உங்களது மொபைலில் இருக்கின்ற GPS மூலமாக நீங்கள் இருக்கின்ற துல்லியமான தகவலும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். இன்னும் கூடுதலாக உங்களது மொபைலின் பின்பக்க கேமரா தானாக வீடீயோவை எடுத்தும் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். ஆகையால் ஆபத்தான சூழலில் நீங்கள் சத்தம் போடாமலே போலீசாரின் உதவியை உடனடியாக பெற முடியும்.
How to install ‘Kavalan – SOS’ app in your mobile phone?
Page 1 :
> உங்களது மொபைல் எண் ,உங்களது பெயர், மாற்று எண் ஆகியவற்றை பதிவிடவும்
Page 2 :
> பிறந்த தேதி, உங்களுடைய முகவரி, பனி செய்யும் முகவரி இருந்தால், மின்னஞ்சல் இருந்தால் பதிவிடவும்.
> Sign Up
> உங்களது எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அதனை பதிவிடவும்
> Manage your emergency contacts : மூன்று முக்கிய நபர்களின் மொபைல் எண்களையும் உறவு முறைகளையும் பதிவிடுங்கள்
> உங்களுக்கான கணக்கு திறக்கப்படும்
> உங்களது ஆப் முகப்பில் SOS என்ற பட்டன் தோன்றும்.
> ஆபத்து காலங்களில் நீங்கள் அதனை தொடர்ந்து 5 நொடிகள் அழுத்தினால் நீங்கள் ஆபத்தில் இருக்கும் செய்தி தமிழக அரசின் தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக அனுப்பப்படும்.
Note : App ஐ முதல்முறையாக ஓபன் செய்திடும் போது permission ஐ கேட்கும் தவறாமல் அனைத்திற்கும் Ok கொடுத்திடுங்கள்.
காவல்துறையினரின் மிக சிறந்த சேவையினை வழங்கக்கூடிய இந்த App குறித்த தகவல்கள் போதுமானவரை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆகவே சில ஆயிரம் பேர் மட்டுமே இந்த App ஐ தரவிறக்கம் செய்துள்ளனர். நீங்கள் படித்துவிட்டு தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதோடு நில்லாமல் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
TECH TAMILAN