ஏற்கனவே இருக்கின்ற ஆடியோவிற்கு ஏதுவாக வாயசைத்தோ அல்லது நடித்தோ வீடியோவாக மாற்றி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுகிற ஆப் தான் டிக் டாக். கிட்டத்தட்ட மொபைல் வைத்திருக்கும் அனைத்து இளைஞர்களின் ஆப் லிஸ்டில் கண்டிப்பாக டிக் டாக் இருக்கும். உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் ஆப்களின் வரிசையிலும் டிக் டாக் இடம்பிடித்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் வாய்ப்பு கிடைக்காத பலரின் நடிப்பு திறன்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது, வாய்ப்புகளை பெற்று இருக்கிறது, பலர் டிக்டாக் ஆப் மூலமாக சம்பத்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
எந்தவொரு விசயத்தையும் அளவுக்கு அதிகமாக செய்திடும் போது அதனால் சில விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அந்த வகையில் டிக்டாக் மிகவும் ஆபத்தான ஆப் என்கிறார்கள் மன நல மருத்துவ நிபுணர்கள்.
அவர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள்? எந்த நிலையில் டிக்டாக் ஆபத்தான ஆப்? நீங்கள் இப்போது எந்த நிலையில் இருக்குறீர்கள்?
எத்தனை லைக் வாங்குகிறோம் என்பதில் தனது தகுதியை நிர்ணயித்து கொள்வதே ஆபத்திற்கு காரணம்
சிலர் ஒரு புதிய ஆப் வரும்போது அதனை பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை மறந்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களாக நீங்கள் இருந்தால் கவலைப்படவேண்டியது இல்லை.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
யாரெல்லாம் கவலைப்பட வேண்டும்?
நீங்கள் ஒரு வீடியோவை பதிவேற்றுகிறீர்கள். அது நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பீர்கள்? நமது வீடியோவை பார்க்கும் நபர்கள் எத்தனை பேர், லைக் போடும் நபர்கள் எத்தனை பேர், Fans ஆக follow செய்கிறவர்கள் எத்தனை பேர். இவற்றை வைத்துதான் உங்களின் தகுதியை தீர்மானித்துக்கொள்கிறீர்கள். உண்மை தானே?
யாரெல்லாம் டிக்டாக் ஆப் குறித்து பயப்பட வேண்டும் என்பதை பாப்போம்,
>> நண்பர்கள் அதிக லைக்குகள் வாங்கிவிட்டார்கள், அதனை தாண்டி லைக்குகள் வாங்கியே ஆகவேண்டும் என்பதற்க்காக எந்த நிலைக்கும் சென்று, எந்த ஆபத்தான நிலைக்கும் சென்று வீடியோ எடுத்தே ஆகவேண்டும் என எண்ணுவோர்
>> எனது வீடியோவிற்கு ஏன் அதிக லைக்குகள் வரவில்லை என ஏங்குவோர்
>> தினம் ஏதேனும் ஒரு வீடீயோவை பகிர்ந்தே தீர வேண்டும் என துடிப்போர்
> எந்தவொரு முக்கிய வேளையில் இருந்தாலும் அதுகுறித்து கவலை படாமல் டிக்டாக் வீடியோ எடுக்க நேரம் ஒதுக்குவோர் கண்டிப்பாக பயப்படவேண்டும்.
எப்படி செல்பி எடுக்கும் கலாச்சாரம் அதிகமாகி உயிர் இழப்புகள் வரை நடந்தனவோ அதனை போன்றே டிக்டாக் ஆப்பிற்கு அடிமையானவர்கள் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அதிக லைக் போன்றவற்றிற்கு அடிமையாகி எந்த அடிமட்டத்திற்கும் [ஆபாசமாக] சென்று வீடியோவை பகிரும் கலாச்சாரம் உருவாகியிப்பதும் உண்மையே.
——————————————————————————————
Advertisement :
——————————————————————————————
டிக்டாக் ஆப்பிற்கு அடிமையாவதை தவிர்ப்பது எப்படி?
>> அடுத்தவர்கள் லைக் போட்டால் நீங்கள் திறமைசாலி என்றும், நம்மை அனைவரும் விரும்புகிறார்கள் என்றும் குஷியாகிவிடுவதும், லைக் போடாவிட்டால் தனக்கு திறமை இல்லை என்றோ இந்த சமூகம் உங்களை ஏற்க மறுக்கிறது என்றோ எண்ணி விரக்தியான மனநிலைக்கு செல்வதை விட்டுவிடுங்கள். இரண்டு எண்ணங்களுமே ஆபத்தானவை.
>> டிக்டாக் மட்டுமல்ல, இதுபோன்ற எந்த ஆப்களிலும் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்துவிடுங்கள்
>> தினசரி வேலையாக மாற்றிக்கொள்ளாதீர்கள்
>> ஒன்று இல்லாமல் போனால் அதற்காக கவலைப்படும் அளவிற்கு அல்லது ஏங்கும் அளவிற்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்ல விசயம்.
>> தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது, பப்ஜி , டிக்டாக், நெட்டபிலிக்ஸ் என இளைஞர்களின் நேரங்களை அவர்களுக்கு தெரியாமலே கொள்ளையடிக்கும் ஆப்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. சில ஆப்கள் நமது நேரத்தை திருடுவதோடு அல்லாமல் நமது மன நலனையும் பாதித்து விடுகிறது. அதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளாமல் குறைந்த அளவில் புரிதலோடு பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது.
உங்களது கருத்துக்களை பதிவிடலாம்.
TECH TAMILAN