Site icon Tech Tamilan

எப்போது இறப்போம்? – இதைச்சொல்ல ஆப்கள் விரைவில் வரப்போகின்றன

எப்போது இறப்போம்? - இதைச்சொல்ல ஆப்கள் விரைவில் வரப்போகின்றன

எப்போது இறப்போம்? - இதைச்சொல்ல ஆப்கள் விரைவில் வரப்போகின்றன

எப்போது இறப்போம்? - இதைச்சொல்ல ஆப்கள் விரைவில் வரப்போகின்றன

When you will die?

இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்ற பழமொழி இருந்தாலும் கூட ஒவ்வொருவர் மனத்திற்குள்ளும் தேடப்படுகிற கேள்வியாக இருப்பது என்னவோ “எப்போது இறப்போம்?” என்பதுதான். கூடிய விரைவில் இதை கணித்துச்சொல்ல ஆப்கள் வரவிருக்கின்றன.


ஒரு குழந்தை பிறக்கப்போகும் தினத்தை கணித்துக்கூற முடிந்த மருத்துவர்களால் அந்த மனிதன் எப்போது இறப்பான் என கணித்துக்கூற முடியாது. காரணம், இறப்பு என்பது மாறுபட்ட காரணங்களால் வரக்கூடியது. ஒரு மனிதனுடைய இறப்பை அவன் பிறந்த இனம், வாழும் சூழல், உண்ணும் உணவு, பழக்கவழக்கம் என பல்வேறு காரணிகள் தான் தீர்மானிக்கின்றன. [இதுதவிர விபத்து போன்ற காரணங்களால் கூட மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனை எவராலும் கணித்துக்கூற முடியாது]. நாம் இங்கே இறப்பு என குறிப்பிடுவது உடலுக்கு ஏற்படுகிற மரணம். வரக்கூடிய தொழில்நுட்ப மாற்றங்களினால் ஒருவருடைய உயிரியல் வயது [biological age] என்னவென்பதனை கணித்துக்கூறப்போகும் அப்ளிகேஷன்கள் வரவிருக்கின்றன. எப்படி இந்த அப்ளிகேஷன்கள் செயல்படுகின்றன? இதனால் வரப்போகும் நன்மை தீமை என்னவென்பதை பார்ப்போம்.

ஒருவர் இறப்பை எப்படி கண்டுபிடிக்கும் இந்த அப்ளிகேஷன்கள்

இது ஜாதகம் பார்ப்பது போன்று கணித்துக்கூறும் வேலை அல்ல. முற்றிலும் தகவல்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் முடிவுகளை கண்டுபிடிக்கும் முறையில் தான் இந்த அப்ளிகேஷன்கள் செயல்படும். உடல் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்வதைத்தான் மரணம் என்கிறோம். உடல் ஒரு இயந்திரம் அதன் செயல்பாடும் கணிதத்திற்கு உட்பட்டவையே. உடலின் செயல்பாடு ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும், இதுதான் ஒரு உடலின் வயதினை கணக்கிடுவதில் மிகப்பெரிய சிக்கலாக இருந்துவந்தது. ஆனால் தற்போது முன்னேறிக்கொண்டு இருக்கும் தொழில்நுட்பங்களான ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களின் மூலமாக ஒரு உடலின் வயதை கணித்துக்கூறுவது முடிந்த ஒன்றுதான் என கூறுகிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். இந்த கோட்பாடு பல காலமாகவே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

 

ஒருவர் எந்த தினத்தில் அல்லது எந்த வருடத்தில் இறக்கப்போகிறார் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. காரணம், தகவல் பற்றாக்குறை தான். ஒருவர் பிறந்த இனம், பாலினம், வயது, அவருக்கிருக்கும் பழக்கவழக்கம், சூழல், வாழும் இடம், உடல் பிரச்சனைகள், அன்றாட உடல் செயல்பாடு என்பவை கிடைக்கின்ற பட்சத்தில் ஒரு உடலுக்கான வயதை கணிக்க முடியும். உதாரணத்திற்கு ஒருவர் பிறந்து 30 ஆண்டுகளே ஆகி இருந்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக மது அருந்துகிற பழக்கம் இருந்தால் அவர் உடலின் வயது 40 என மருத்துவ உலகில் சொல்வார்கள். இப்படித்தான் ஒரு உடலின் வயதை தொழில்நுட்பத்தின் உதவியோடு கணித்துக்கூறப்போகும் அப்ளிகேஷன்கள் வரவிருக்கின்றன.

தகவல் எந்த அளவுக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு கிடைக்கக்கூடிய பதில் துல்லியமானதாக இருக்கும். தற்போது பொதுமக்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் போன் என பலவற்றை பயன்படுத்துகிறார்கள். அவற்றின் மூலமாக தகவல்களை பெறுவது எளிமையாக மாறிவரக்கூடிய சூழலில் ஒருவரது உடலின் வயதை [life expectancy] கணித்துக்கூற முடியும் என்பது சாத்தியமே.

நன்மையா தீமையா?

இந்தவகை அப்ளிகேஷன்கள் வந்துவிட்டால் நமக்கு நன்மையையும் இருக்கிறது அதேசமயம் தீமையும் இருக்கிறது. ஒருவர் தனது உடலின் ஆயுள்காலத்தை அறிந்துகொள்வது நன்மையே. உதாரணத்திற்கு நாம் வைத்திருக்கும் வாகனத்தின் பாகங்களை கண்காணித்து இந்த வாகனம் இத்தனை நாட்கள் பழுதில்லாமல் ஓடும் என கூறினால் திடீரென நிற்பதற்கு முன்னதாகவே நாம் பழுதுபார்த்து வைத்துக்கொள்வோம் அல்லவா. அது போன்றதொரு நன்மைதான் தனி நபர்களுக்கு ஏற்படும். அதேபோல அரசாங்கம் என்ன பிரச்சனை மக்களுக்கு முதன்மையானதாக இருக்கிறது என்பதை அறிந்து அதற்கேற்ற திட்டங்களை வகுக்க முடியும்.

 

இவை நன்மையாக இருந்தாலும் கூட மனிதர்களுக்கு மன அழுத்தத்தை இந்த முடிவுகள் தந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல இன்சூரன்ஸ் கம்பெனிகள் உள்ளிட்டவை இந்த தகவலை பெற முடிந்தால் அவ்வளவு தான். வயது குறைந்த உடலை கொண்டிருப்பவர்களுக்கு பாலிசி என்பதே கிடைக்காது. அவர்கள் மூன்றாம் பட்சமாக நடத்தப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

 

மனித உடலின் வயதை கண்டுபிடிக்கும் அப்ளிகேஷன்களை உருவாக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் demographers, health scientists, data scientists, IT specialists, programmers, medical professionals and statisticians போன்ற பல்வேறு நிபுணர்களும் சேர்ந்து செயலாற்றிட வேண்டிய தேவை இருக்கிறது. அதேபோல மிகவும் துல்லியமான அதே சமயம் அதிகப்படியான தகவல்களை சேகரிக்க வேண்டிய அவசியமும் இந்த அப்ளிகேஷனை வடிவமைக்க தேவைப்படுகிறது. இவை சாத்தியமாகும் சூழல் நெருங்கிவந்துகொண்டே இருக்கிறது. ஆகவே விரைவில் ஒரு மனித உடல் எப்போது இறப்பை சந்திக்கும் என்ற முடிவை கணித்துக்கூறும் அப்ளிகேஷன்கள் வந்துவிடும் என்பதே எதார்த்தமான உண்மை.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version