Artificial Intelligence vs Machine Learning – தன்னிடம் இருக்கக்கூடிய தரவுகள் (Data), பெறும் அனுபவங்கள் (Future Experience) அனைத்தையும் வைத்துக்கொண்டு இயந்திரம் தானாகவே முடிவெடுக்க கூடிய செயல்பாடுதான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence).
தற்போதைய தொழில்நுட்ப உலகில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) இரண்டும் மிக மிக முக்கியமான விசயங்கள். பெரும்பான்மையானவர்கள் இரண்டும் ஒன்று தான் என எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல, இரண்டும் வெவ்வேறானவை. அதனை தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்றால் என்ன? தமிழில் விளக்கம்
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கங்களை தெரிவிக்கிறார்கள், அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
மனிதனை போலவே முடிவெக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று பெயர்.
காட்சி உணர்தல் (visual perception), பேச்சின் தன்மை (speech recognition) , முடிவெடுக்கும் திறன் (decision-making), மொழி பெயர்ப்பு (translation between languages) இந்த திறன்களை கொண்டு மனிதர்கள் செய்கின்ற வேலையினை ஒரு கணினி செய்தால் அது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்.
சாதாரணமாக சொல்லவேண்டுமானால் “மனிதனை போல இயங்கும் ஓர் இயந்திரம்” தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்.
செயற்கை நுண்ணறிவு அல்லது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்பதனை பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்களை பொறுத்து இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
- Vertical AI
- Horizontal AI
Vertical AI In Tamil
Vertical AI என்பது மிகவும் எளிமையான ஒரேயொரு பணியினை செய்கின்ற இன்டெலிஜென்ஸ் கணினி. ஒரேயொரு பணியினை திரும்ப திரும்ப செய்கின்ற பணிக்கு இவ்வகை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் சிறப்பாக அந்த வேலையை செய்யும். உதாரணத்திற்கு கால அட்டவணையை தயாரிக்கின்ற வேலை போன்றவற்றை இவை செய்யும்.
Horizontal AI In Tamil
Horizontal AI என்பது பல்வேறு வேலைகளை செய்யும் திறனுள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். கார்டனா (Cortana) , சிரி (Siri), and அலெக்ஸா (Alexa) போன்றவை சில உதாரணங்கள். இவற்றைக்கொண்டு பல பணிகளை செய்துகொள்ள முடியும். உதாரணத்திற்கு “சென்னையில் வெயில் எவ்வளவு?” எனவும் கேட்கலாம் “Call Raja?” எனக்கூறி நண்பருக்கு அழைப்பையும் மேற்கொள்ள வைக்க முடியும்.
இந்த வகை இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் நமது குரலை அறிந்து, நமது உச்சரிப்பை உணர்ந்து, இணையத்தில் இருந்து நமக்கான தகவலை பெற்று செயல்படுகிறது
Machine Learning In Tamil
Machine Learning என்பதற்கான விளக்கம் அதன் பெயரிலேயே இருக்கிறது. ஆம் ஒரு கணினியில் இருக்கக்கூடிய மென்பொருளானது (Computer Algorithm) இன்னொரு புரோகிராமை அனுபவத்தின் மூலமாக தானாகவே கற்றுக்கொள்ள அனுமதிக்கும் தொழில்நுட்பம் தான் மெஷின் லேர்னிங் (Machine Learning) என அழைக்கப்படுகிறது.
Machine learning is the study of computer algorithms that allow computer programs to automatically improve through experience.
Machine Learning என்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் இன் ஒரு பகுதி. ஓர் இயந்திரம் தானாக கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் போதுதான் AI இன் இறுதி வடிவத்தை பெற முடியும்.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து வைத்திருப்பது இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பற்றி அறிந்துகொள்ள வருகிறவர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும்.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து வைத்திருப்பது இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பற்றி அறிந்துகொள்ள வருகிறவர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும்.